சுவையான பொட்டு கடலை உருண்டை செய்வது எப்படி? |
Roasted Bengal Gram Balls Recipe in Tamil
பொட்டுக்கடலை நன்மைகள் அதிகம் உள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை பொரிகடலை என்றும் சொல்லுவர். பொட்டுக்கடலை உருண்டை வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யலாம். எப்படி செய்வது என்று கீழே பார்ப்போம்.
Roasted Gram Jaggery Ladoo | பொரிகடலை உருண்டை
தேவையான பொருட்கள்
- பொட்டு கடலை – 1 கப்
- வெல்லம் – 1/2 கப்
- தண்ணீர் – 1/4 கப்
- ஏலக்காய் – 2
- நெய் – சிறிதளவு
செய்முறை
- பொட்டு கடலையை வெறும் கடாயில் லேசாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவிட வேண்டும். வெல்லம் கரைந்ததும் ஒரு வடிக்கட்டியை வைத்து வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பின்பு அந்த வெல்ல கரைசலை ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சி எடுக்க வேண்டும்.
- பாகு உருட்டு பதம் வந்ததும், அடுப்பை அணைத்து விட்டு அதில் பொட்டு கடலை சேர்த்து கிளறவேண்டும்.
- நன்றாக கிளறி எடுத்ததும், மிதமான சூட்டில் இருக்கும் போதே கையில் நெய் தடவிக்கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான பொட்டு கடலை உருண்டை தயார். இன்றே நீங்களும் செய்து பாருங்கள்.
Pottukadalai in English – Roasted Bengal Gram (Or) Roasted Chana Dal