தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு வெண்பொங்கலும் சர்க்கரை பொங்கலும் தான் பிரதான உணவு. தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாள் தான் பொங்கல் பண்டிகை. பொங்கல் திருநாள் காப்பு கட்டுதல் என்ற நிகழ்வுடன் கிராமங்களில் தொடங்கும்.
முதல்நாள் சூரிய பொங்கல் திருவிழாவாகும். இதற்காக மக்கள் காலையில் எழுந்து வண்ண வண்ண ரங்கோலி கோலங்களை வாசலில் இட்டு மகிழ்வர்.
அதன் பிறகு, சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் வைத்து சிறப்பாக பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்வர்.
இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் பண்டிகை திருநாள் ஆகும். இது பெரும்பாலும் உழவுக்கு உற்ற நண்பனான மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பொங்கல் வைத்து அதை படைத்து அவற்றை வணங்கி மக்கள் நன்றி தெரிவிப்பர்.
சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி?
தமிழ்நாட்டில் வெண்பொங்கல் சாப்பிடாதவர் இருப்பதற்கான வாய்ப்பே கிடையாது, அப்படி ஓர் மிகச் சிறந்த காலை உணவாக வெண்பொங்கல் எல்லோரும் உண்ணப் பட்டு வருகிறது.
வாங்க நாம வெண்பொங்கல் எப்படி சத்தாகவும் சுவையாகவும் (Tasty VenPongal) குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி உண்ணும் வகையிலும் எளிமையாக செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம். இதில் செரிமானத்திற்கு தேவையான மிளகு, சீரகம், இஞ்சி, அனைத்தும் சேர்க்கப்படும். இது அனைவரும் எளிமையாக செய்யக்கூடிய உணவு ஆகும்.
மேலும் அறிய: சர்க்கரை பொங்கல் குக்கரில் செய்வது எப்படி
வெண்பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்?
- 1 கப் பச்சரிசி
- 1/2 கப் பாசி பருப்பு
- 1/4 கப் பால்
- 1/4 கப் நெய்
- 2 பச்சை மிளகாய்
- 1 இஞ்சி துண்டு
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 10 to 12 முந்திரி
- 1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- கருவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
வெண் பொங்கல் செய்முறை / Easy Healthy VenPongal Recipe
முதலில் பச்சரிசியை நன்றாகக் கழுவி சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் மிதமான தீயில் வைத்து அதில் பாசிப்பருப்பை போட்டு பச்சை வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி தண்ணீரில் கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
கால் மணி நேரம் கழித்து, ஒரு குக்கரை அடுப்பில் மிதமான தீயில் வைத்து, சுமார் 6 கப் தண்ணீர் சேர்த்து, ஊறவைத்த பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து கொள்ளவும்
பிறகு கால் கப் பால் சேர்த்து மூடி வைத்து சுமார் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். அப்போதுதான் பொங்கல் நன்றாக குழைந்து வரும். 3 விசில் வந்ததும் குக்கரை திறந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
பொங்கல் மந்தமாக இருக்க விரும்பாதவர்கள் 2 விசில் வந்தவுடன் போகட்டும். அடியில் தண்ணீர் இருந்தால், அடுப்பை மிதமான தீயில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை பொங்கலை வைக்கவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் மிதமான தீயில் வைத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும்.
எண்ணெயைச் சூடாக்கி ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, முந்திரி மற்றும் பெருஞ்சீரகம் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்
சிறிது நேரம் கழித்து, இறக்கும் முன் சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.
இப்போது இதை குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்றி நன்கு கலக்கவும்.
பிறகு மீதமுள்ள நெய்யை ஊற்றி மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கவும். அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடாக பரிமாறவும்.
இப்போது உங்கள் சூடான மற்றும் சுவையான வெண்பொங்கல் தயார். இதனை சாம்பார்(sambar) அல்லது தேங்காய் சட்டினி உடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.