உடலில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கொள்ளு

Updated On

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிக்கு ஏற்ப கொள்ளு உடலில் உள்ள கொழுப்பினைக் குறைக்க உதவுகின்றது.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு அதிக ஆற்றலையும், வலிமையையும் வழங்கக்கூடிய பயறு வகையைச் சார்ந்தது.

கொள்ளில் அதிக கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், புரதச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் அதிக நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட்டையும் கொண்டுள்ளது.

கொள்ளின் மருத்துவ பயன்கள்

சீரான செரிமானம் நடைபெற

கொள்ளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இது குடலில் வாழும் ஒட்டுண்ணிகளை அழித்து செரிமானம் சீராக நடைபெற பெரிதும் உதவுகிறது. மேலும் இது செரிமான மண்டலத்தில் உண்டாகும் வாயு மற்றும் அஜீரணத்தைக் குறைக்கவும் உதவுகின்றது.

எனவே காலையில் வெறும் வயிற்றில் கொள்ளினை உண்பதால் செரிமானப்பாதையை செரிமானத்திற்கு தூண்டி செரிமானம் நன்கு நடைபெற இது வழிவகுக்கிறது.

கண்சரிச்சலை குறைக்க

விழிவெண்படல அழற்சி உள்ளவர்கள் முதல் நாள் இரவு கொள்ளினை ஊற வைத்து பின் ஊற வைத்த நீரில் கண்ணினைக் கழுவ அழற்சி மற்றும் கண்எரிச்சல் சரியாகும்.

இப்படி இந்த ஊற வைத்த நீரை கொண்டு நாள் ஒன்றுக்கு மூன்று முறை கண்ணினை சுத்தம் சேய்வதால் அந்த நீரில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கண் எரிச்சலை குறைக்கும்

உடல் ஆரோக்கியத்திற்கு

கொள்ளில் உள்ள நார்ச்சத்தானது உணவு உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வினை உண்டாக்குவதுடன் உடல்எடை அதிகரிக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் சிறுகுடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றி சீரான உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் வழி ஏற்படுத்துகிறது. எனவே கொள்ளினை உண்டு ஆரோக்கியமான உடல் இழப்பினைப் பெறலாம்.

மாதவிடாய் பிரச்சினை சரியாக

மாதவிடாய் பிரச்சினையால் ஏற்படும் கொள்ளினை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப்போக்கை இதில் உள்ள இரும்புச்சத்து சரி செய்கிறது.

கொலஸ்ட்ராலை குறைக்க

இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைப்பதாக கொள்ளு பெரிதும் உதவுகின்றது.

மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் நரம்புகளில் ஒட்டிக் கொண்டு இரத்த ஓட்டத்தை தடை செய்து இரத்த அழுத்தத்தை உண்டாக்கிறது. முதல் நாள் இரவு ஊறவைத்த கொள்ளினை உண்ணும்போது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைக்கப்படும்.

மலச்சிக்கல் தடுக்க

உணவில் நார்ச்சத்து குறைபாடு, தண்ணீர் குறைபாடு, தாதுஉப்புகள் குறைபாடு, மனஅழுத்தம் ஆகியவற்றால் மலச்சிக்கலானது ஏற்படும்.

கொள்ளினை உண்ணும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்தானது மலச்சிக்கலைப் போக்குகிறது.

சருமபிரச்சினைகளுக்கு

கொள்ளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள், தாதுஉப்புக்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இது சருமத்தில் உண்டாகும் தடிப்புகள், கொப்புளங்கள் போன்றவற்றிற்கு ஊறவைத்த கொள்ளினை அரைத்து பூச நிவாரணம் கிடைக்கும்.

கொள்ளில் சருமத்தை தொற்றிலிருந்து பாதுகாக்க கூடிய பாக்டீரிய எதிர்ப்பு, பூஞ்ஞை எதிர்ப்பு பண்பு அதிகம் உள்ளது.

சளி மற்றும் காய்ச்சலுக்கு

சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு கொள்ளில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்பானது நிவாரணம் அளிக்கிறது.

கொள்ளானது உடலுக்கு வெப்பத்தினை வழங்குவதால் இது குளிர்காலத்துக்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது. மேலும் கொள்ளானது சீரான வளர்ச்சிதை மாற்றத்தையும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

நீரழிவு நோயாளிகளுக்கு

கொள்ளினை முறையாக தொடர்ந்து உண்ணும்போது அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் குறைத்து நீரழிவு நோயை குணப்படுத்தும்.

சிறுநீரகக் கற்களை வெளியேற்ற

சிறுநீரகக் கற்கள் கால்சியம் ஆக்ஸலேட்டுகளால் உருவாகின்றன. கொள்ளினை முதல் நாள் இரவே ஊறவைத்து தண்ணீரையும், கொள்ளினையும் அப்படியோ உண்ண சிறுநீரகக் கற்கள் வெளியேற்றப்படும்.

எச்சரிக்கை

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், அதிக பித்த உற்பத்தி உள்ளவர்கள், அல்சர் தொந்தரவு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore