Top 20 பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை | Birthday Wishes in Tamil kavithai

Updated On

பிறந்தநாள் வாழ்த்து வரிகள் | Birthday wishes in tamil text

ஒவ்வொருவரின் பிறந்த நாளும் அவர்களின் வாழ்க்கையில் சிறப்பான ஒரு நாளாகும்.

எப்படி தீபாவளியோ பொங்கலோ அனைத்து மக்களும் சேர்ந்து கொண்டாடுகிறார்களோ அதே போல் ஒரு குடும்பத்தில் ஒருவரின் பிறந்தநாளை இப்பொழுது சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

அண்ணனுக்கோ, தம்பிக்கோ, அக்காக்கோ, தங்கக்கோ, நண்பனுக்கோ என யாருக்கு பிறந்த நாளாக இருந்தாலும் அவர்கள் நம் வாழ்வில் தொடர்பில் இருந்தால் அது ஒரு மகிழ்ச்சிக்குரிய நன்னாளாகும்.

நீங்கள் அவர்களுடைய பிறந்தநாளுக்கு உங்களுடைய பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை தொலைபேசியில், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் களிலோ அல்லது பேஸ்புக் வீடியோ அனுப்ப இந்த பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் தொகுப்பை நாங்கள் வழங்கி உள்ளோம்.

இங்கே அனைத்து விதமான பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் பல்வேறு தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.

எனவே உங்கள் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை அனுப்பலாம்.  உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை கூட இங்கே நாங்கள் வழங்கி உள்ளோம்.

நீங்கள் சுத்த தமிழில் உங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க விருப்பம் கொண்டுள்ளீர்கள் எனில் நீங்கள் சரியான தளத்தில் தான் உள்ளீர்கள்.

பல கவிதைகள் தூய தமிழில் நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். நீங்கள் அதை பயன்படுத்தி உங்கள் மனதிற்கு இனியவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

தூய தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்க்கை என்னும் அழகான பயணத்தில் இன்று
அடுத்த மைல்கல்லை எட்டுகிறீர்கள்.
கடவுளின் ஆசீர்வாதத்தோடு, வெற்றிக்கான
உங்கள் இலக்குகளையும் லட்சியங்களையும் அடைவீர்கள்!

உங்கள் இந்த நாள் அன்பாலும் சிரிப்பாலும் நிறைந்திருக்க கடவுளை வேண்டுகிறேன்!
பிறந்தநாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும்.

அகவை தின வாழ்த்துக்கள்

இந்த பிறந்த நாளில் உங்கள் ஆசை, விருப்பம்,
எதிர்பார்ப்பு அனைத்தும் நிறைவேறட்டும்.

உங்கள் வாழ்க்கையை புன்னகையால் நிரப்புங்கள்…
உங்கள் வயதை நண்பர்களால் எண்ணுங்கள்!..

இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாகவும்,
மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாகவும் அமைய வாழ்த்துக்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள்!”

வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெற்று
வஞ்சமில்லா உள்ளம் கொண்டு
இனிதே வாழ என் அன்பு வாழ்த்துக்கள்.

அகவை தின வாழ்த்துக்கள் கவிதை

நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஒரு அழகான வாழ்க்கை வாழ வேண்டும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!”

இந்த பிறந்த நாளில் இன்பம் இரட்டிப்பாகட்டும்,
துன்பம் தூரமாக போகட்டும்,
மகிழ்ச்சி மனம் நிறையட்டும்.

உங்கள் பிறந்தநாள் அடுத்த 365 நாள் பயணத்தின் முதல் நாள்.
இந்த ஆண்டை எப்போதும் சிறந்ததாக மாற்ற உலகின் அழகிய திரைச்சீலையில் ஒளிரும் நூலாக இருங்கள்.

இன்பங்கள் எல்லாம் இனிதாகவே பெற்று
வாழ்வில் எல்லா நலனும் பெற்று
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

அனைத்து இல்லங்களிலும் இன்று
ஏற்றப்படும் தீப ஒளியைப் போல..
உன் வாழ்வும் ஒளி பெற்று சிறக்கட்டும்.

இதே அன்புடன், பண்புடன்,
நட்புடன், மகிழ்ச்சியுடன்,
நலமாகவும், வளமாகவும்
மன நிறைவாய் வாழ வாழ்த்துகிறேன்

உங்கள் பிறந்தநாளில், உலகின் மிக அழகான பரிசை உங்களுக்கு வழங்க நினைத்தேன். ஆனால் அது சாத்தியமில்லை என்பதை நான் உணர்ந்தேன், ஏனென்றால் நீங்கள் உலகின் அழகான பரிசு.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore