கிரகணம் என்றால் என்ன ?

Updated On

கிரகணம் (eclipse) என்பது வானியல் பொருள் ஒன்று வேறொரு பொருளின் நிழலினாலோ அல்லது வேறொரு பொருள் இப்பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையில் செல்லுவதாலோ தற்காலிகமாக மறைக்கப்படும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும்.

கிரகணம் என்ற சொல் பெரும்பாலும் நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும் போது நிகழும் சூரிய கிரகணத்தையோ, அல்லது நிலா பூமியின் நிழலினுள் செல்லும் போது ஏற்படும் சந்திர கிரகணம் ஆகியவற்றை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், பூமி-சந்திரன் தவிர்ந்த வேறு தொகுதிகளுக்கும் கிரகண நிகழ்வு பயன்படுத்தப்படுகிறது: எடுத்துக்காட்டாக, கோள் ஒன்று தனது நிலாக்களில் ஒன்றின் நிழலினுள் செல்லுவது, நிலா ஒன்று தனது கோளின் நிழலினுள் செல்லுவது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இரும விண்மீன் தொகுதி ஒன்றிலும் இவ்வாறான கிரகணம் ஏற்படும்.

சூரிய கிரகணம் | Solar Eclipse in Tamil

சூரிய கிரகணம் எப்போது தோன்றும் என்றால் சூரியனின் மையப்பகுதி மட்டும் நிலவினால் மறைக்கப்பட்டு, விளிம்புப்பகுதி மறைக்கப்படாமல் இருக்கும் போது, ஒரு ஒளி-வளையம் போன்ற தோற்றத்துடன் சூரியன் காட்சியளிக்கும்; இதுவே சூரியனின் கங்கணகிரகணம் (annular eclipse) அல்லது வலயக்கிரகணம் அல்லது வளைய மறைப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சூரிய கிரகணத்தின் (Solar Eclipse) (அனலி மறைப்பு) ஒரு வகையாகும்.

சூரிய கிரகணம் நான்கு வகைப்பட்டவை. அவை:

  1. முழு கிரகணம் (அ) முழு மறைப்பு
  2. பகுதி கிரகணம் (அ) பகுதி மறைப்பு
  3. கங்கண கிரகணம் (அ) வலய மறைப்பு
  4. கலப்பு கிரகணம் (அ) கலப்பு மறைப்பு

சந்திர கிரகணம் | Lunar Eclipse in Tamil

நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். இது சூரியன், பூமி, நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும். இதனால் முழு நிலவில் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். கிரகணத்தின் வகை மற்றும் நீளம், நிலவின் இடம் அதன் சுற்றுப்பாதைகளில் எங்கிருக்கிறது என்பதைச் சார்ந்து இருக்கும்.

சந்திர கிரகணங்களின் வகைகள்

  1. புறநிழல் மறைப்பு (penumbral eclipse)
  2. பகுதியளவு சந்திர கிரகணம்
  3. செலனெலியன் or கிடைநிலை கிரகணம்


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore