நமது மதிய வேளையில் நாம் விரும்பி சாப்பிடும் சாம்பார் வகைகளில் ஒன்று கத்தரிக்காய் சாம்பார். இதை புதுவிதமான முறையில் சமைத்து சுவைக்கலாம். சுவையான கத்திரிக்காய் சாம்பார் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு – 250 கிராம்
- கத்தரிக்காய் – 5
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- தக்காளி – 4
- பூண்டு – 6 பல்
- வெந்தயம் – 2 ஸ்பூன்
- சாம்பார்தூள் – 2 ஸ்பூன்
- மிளகாய்தூள் – 3 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- புளி – நெல்லிக்காய் அளவு
- மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – 1 ஸ்பூன்
- உளுந்து -1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- வர மிளகாய் – 3
இந்த முருங்கைக்காய் சாம்பார் செய்து பாருங்கள்!!
செய்முறை:
- பருப்பை தண்ணீரில் கழுவி குக்கரில் போட்டு அதனுடன் நறுக்கிய 2 தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும். (பருப்பை குக்கரில் வேகவைக்காமல் தனியாக பாத்திரத்தில் வேகவைத்து சமைத்தல் இன்னும் சுவையாக இருக்கும்)
- சின்ன வெங்காயம்,2 தக்காளி,கத்தரிக்காய் இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயின் மேல் காம்புடன் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்க்கவும்.
தக்காளி வதங்கியவுடன் கத்தரிக்காயை சேர்த்து தேவையான அளவு மஞ்சள்தூள், சாம்பார்தூள், மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு புளியைக் கரைத்து ஊற்றவும். - கத்தரிக்காய் வதங்கியவுடன் பருப்பைக் கடைந்து இதில் ஊற்றவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். - நன்றாக கொதித்தவுடன் உப்பு சரிபார்த்து, மல்லி இலை தூவி இரக்கவும்.
இப்போது சுவையான கத்தரிக்காய் சாம்பார் தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.