இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்து கவிதைகள் மற்றும் படங்கள் | Merry Christmas Wishes 2023 in Tamil

கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்தவ மதத்தில் ‘கடவுளின் மகன்’ என்று அழைக்கப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதாகும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் 160 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பில்லியன் கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை பல்வேறு வழிகளில் கொண்டாடுகின்றனர். இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரிய பண்டிகை என்றால் அது கிறிஸ்துமஸ் பண்டிகை தான். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் – 25 ம் நாள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் தேவாலயத்திற்குச் சென்று வழிபாடு செய்கின்றனர். கிறிஸ்தவமக்கள் தங்கள் வீடுகளை கிறிஸ்துமஸ் மரங்களாலும் மற்றும் வண்ணமயமான கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் அலங்கரித்து மகிழ்கின்றனர். இந்த நன்னாளில் அனைவருக்கும் வாழ்த்து கூறி மகிழ்வோம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்து கூறும் வகையிலான கவிதைகள் மற்றும் வாழ்த்து அட்டைகளை கீழே கொடுத்துள்ளோம். இதை அனைவருக்கும் அனுப்பி மகிழுங்கள்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
மேலும் அறிய: 50+ கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2022-Part-2
Best Merry Christmas wishes in Tamil 2023

எல்லோரும் எல்லாமும் பெற்று
வளமுடனும், நலமுடனும் வாள இறைவனை வணங்குவோம்.
அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!

சிறந்த மகான் இயேசுபிரன்
சிசுவாக அவதரித்த நாள்
டிசம்பர் 25.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!
Merry Christmas Wishes

இனிய கிறிஸ்துமஸ்
மற்றும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
மேலும் அறிய: Happy New Year Wishes 2022
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

உலகின் மிகப்பெரிய விழா,
160 நாடுகளில் கொண்டாடப்படும் விழா,
நாமும் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடுவோம்,
இந்த கிறிஸ்துமஸ் விழாவை..
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!
Merry christmas images

கேட்டதும் கொடுப்பவன்
தட்டியதும் திறப்பவன் அவன்,
மானுடர்களை இரட்சிக்க
மாட்டு தொழுவத்தில்
பிறந்தவன் அவன்..
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்..
Merry Xmas 2023

கடவுளும் மனிதர்களை காண
இவ்வுலகில் மனித வடிவில் வருவார் என
நம்பும் வகையில்,
புனித இயேசு பூவுலகில் மனிதராக வந்த தினம்
டிசம்பர் திங்கள் 25-ம் நாள்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் | Merry Christmas Wallpaper

மரியாளின் மைந்தனாய்
மாட்டு தொழுவத்தில் பிறந்து,
மக்களின் பாவத்தை போக்க
மரித்து போரடியவரின் பிறந்த நாள் இன்று..
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் 🎅🤶🎅🤶🎅
Happy Christmas Day

இதமான இன்பம் இதயம் வருடி
இருள் விலகும் நாள்,
இனிமை பிறக்கும் நாள்,
இந்த இயேசு பிறந்த நாள்.
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!!
Christmas 2023 Wishes in tamil

மண்ணுலுக மக்கள் மகிழ்ச்சி பொங்க,
மனதில் இருக்கும் ஆசையை
மனமுருக வேண்டி,
இறைவனின் ஆசி பெற்றிடுவோம்.
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..
2023 – கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

இந்த இனிய நாளை போலவே
எந்நாளும் உடலும் உள்ளமும்
நலமுடனும் பொலிவுடனும்
இருக்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும்
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்..
Christmas 2023 Wishes | கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு,
அவர் உன்னை ஆதரிப்பார்..
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!!
Christmas Valthukkal tamil

கிறிஸ்துமஸ் தாத்தாவை போல் அனைவரும்,
அனைவருக்கும் உதவி செய்து
மனிதநேயத்தினை
நிலைநாட்டுவோம்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்!!!
Christmas Festival Wishes

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை,
உன்னைக் கைவிடுவதுமில்லை..
இனிய கிறிஸ்து பிறப்பு தின நல்வாழ்த்துக்கள்!!
Merry Christmas Status

அன்பான உறவுகள்
மற்றும்
நண்பர்கள் அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் 🎅🤶🎅
Merry Christmas Images

Happy Birthday Wishes in Tamil

Merry Christmas 2023 Whatsapp, Facebook and Instagram Status


