வீடு தேடி கல்வி திட்டம் apply | Veedu Thedi Kalvi Thittam Apply
கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதனை சரி செய்ய தமிழக அரசு வீடு தேடி கல்வி என்ற திட்டத்தை தொடங்கியது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது.
மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியான தன்னார்வலர்களை ஆன்லைன் முறையில் தேர்ந்தெடுத்து, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையாகும்.
தமிழ்நாடு இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக, தன்னார்வலர்கள் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பள்ளி நேரத்திற்குப் பிறகு மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் வகுப்புகள் எடுப்பார்கள். தன்னார்வ மாணவர் விகிதம் 1:20 மற்றும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தமிழ்நாடு இல்லம் கல்வி திட்டத்தில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்ததாகும் அதனால் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பயன் பெறலாம். தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் பதிவு செய்யலாம்.
மேலும் அறிய: உழவர் பாதுகாப்பு அட்டை விண்ணப்பிப்பது எப்படி?
கல்வி தகுதி
- இல்லம் தேடி கல்வி online exam மூலம் ஆசிரியர்கள் தேர்தெடுக்கப்படுவர்.
- இல்லம் தேடி கல்வி தமிழில் ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகவும்.
- குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்.
- +2/Graduate in any degree
- 12- ஆம் வகுப்பு முடித்தவர்கள் 1 முதல் 5 – ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம்.
- பட்ட படிப்பு முடித்த தன்னார்வலர்கள் 6 – 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம்.
- இல்லம் தேடி கல்வி application last date எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சம்பளம் | Illam Thedi Kalvi Salary
இல்லம் தேடி கல்வி சம்பளம் மாதம் (Illam Thedi Kalvi salary per month) ரூ. 1000.
மேலும் அறிய: முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?
விதிமுறைகள்
தன்னார்வலர்கள்..
- வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
- கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
- தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
- யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
இல்லம் தேடி கல்வி மாவட்டங்கள்
இத்திட்டம் முதலில் 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இப்போது அதை விரிவு படுத்தப்பட்டு பெரும்பாலான மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இல்லம் தேடி கல்வி திட்டம் ஆன்லைன் பதிவு 2022 அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?
இல்லம் தேடி கல்வி தமிழில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்க்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
- உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்-ல் Google Chrome-ல் illam thedi kalvi registration என்று டைப் செய்து Search என்பதை கிளிக் செய்யவும்.
- https://illamthedikalvi.tnschools.gov.in என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- இல்லம் தேடி கல்வி இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் கீழ் பக்கத்தில் “தன்னார்வலர்களுக்கான பதிவேற்று படிவத்தை தொடங்கு” என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்து விண்ணப்பத்தின் முதல் பகுதியான அடிப்படைத் தகவல்களை சரியாக பதிவிடவும்.
- அடுத்து உங்கள் முகவரியை சரியாக பதிவிடவும். நீங்கள் தன்னார்வலராக எங்கு பணிபுரிய விரும்புகிறீர்கள் என்பதை சரியாக தேர்வு செய்யவும்.
- அடுத்ததாக உங்கள் கல்வி மற்றும் தொழில் விவரங்களை பதிவிடவும்.
- அடுத்து இதர கேள்விகள் என்ற பகுதியில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவிடவும்.
- இறுதியாக மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதை Tick செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.
இல்லம் தேடி கல்வி விண்ணப்ப படிவம் (Illam Thedi Kalvi Application Form 2022) – Online Application
இல்லம் தேடி கல்வி விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் – Notification
இல்லம் தேடி கல்வி திட்டம் website – https://illamthedikalvi.tnschools.gov.in/
Illam Thedi Kalvi App Download in tamil – Download App
தொடர்பு தகவல்
மின்னஞ்சல் ஐடி: illamthedikalvi@gmail.com
கட்டணமில்லா எண் : 14417