17 வயது நடிகையுடன் ஜோடியாக நடிக்க மறுத்த நடிகர் யார் தெரியுமா?

Updated On 07/09/2021

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இவர் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் உப்பென்னா என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானார். இப்படத்தில் கதாநாயகி கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாகவும், வில்லனாகவும் நடித்தார்.

இதையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மகளாக நடித்த ஒருவருடன் ஜோடியாக நடிக்க முடியாது என்று விஜய் சேதுபதி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் படக்குழு வேறு நடிகையை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது