சாம்பார் பொடி | Sambar podi Receipe

Updated On

ஐயர் வீட்டு சாம்பார் பொடி | Sambar Podi / Sambar Powder

சாம்பார் பொடியை வீட்டிலேயே வறுத்து அரைத்து சமைத்தல் மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த சாம்பார் பொடி மிகவும் வாசனையாக இருக்கும். குறைந்த நேரத்தில் செய்துவிடலாம். சாம்பார் பொடி வாங்க கடைகளுக்கு போக தேவை இல்லை.

சாம்பார் பொடி அரைக்க தேவையான பொருட்கள்

  • 1 கப் மல்லி அல்லது 1 கப் மல்லித்தூள்
  • 8-10 சிவப்பு மிளகாய் அல்லது 1/2 காஷ்மீர் மிளகாய்ப்பொடி
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி மிளகு
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • 1 தேக்கரண்டி உளுந்து
  • 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 1 தேக்கரண்டி துவரம்பருப்பு
  • 1 சிறிய மஞ்சள் துண்டு
  • கொஞ்சம் வறுத்த கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி பச்சரிசி (விருப்பப்பட்டால்)

வழிமுறைகள்

அனைத்துப் பொருள்களையும் வெயிலில் வைத்து அல்லது சற்றே கடாயில் அவற்றின் நிறத்தை மாற்றாமல் வறுத்தெடுக்கவும்.

மல்லி மற்றும் மஞ்சள் பொடி பயன்படுத்தினால், வருக்காமல் நேரடியாகப் பயன்படுத்தவும்.

மென்மையான பவுடராக மாறும்வரை ஒரு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (அல்லது மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளலாம்.)

ஒரு காற்று புகாத ஜாரில் சேமித்து சாம்பார் தயாரிக்கும்போது தேவைப்படும் வேளையில் உபயோகிக்கலாம்.

புளி குழம்பு வகைகளுக்கம் பயன்படுத்தலாம்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore