உடைந்த எலும்புகள் உறுதி பெற உண்ண வேண்டிய உணவுகள்

Updated On

எலும்புகள் உள்ள விலங்குகளின் கூட்டமைப்பில் மனிதன் முதன்மையான இனம். உடலில் உள்ள உறுப்புகளில் விறைப்பானது, உடலுறுப்புக்களைப் பாதுகாப்பதற்கும், தாங்கி கொள்வதற்கும், உடல் இடத்துக்கு இடம் நகர்வதற்கும் ஆதாரமே எலும்புகள் தான். 270 எலும்புகளோடு பிறக்கும் ஒரு மனிதன் தன் முழு வளர்ச்சியை எட்டும் போது சின்ன சின்ன எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைவதால் 206 எலும்புகளாக மாறிவிடுகிறது.

எலும்புகளை பொறுத்தவரை அவைதான் உடலின் அத்தியாவசியமான, சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவற்றை உருவாக்குவதும், உடலுக்கு தேவையான பல கனிமங்களைச் சேமித்து வைப்பதும் ,அதுமட்டுமல்ல எலும்பில் 50 சதவீதம் நீர், 33 சதவீதம் தாது உப்புகள், 17 சதவீதம் மற்ற பொருட்கள் என கலந்து உள்ளது.

எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற தாதுக்கள் மற்றும் கரிமப்பொருட்கள் நிரம்பி உள்ளன. நமது உடல் நலத்துக்கு வேண்டிய கால்சியம் எலும்புகளில்தான் அதிகம் சேமிக்கப்படுக்கிறது.அமில-காரச் சமனிலையை ஒழுங்குபடுத்த உதவுவதும் எலும்புகள் தான். மேலும் எலும்புகள் தான் உடலின் பல சுரப்பிகள் இரத்தம் ஆகியவற்றில் கலந்திருக்கும் நச்சுக்களை சேகரித்து தன்னுள் வைத்துக்கொண்டு அதனால் வரும் பாதிப்புகளின் தாக்கத்தை குறைக்கிறது.

மொத்தத்தில் எலும்புகள் இல்லா மனிதன் கசக்கி போட்ட காகிதத்துக்கு சமம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எலும்புகள் வயதாக வயதாக பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறது. வயது மாற்றம் அதனால் வரும் இயல்பான எலும்பு தேய்மானம் தாண்டி நம் தவறான வாழக்கை முறை எலும்புகளில் எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வாழ்நாளில் பல ஊர்களுக்கும் ஓடி ஆடி திரிந்த மனிதனை ஓரிடத்தில் முடக்கி போடுகிறது. ஆகவே அப்படிப்பட்ட எலும்புகள் பலம் பெற சில வழிமுறைகளை பற்றித்தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

எலும்புகள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை என்றால் செயற்கை குளிர்பானங்கள், காபி,டீ,அளவுக்கதிகமான அசைவ உணவுகள்.மேலும் உடல் இயக்கம் அதிகரிக்க செய்து விளையாட்டு, நடை பயிற்சி, நீச்சல் என பல்வேறு செயல்பாடுகளும் தேவை.

  • எலும்புகள் பலம் பெற எளிய வழி தினம் குறைந்தது ஒரு டம்ளர் பால் அருந்த வேண்டும். பால் ஒவ்வாமை இருப்பவர்கள் அன்றாடம் சோயா பீன்ஸ், கீரை, பழச்சாறு அல்லது மீன் என்று ஏதேனும் ஒன்றை உண்டு வர வேண்டியது அவசியம் அப்படி உண்டால் தினசரி உடலுக்கு தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.
  • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு எதையும் உண்ணலாம். குறிப்பாய் ஒமேகா 3 அதிகம் எளிதில் கிடைக்கும் நெத்திலி மீன் வஞ்சிரம் மீன், கட்லா மீன் ஆகியவற்றை வாரம் இரு முறையாவது உண்டு வந்தால் எலும்புகள் அடர்த்தி அதிகரிக்கும்.
  • வயதானவர்களுக்கு எலும்பில் ஏற்படும் பலகீனம் சரியாக அடிக்கடி கொள்ளு ரசம் வைத்துக் கொடுக்கலாம்.
  • காய்கறி வகைகளை எடுத்து கொண்டால் அனைத்தும் நலமானது தான் அதில் எலும்புகளுக்கு என்று குறிப்பிட்டு சொன்னால் புரோகோலி, முட்டைக்கோஸ்,காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகள் எலும்புகளை பலமாக்கும்.
  • முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகிய உலர் பருப்புகளில் கால்சியம் அதிகம் நிரம்பி உள்ளது. அதோடு, உடலுக்குத் தேவையான மக்னீசியம், பாஸ்பரஸ் என பல தாதுஉப்புகளும் இருப்பதால் இவற்றை உண்பதன் மூலம் உடைந்த எலும்புகள் விரைந்து குணம் பெற்று ஒன்று சேரும். அதோடு காலை இளம் வெயிலில் நிற்பதும் கூடுதல் பலன் தரும். இதன் மூலம் எலும்பில் உண்டாகும் பல்வேறு நோய்கள் கூட தடுக்கப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வைட்டமின் டி உடலில் அதிகரிக்கும்.
  • எலும்புக்கு பலம் தரும் உணவுகள் என பெரிய பட்டியலே இருக்கிறது..நாம்  அருந்தும் பாலில் மட்டுமில்ல பச்சை காய்கறிகள், பச்சை கீரைகள், விதைகள், உலர் பருப்புகள், கேழ்வரகு, பட்டாணி,பாசிப்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி, சோயா உலர்ந்த அத்திப்பழம், முள்ளங்கி கீரை, வெற்றிலை,யோகர்ட், பாலடைக்கட்டி, சோயா பால், ஆரஞ்சு பழம்,என பல பொருட்களிலும் நிறைந்திருக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர என்றென்றைக்கும் எலும்பின் ஆரோக்கியத்திற்கும் எந்த குறையும் வராது.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore