கருட தரிசனமும், அதன் பலன்களும்
நாம் வழிபடும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒரு வாகனம் உண்டு. அதில் மகாவிஷ்ணுவின் வாகனம் தான் கருடன். மகாவிஷ்ணு வைகுண்டத்தில் அவருக்கு எப்பொழுதும் தொண்டு செய்வதை தங்கள் வாழ்வாக்கி கொண்டவர்களை நித்யசூரிகள் என்று குறிப்பிடுவர், அத்தகையவர்களில் முக்கியமானவர்கள் கருடன் இவர் திருமாலுக்கு வாகனமாகவும், கொடி சின்னமாகவும் இருந்து திருத்தொண்டு செய்து வருகிறார். எனவே இவர் பெரிய திருவடி என்றும் போற்றப்படுகிறார்.
கருடன் மங்கள வடிவிலானவன் வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை காணலாம்.
கருடனுக்கு வேறு பல பெயர்களும் உள்ளன, அதில் வேத சொரூபி என்ற பெயரும் ஒன்று வேத சொரூபியாக இருப்பதனால் கும்பாபிஷேகம் நடைபெறும் இடத்திற்குச் சென்று வேதங்களை சரிவர பாராயணம் செய்கிறார்களோ என பார்ப்பதாக ஐதீகம் உண்டு. அவ்வளவு எளிதில் எல்லோரும் கருட தரிசனம் பெற முடியாது நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருட தரிசனம் கிடைக்கச் செய்வார், இல்லையெனில் கருட தரிசனம் கிடைக்காது.
மேலும் அறிய: சூரசம்ஹாரம் என்றால் என்ன? ஏன் கொண்டாடுகிறோம்?
கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும். ஆயிரம் சுப சகுனங்கள் இருந்தாலும் அவையெல்லாம் ஒரு கருடனை பார்ப்பதற்கு ஈடாகாது.
கருட தரிசனம் செய்தல் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் பனிபோல மறைந்துவிடும். அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் நடைபெறும்.
கருடதரிசனம் எந்த தினத்தில் காணுகிறோம் அந்த தினத்திற்கு என்று பலன்கள் உண்டு.
கருட வாகன தரிசன பலன்
ஞாயிறு – பாவங்கள், பிணி நீங்கும்.
திங்கள் – சுகம் கிடைக்கும்.
செவ்வாய் – துணிவு, மகிழ்ச்சி கிட்டும்.
புதன் – எதிரிகள் நீங்கிச் செல்வார்கள்.
வியாழன் – நீண்ட ஆயுள் கிடைக்கும்.
வெள்ளி – செல்வ வளம் பெருகும்.
சனி – நம்பிக்கை ஓங்கும்.
மேலும் அறிய: விஷ்ணு சஹஸ்ரநாமம் வரிகள் தமிழில்..
கருட மந்திரம்
ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்…
தத்புருஷாய வித்மஹே
ஸீபர்ண பக்ஷாய தீமஹீ
தன்னோ கருட ப்ரசோதயாத்.
மேலும் அறிய: சூரியன் எந்த லக்கினத்தில் இருந்தால் என்ன பலன்?