உழவர் பாதுகாப்பு அட்டை விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Uzhavar Card Online

Updated On

உழவர் பாதுகாப்பு அட்டை வாங்குவது எப்படி? | uzhavar pathukappu thittam in tamil

உழவர் அட்டை online apply

உழவர் பாதுகாப்பு திட்டம் ஆகஸ்ட் 15, 2005-அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் (Chief Minister’s Farmers Security Scheme) விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பல வகையான உதவி தொகைகள் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளது.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் என்பது வருவாய்த்துறையின் உழவர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் பதிவுபெற்ற உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அரசின் உதவி தொகைகளை பெறலாம்.

உழவர் அட்டை பயன் | Ulavar card benefits in tamil

  • உழவர் அட்டை கல்வி உதவித்தொகை – தொழில் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பட்டப்படிப்பு, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை, தொழிற்கல்வி போன்ற படிப்புகளுக்கு ஆண்டொன்றுக்கு ஒருமுறை உதவித்தொகை பெறலாம்.
  • திருமண உதவி தொகை பெறலாம்.
  • இயற்கை/விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவி தொகை பெறலாம்.
    கை கால் இழப்பு அல்லது கண் பார்வை இழப்பு அல்லது பக்கவாதம் அல்லது தற்காலிக இயலாமை (காசநோய், புற்றுநோய்,இதயநோய்,நரம்பியல் நோய், எலும்பு முறிவு) போன்றவைகளுக்கு உதவி தொகை பெறலாம்.
  • அறுபது வயதை கடந்த நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் ஓய்வுதியம் (முதியோர் உதவித்தொகை) பெறலாம்.

தகுதிகள்

வயது வரம்பு

இந்த உழவர் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சமாக 65 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை பெற கண்டிப்பாக உழவர் அட்டை வைத்திருத்தல் வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு இந்த திட்டம் கிடையாது.

விவசாயம் சார்ந்தத் தொழில்களான தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்த்தல், பயிர், புல், கால்நடை, மரங்கள் வளர்த்தல், பால் பண்ணை, கோழிப்பண்ணை, உள்ளூர் மீன்பிடி தொழில் செய்தல், உரவகையிலான பயிர் வளர்க்க நிலத்தை பயன்படுத்துதல், நிலத்தை மேய்ச்சலுக்குப் பயன்படுத்துதல் ஆகிய பணிகளைச் செய்து வரும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், உழவர் பாதுகாப்பு அட்டையை பெறத் தகுதியானவர்கள்.

மேலும் 2.50 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் 18 வயது முதல் 65 வயது வரையுள்ள நேரடி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், குத்தகை அடிப்படையில் பயன்படுத்தும் விவசாயிகள் ஆகியோர் தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை பெறத் தகுதியானவர்கள்.

ஒரு குடும்பத்தில் விவசாயத் தொழில்களில் ஈடுபடும் கணவன், மனைவி மற்றும் அவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்

  1. குடும்ப அட்டை
  2. வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம்
  3. உழவர் அட்டை
  4. ஆதார் அட்டை

விண்ணப்பிக்கும் முறை

  • கல்வி உதவித்தொகைக்கு கல்வியாண்டு தொடங்கி ஆறு மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்/ வருவாய் ஆய்வாளர்/வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம்.
  • திருமண உதவி தொகைக்கு திருமணத்திற்கு முன்பு மூன்று மாதத்திற்குள் அல்லது திருமணத்திற்கு பின்பு ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இயற்கை/விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவி தொகைக்கு இறப்பிற்கு பிறகு ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • கை கால் இழப்பு அல்லது கண் பார்வை இழப்பு அல்லது பக்கவாதம் போன்றவைகளுக்கு விபத்து ஏற்பட்ட ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேற்படி உதவி தொகைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள்ளாக மனு செய்து நிவாரணம் பெற இயலாத நேர்வுகளில் வருவாய் கோட்ட அலுவலர் (ஆறு மாதத்திலிருந்து கூடுதலாக மூன்று மாதம் வரை), மாவட்ட வருவாய் அலுவலர் (ஆறு மாதத்திலிருந்து கூடுதலாக ஆறு மாதம் வரை), மாவட்ட ஆட்சியர் (ஆறு மாதத்திலிருந்து கூடுதலாக ஒரு வருடம் வரை) போன்ற அலுவலர்களிடம் மனு செய்து காலதாமத்தை ஏற்றுக்கொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உழவர் அட்டை புதுப்பித்தல் ஆன்லைன் (Ulavar card renewal online)

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு பெற்ற உழவர்களுக்கு உழவர் அட்டை (uzhavar attai) வழங்கப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்ய உரிய படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் தனி வட்டாச்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போது புதிய உழவர் அட்டை வழங்கப்படுவதில்லை. புதுப்பித்தல் வசதியும் இல்லை.

நிவாரண தொகை விபரம்

  1. பெண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை – ரூ.10,000.

2. ஆண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை – ரூ.8,000.

உழவர் பாதுகாப்பு திட்டம் scholarship

3. கல்வி உதவித் தொகை விபரம் (விடுதியில் தங்காதோருக்கு)

4. தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி – ரூ.1,250 (ஆண்களுக்கு) – ரூ.1,750 (பெண்களுக்கு).

5. கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு – ரூ.1,250 (ஆண்களுக்கு), ரூ.1,750 (பெண்களுக்கு).

6. இளங்கலை பட்டப்படிப்பு, கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு – ரூ.1,750 (ஆண்களுக்கு), ரூ.2,250 (பெண்களுக்கு).

7. முதுகலை பட்டப்படிப்பு, கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு – ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).

8. சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி – ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).

9. முதுகலை தொழிற்கல்வி (PG) – ரூ.4,250 (ஆண்களுக்கு), ரூ.4,750 (பெண்களுக்கு).

உழவர் பாதுகாப்பு திட்டம் பயன்கள்

10. முதியோர் ஓய்வூதியம் – ரூ.1,000. (மாதம்)

11. காசநோய், புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஓய்வூதியம் – ரூ.1,000. (மாதம்)

விபத்தில் ஏற்படும் இழப்புக்கு

விபத்தின் மூலம் இறப்பு – ரூ.1 இலட்சம்.

இரண்டு கைகள் இழப்பு – ரூ.1 இலட்சம்.

இரண்டு கால்கள் இழப்பு – ரூ.1 இலட்சம்.

ஒரு கை ஒரு கால் இழப்பு – ரூ.1 இலட்சம்.

மீட்க முடியாத அளவுக்கு பாதிப்பு

கண்கள் பாதிப்பு – ரூ.1 இலட்சம்.

ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு – ரூ.50,000.

பக்கவாதம் – ரூ.50,000.

படுகாயம் மூலம் கைகள் இழப்பு – ரூ.20,000.

இயற்கை மரணம் (மெரூன் நிற அட்டை பெற தகுதியுள்ள உறுப்பினர்) – ரூ.20,000.

ஈமச்சடங்கு செலவு (இறப்பு சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை) – ரூ.2,500.

 

உழவர் திட்டத்தில் எப்படி பதிவு செய்வது?
uzhavar pathukappu thittam apply online

  • முதலில் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அந்த பக்கத்தில் பயனாளர் உள்நுழைவு என்ற ஆஃப்ஷனை தேர்வு செய்யவும்.
  • இதற்கு முன்பு User ID SINGUP செய்திருந்தால் அதனையே பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
  • இல்லையென்றால் New User? SignUp here என்ற ஆப்ஷனை கிளிக் செய்து user ID கிரியேட் செய்து கொள்ளுங்கள் .
  • அவற்றில் கேட்டுள்ள அனைத்து விபரங்களையும் நிரப்ப வேண்டும். இறுதியாக Captcha எண்ணை சரியாக கொடுத்து sign in செய்யவும்.
  • உங்களுடைய மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும். அந்த OTP எண்ணை என்டர் செய்யவும்.
  • லாகின் செய்த பிறகு services என்பதில் Department-ல் Revenue Department என்பதை தேர்வு செய்யவும்.
  • அடுத்து Search ஆப்ஷனில் Small Marginal Farmer Certificate என்பதை தேர்வு செய்யவும்.
  • can Number வைத்திருப்பவர்கள் அவற்றை கொடுக்கலாம். இல்லாதவர்கள் புதிதாக can Number ரெஜிஸ்டர் செய்யவும்.

Ulavar card online application

  • அடுத்ததாக Douments அப்லோட் செய்யவும். போட்டோ, சிட்டா, சுய விருப்பு கடிதம் இந்த மூன்று ஆவணத்தையும் இணைக்கவும். போட்டோ (50 kb-க்குள் இருக்க வேண்டும்)
  • 3 Douments அப்லோட் செய்த பிறகு உழவர் அட்டைக்காக ரூ.60/- தொகை செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும். அவற்றில் உங்களுக்கான எண் இருக்கும்.
  • அந்த எண்ணினை கொடுத்து உங்களுடைய உழவர் பாதுகாப்பு அட்டை download status-ஐ (ulavar card check online) உறுதி செய்து கொள்ளலாம்.

Uzhavar Card Application Form

விண்ணப்ப படிவம்Click Here
உழவர் பாதுகாப்பு திட்டம் விண்ணப்ப படிவம் pdfClick Here

Ulavar attai scholarship Form

உழவர் அட்டை கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம் Pdf – Click Here



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore