இளநீர் குடிப்பதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா?

Updated On
when to drink Coconut Water

தற்போதைய நவீன உலகத்தில் நமக்கு பல்வேறு விதமான செயற்கை குளிர்பானங்கள் கிடைத்த போதிலும் இயற்கையின் மடியில் இருந்து நேரடியாக எந்தவித கலப்படமும் இல்லாமல் நம் கைக்கு வருவது இளநீர் மட்டுமே.

இளநீர் குடிப்பதற்கு மிகவும் உற்சாகமூட்டும் பானம் மட்டுமல்ல அது நம்முடைய உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகளையும், மனதிற்கு புத்துணர்ச்சியையும் வாரி வழங்குகிறது.

இந்தக் கட்டுரையில் இளநீர் குடிப்பதன் மூலம் கிடைக்கும் அதிசய பலன்களையும், இளநீரை எந்த தகுந்த நேரத்தில் குடித்தால் அதன் முழு பயன்களையும்  நம் உடலுக்கு கிடைக்கச் செய்யலாம் என்பதை முழுவதுமாக ஆராய்வோம்.

கோடை காலம் என்றாலே இப்பொழுதெல்லாம் நாம் நினைவிற்கு வருவது இளநீரும் தர்பூசணியும் , நுங்கும் தான்.  அதிலும் பொள்ளாச்சி இளநீர் என்றாலே நம் மனதில் தோன்றும் உணர்விற்கு எல்லையே இல்லை.

இதில் கலோரிகள்  குறைவாக உள்ளது. உடனடி சக்தியை உடம்பிற்கு வழங்குகிறது. மற்றும் இயற்கையான பொட்டாசியம் போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளது.

இரவு, பகலில் எப்போது வேண்டுமானாலும் புதிய இளநீரை பருகலாம் என்றாலும்,  தகுந்த  நேரத்தில் அதைக் குடிப்பதால் நிச்சயமாக நாம்  பெறக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக  பெற முடியும்.

இளநீர் குடிக்க சரியான நேரம் எது?

அதிகாலை நேரம் வெறும் வயிற்றில்

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இளநீரை குடிக்கலாமா என்பது பலருக்கு எழும் சந்தேகம். இதில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. ஒரு சாரார் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்கிறார்கள் மற்றொரு சாரார் இளநீரை வெறும் வயிற்றில் காலையில் குடிக்க கூடாது என்று கூறுகிறார்கள்.

இந்த இரு வேறு கூட்டில் நாம் எந்த கருத்தை நம்புவது. அதற்கு முதலில் இளநீரில் உள்ள சத்துக்களை பற்றி நாம் அறிய வேண்டும். இளநீர் இனிப்பாகவும் குளிர்மையாகவும் இருந்தபோதிலும் அதில் அதிக அளவில் தாது உப்புக்கள் உள்ளன. அந்த இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கும் போது உங்களுக்கு அல்லது ஒரு சிலருக்கு வயிற்றில் எரிச்சல் ஏற்படலாம். ஆகவே வெறும் வயிற்றில் கொடுப்பதை விட அதற்கு முன்னர் வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்து நிரப்பலாம்.

சிறிது நேரம் கழித்து நீங்கள் புத்துணர்ச்சி தரும் இளநீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு எந்த ஒரு வயிற்று எரிச்சல் போன்ற தொந்தரவுகள் இருக்க வாய்ப்பு குறைவு.

 

காலை உணவுக்கு முன் மற்றும் பின்:

இளநீரில் அதிக அளவில் எலக்ட்ரோலைட்ஸ் இருப்பதால் அது உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை தருகிறது.

இளநீரை நீங்கள் காலை சாப்பிடுவதற்கு முன்னும் சாப்பிட்ட பின்னும் எடுத்துக் கொள்ளலாம் இதன் மூலம் அதன் முழுமையான சத்துக்கள் உங்கள் உடலில் உணவுடன் சேர்ந்து கடத்தப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் நீரிழப்பு மற்றும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுவதற்கு இளநீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

இரவு உணவுக்கு முன்:

இளநீரின் இனிமையான  மணம் ஒரு உளவியல் விளைவைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

இது மனதில் ஏற்படும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது, இதன் மூலம்  நமது இதயதுடிப்பை  அமைதி படுத்துகிறது. மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், உங்கள் மனதை அமைதிப்படுத்தவும் இளநீர் உதவுகிறது.

இரவு படுக்கைக்கு செல்லும் முன் சிறிது இளநீர் தண்ணீர்  குடிப்பதால் அனைத்து நச்சுகளையும் வெளியேற்றவும்.

உங்கள் சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவும்.  இதனால் நோய்த்தொற்றுகள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

 

உடற்பயிற்சிக்கு முன் அல்லது பின்:

கடுமையான உடற்பயிற்ச்சி செய்வதால் உடலில் அதிக அளவு வியர்வை வெளியேறுவதால், உடலில் நீர் இழப்பு ஏற்படுகிறது. மேலும் உடலில் சோர்வு ஏற்படுகிறது.

இளநீரை குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றம் செய்வதற்கும், பயிற்சிக்கு முன் ஆற்றலை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. ஒ  இளநீர் பருகினால் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை நிரப்ப உதவுகிறது. இளநீர் குடிப்பது சோர்வு மற்றும் சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சிறந்த ஆற்றல் அதிகரிக்கும் பானங்களில் ஒன்றாகும்.

மது அருந்தியபின்

மது அருந்தியபின் ஏற்படும்  தலைவலியில் (HangOver)  இருந்து விடுபட இளநீர் சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும்.
மது உடலில்  நீரிழப்பை ஏற்படுத்துகிறது, இது மறுநாள் காலையில் தலைவலி மற்றும் குமட்டல் உணர்வுக்கு வழிவகுக்கும். இதை சரிசெய்ய இளநீர் உதவுகிறது.

இளநீரில் உள்ள அதிசிய சத்துக்கள்

பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் சி, கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இளநீரில் நிரம்பியுள்ளன.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore