வேலைக்குப் போக வேண்டும், வருமானம் ஈட்ட வேண்டும் என ஆர்வம் இருக்கும் பெண்கள், அம்மாக்களுக்கு ஏதாவதொரு சூழ்நிலைக் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் நல்ல தொழில் தொடங்கலாம். அப்படி என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
யூ டியூப் : இன்று யூடியூபர்கள் பெருகிவிட்டதன் காரணம். எளிதில் சம்பாதிக்கலாம் என்பதுதான். மக்களைக் கவரும் வகையில் சிறந்த யோசனைகளை தொகுத்து அதில் ஒன்றை தேர்வு செய்து யூ டியூப் சேனல் துவங்குங்கள். அது மக்களுக்கு பயனுள்ள, தேவைக்கு, தேடுதலுக்கு உதவும் சேனலாக இருந்தால் விரைவில் பிரபலமடையும். சந்தாதாரர்களும் அதிகரிப்பார்கள். வருமானம் ஈட்டலாம்.
வலைப்பதிவு : எழுத்து ஆர்வம் இருப்போர் இதை முயற்சிக்கலாம். யூடியூப் என்றாலும் கேமரா போன்ற விஷயங்கள் வேண்டும். ஆனால் இது அப்படி அல்ல. யூ டியூப் போலவே உங்களுக்கு பிடித்த விஷயங்களை , மக்களுக்கு பயனுள்ள தகவல்களை அளிக்கும் வகையில் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம். லைஃப்ஸ்டைல், ஹெல்த், சமையல் , டெக்னாலஜி தகவல்கள் இப்படி எதுவாக இருந்தாலும் தயங்காமல் துவங்கலாம். இதற்கு தற்போது இலவசமாகவே கூகுள் word press, blogger, weebly, wix என பல சேவைகள் இலவசமாக வலைப்பதிவு தொடங்க உதவுகின்றன. அதில் சென்று விருப்பம் போல் உங்கள் வலைப்பதிவை அமைத்துக்கொள்ளலாம்.
சமையல் கலை : இன்று வீட்டுச் சாப்பிட்டிற்கு ஏங்குவோர் பலர் உள்ளனர். ஆன்லைனில் வீட்டுச் சுவையைத் தேடி தேடி சாப்பிடும் இளைஞர்கள்தான் அதிகம். நீங்கள் சமையலில் அசத்துபவர் என்றால் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஆப்களில் பதிவு செய்து கொண்டு வீட்டிலேயே சமைத்து உணவுகளை ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம்.
தையற்கலை : உங்களுக்கு ஏற்கனவே தையற்கலை தெரியுமென்றால் தையல் பயிற்சி அளிக்கலாம். இன்றைய சுடிதார், பிளவுஸ் என்றில்லாமல் குர்தா, ஷார்ட் டாப்ஸ், அனார்கலி என காலகட்ட ஆடை மாற்றங்களுக்கு ஏற்ப உங்களின் திறமையை மேம்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். தெரியாது என்றால் கற்றுக்கொண்டு வீட்டிலிருந்தே ஆடைகள் தைத்து சம்பாதிக்கலாம்.
எம்பிராய்டரி : எம்பிராய்டரி பிஸ்னஸ்தான் இன்று பெண்களுக்கு நல்ல வருமானம் ஈட்ட கூடிய பிசினெஸ் ஆகா மாறி வருகிறது. உங்களுக்கு எம்பிராய்டரி தெரியுமென்றால் வீட்டில் இருந்தபடியே நன்கு சம்பாதிக்கலாம்.
இன்ஸ்டாகிராம் சந்தை : ஆன்லைன் பிஸ்னஸ்தான் இன்று களைகட்டுகிறது. இதற்கு பெரிய அளவில் செலவுகள் இல்லை. ஆடைகள், நகைகள், வீட்டு பொருட்கள் இப்படி எதுவாக இருந்தாலும் குறைந்த அளவில் முதலீடு செய்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸப்பில் விற்பனை செய்யலாம். இன்று பல பெண்கள் தொழில் முனைவோர்களாக இருக்க இந்த சமூக வலைதளங்களே காரணம். கடை வாடகை எடுத்து பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டுவதை விட இப்படி ஸ்மார்ட்டாக யோசியுங்கள்.
நிகழ்ச்சி நிர்வாகம் : ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்று சொல்லக் கூடிய இதுவும் இன்று டாப் பிஸ்னஸ்தான். அலுவலக நிகழ்ச்சிகள், திருமணம், பர்த் டே என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு சில குழுக்கள் இருக்கின்றன. அவர்களை அணுகி எப்படி வேண்டும் என சொன்னால் போதும் நம்முடைய பட்ஜெட்டிற்கு ஏற்ப சிறப்பாக செய்து கொடுப்பார்கள். நாமும் டென்ஷன்களை தலையில் போட்டுக்கொள்ளாமல் உறவினர்களை போல் சென்றால் மட்டும் போதும். உறவினர்களை புன்னகையோடு கை கூப்பி அழைத்தால் போதும் எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி நிர்வாகம் தொழிலையும் நீங்கள் வீட்டில் இருந்த படியே குழுவை மட்டும் அமைத்தால் போதும். சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து ஆர்டர்களைப் பெறலாம். இதற்கு முதலில் உங்கள் உறவினர்களின் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை ஆர்டர் எடுத்து பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
ஃப்ரிலான்ஸர் : எழுத்தும் இன்று தொழில்தான். உங்களுக்கு எழுதுவதில் விருப்பம் இருந்தால் பத்திரிகைகளுக்கு எழுதி பணம் சம்பாதிக்கலாம். அதேபோல் ஆன்லைனில் டிரான்ஸ்லேட்டர்களும் தேவைப்படுகிறார்கள். அப்படி நீங்கள் வீட்டிலிருந்தே எந்த முதலீடும் இன்றி மொழிபெயர்ப்பாளராக பணியாற்றலாம்.
யோகா பயிற்சி : நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் பலரும் நிம்மதி, அமைதியைத் தேடி அலைகின்றனர். அதில் பலரும் தேர்வு செய்வது யோகா பயிற்சி. உங்களுக்கு யோகா தெரியுமெனில் வீட்டிலிருந்தபடியே யோகா பயிற்சி எடுக்கலாம். இதிலும் நல்ல லாபம் ஈட்டலாம். அதிக முதலீடும் இருக்காது. அமைதியான சூழல், விசாலமான இடம் இருந்தால் போதும்.
கிராஃபிக் டிசைனிங் : மெலே குறிப்பிட்டது போல் ஆன்லைன் சந்தை இன்று மலைபோல் பெருத்துவிட்டது. அதேபோல் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கம்பெனிகள் தங்களுக்கென இணையதளம் உருவாக்கிக் கொள்கின்றனர். அவர்களைப் போன்றோருக்கு வீடிலிருந்தே இணையதளம் உருவாக்கிக் கொடுக்க கிராஃபிக் டிசைனர்கள்தான் இன்று தேவைப்படுகின்றனர். நீங்கள் அதில் வல்லவர் எனில் வீட்டிலிருந்தே செய்து கொடுக்கலாம் அல்லது ஆர்டர்களை பெறும் திறமை இருந்தால் கிராஃபிக் டிசைனிங் தெரிந்தவர்களை குழுவாக அமைத்து அவர்களை நிர்வகிக்கலாம்.
முக்கிய குறிப்பு: ஆன்லைன் வேலை என்று நம்பி எதிலும் பணத்தை கட்டி ஏமாந்துவிடாதீர்கள்.