தமிழ் கிராமத்து பழமொழிகள் | Tamil Kiramaththu Palamoligal

Updated On

கிராமத்து பழமொழிகள் | Palamoligal in Tamil

பழமொழிகள் என்பது பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் அவர்கள் வாழ்க்கை அனுபவத்தை வைத்து சில தத்துவங்களை சுருக்கமாக பழமொழிகளாக கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக நகைச்சுவையான பழமொழிகளை கூறியுள்ளனர். அதுபோன்ற பாட்டிகள் கூறிய கிராமத்து பழமொழிகளை இந்த பதிவில் பார்ப்போம்.

50 பழமொழிகள் தமிழ்

  • கொடுக்கறதோ உழக்கு பாலு, உதைக்கிறதோ பல்லு போக!
  • நாய்க்கு வேலையும் இல்ல நிக்க நேரமும் இல்ல.
  • கும்பிடு கொடுத்து கும்பிடு வாங்கு.
  • குடல் கூழுக்கு அழுதுச்சாம், கொண்டை பூவுக்கு அழுதுச்சாம்.
  • குனியக் குனியக் குட்டுவான். குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • கெட்டும் பட்டணம் சேர்.
  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
  • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
  • அட்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
  • அரசன் இல்லாத நாடு அச்சமில்லாத தேர்.
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
  • குரங்கின் கைப் பூமாலை.
  • கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
  • குரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே .
  • அசைந்து தின்கிறது யானை அசையாமல் தின்கிறது வீடு.
  • குருட்டு கண்ணுக்கு குறுணி மையிட்டுமென்ன?
  • குல வழக்கம் இடை வழக்கம் கொஞ்சத்தில் தீராது.
  • குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே.
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சணும் ஓடாது.
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  • உடல் உள்ளவரை கடல் கொள்ளாத கவலை.
  • கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே.
  • உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.
  • சோழியன் குடுமி சும்மாடு ஆகாது.
  • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
  • அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.
  • எண் இல்லாதவர் கண் இல்லாதவர்.
  • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
  • எண்ணி செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
  • எதை அடக்கவிட்டாலும், நாக்கை அடக்கவேண்டும்.
  • எலி அழுதால் பூனை விடுமா?
  • ஏழைப் பேச்சு அம்பலம் ஏறாது.
  • ஒரு கை தட்டினால் ஓசை எழுப்புமா?

20 பழமொழிகள் in tamil

  • குப்பை உயரும் கோபுரம் தாழும்.
  • கெண்டையைப் போட்டு வராலை இழு.
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆணை படுத்தால் ஆள் மட்டம்.
  • இஞ்சி இலாபம் மஞ்சளில்.
  • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
  • இமை குற்றம் கண்ணுக்கு தெரியாது.
  • இல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
  • ஈர நாவிற்கு எலும்பில்லை.
  • எங்கே புகையுண்டோ அங்கே நெருப்புண்டு.
  • எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.
  • எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.
  • எரிகின்ற விளக்கனாலும் தூண்டுகோல் தேவை.
  • ஏதொன்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை.
  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும் .
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.

10 பழமொழிகள் தமிழ்

  • ஒரு நாள் கூத்துக்கு மீசையை சிரைக்கவா?
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.
  • தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
  • அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  • மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம்.
  • கண்டதை கற்றால் பண்டிதன் ஆவான்.
  • பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது.
  • நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வீட்டுல பொண்ணு கேட்டானாம்!
  • அந்தி ஈசல் பூந்தால் அடை மழைக்கு அச்சாரம்.
  • எறும்பு ஏறில் பெரும் புயல்.

நையாண்டி பழமொழிகள்

  • அரசனை நம்பி புருஷனை கைவிடாதே.
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • வர வர மாமியார் கழுத்தை போல் ஆனாள்.
  • காத வழி போய் அறியாதவன் மாதமெல்லாம் நடந்தானாம்.
  • காமனுக்கு கண் இல்லை, மாமனுக்கோ பெண் இல்லை.
  • செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
  • அருமை மருமகன் தலைபோனால் போகட்டும், ஆதிகாலத்து உரல் போக கூடாது.
  • தண்ணீருக்கே தகராறாம் பிள்ளை மட்டும் பதினாறாம்.
  • கருப்பட்டி பானைக்குள்ள கையை விட்டவன் நாக்குல நக்காம டவுசர்லயா துடைப்பான்?
  • நாணி நடந்தாலும் மாமி குணம் போகுமா?
  • ஆகாயத்தில் போகிற சனியனை ஏணிவைத்து இறக்கின கதை.
  • பணம் இருந்தால் பாட்ஷா, இல்லாவிட்டால் பக்கிரி.
  • பச்சரிசி தோசையை அறியாத பன்னாடை இட்டலியை பார்த்ததும் எடுத்து எடுத்து தின்னுச்சாம்.
  • அவலை முக்கி தின்னு, எள்ளை நக்கி தின்னு.
  • எத்தனை வித்தை கற்றாலும் செத்தவன் செத்தவன்தான்.
  • கிழவி பாட்டை கின்னரக்காரன் கேட்பானா?
  • பங்காளியையும், பனங்காயையும் பதம் பார்த்தே வெட்டு.
  • வைக்கத்தெரியாதவன் வைக்கோல் போரில் வைத்தானாம்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore