இந்த ‘5’ உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும்

Updated On

நம்மில் பலருக்கு, குறிப்பாக, பெண்கள் வீட்டில் மீதமான உணவுகளை பிரிட்ஜில் வைத்து அதை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாது வேலைக்கு செல்லும் பெண்கள் சில உணவுகளை நேரம் கிடைக்கும்போது செய்து அதை பிரிட்ஜில் சேமித்து வைத்துக்கொண்டு தேவையான போது எடுத்து சூடுபடுத்தி சாப்பிடுகின்றனர். ஆனால் இது எவ்வளவு பெரிய உடல் பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவது இல்லை. முக்கியமாக குழந்தைகளுக்கு பிரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது, புற்று நோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் விஷயத்தில், மிகவும் கவனம் தேவை. சில உணவுகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு, பின்னர் சூடாக்கி சாப்பிடுவதால், ஊட்டச்சத்து, சுவை ஆகியவற்றை இழப்பதோடு, பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

இந்த “ஐந்து” உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடவே கூடாது

1. கீரை

கீரையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படக் கூடும். மீண்டும் சூடாக்கப்பட்ட பிறகு அதில் உள்ள நைட்ரேட்டுகள் வேறு ஒரு பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

2. உருளைக்கிழங்கு

பொதுவாக மக்கள்  அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இது சுவையானதாக இருப்பதோடு, தயாரிக்க எளிது என்பதால் பெரும்பாலானோரின் தேர்வாக உள்ளது. அதை பிரிஜில் வைத்து மீண்டும் சூடாக்கும் போது அதில் அரிய வகை நுண்ணுயிரிகளின் வளர்ச்சி ஏற்படுகிறது. அதை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது செரிமான அமைப்பில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

3. முட்டை

முட்டைகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் அதிக அளவு புரோட்டீன் காணப்படுகிறது. ஆனால், இதை சமைத்த உடன் உட்கொள்ள வேண்டும். பொரித்த அல்லது வேகவைத்த முட்டையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும், இதன் காரணமாக வயிற்று வலி உண்டாகலாம்.

4. சிக்கன்

முட்டையைப் போலவே, சிக்கனிலும் புரதம் நிறைந்துள்ளது. மேலும் சிக்கனை மீண்டும் சுட வைத்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனையும் ஏற்படும். எனவே அதை சூடாக்கிய பிறகு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

5. சாதம்

பெரும்பாலானோர் இரவின் மீதமுள்ள சாதத்தை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. பழைய சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது என்பது உடலுக்கு நன்மை தரும். ஆனால், பழைய சாதத்தை பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடாக்குவதன் மூலம், உணவு விஷமாகும். ஆம், அதனால் புட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது. அரிசியில் பைசில்லஸ் செரஸ் (bacillus cereus) எனப்படும் பாக்டீரியாக்கள் இருக்கும். அரிசியை சமைக்கும்போது இந்த பாக்டீரியா அழிக்கப்படுகிறது. ஆனால் அரிசி குளிர்ந்தவுடன், இந்த கிருமிகள் மீண்டும் வேகமாக வளர ஆரம்பிக்கும். எனவே ஒரு நபர் அவற்றை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால், அந்த உணவு விஷமாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore