கீர்த்தி சுரேஷ் என்ன பிஸினஸ் பன்றாங்கனு தெரியுமா?

Updated On 13/09/2021

புதிய தொழில் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்…

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இப்போது அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து புது தொழில் தொடங்கியுள்ளர். பூமித்ரா என்ற இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில் முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து, சரும பராமரிப்புக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

100% சுத்தமான இயற்கை முறையில் பொருட்கள் தயாரிப்பதே குறிக்கோள் என்று கூறியுள்ளார்.

பூமித்ரா மூலம், இயற்கையான தோல் பராமரிப்பின் நன்மையை அனைவருக்கும் அளிக்க விரும்புகிறேன். இதன் மூலம் ஒவ்வொரு தோல் வகைக்கும் தனித்தன்மை மிக்க தயாரிப்புகள் கொண்டு அழகை பராமரிக்கலாம் என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்த இயற்கை பொருட்களை வாங்க bhoomitra.store என்ற இணையதளத்தை அணுகலாம்.