மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு | TNEB Aadhaar Link Tamil

Updated On

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? | How to Link EB with Aadhaar Online in Tamil

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக பெரும் அனைத்து மின் நுகர்வோர் மற்றும் இலவச விவசாய மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மானியம் பெறாத மற்ற மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை.

ஆதார் எண்ணை மின் என்னுடன் இணைக்க இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று, மின் வாரிய அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு முகாமிற்கு நேரடியா சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது மின் வாரிய இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக இணைக்கலாம்.

இந்த பதிவில் ஆதார் மின் இணைப்பு link பயன்படுத்தி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை எவ்வாறு இணைப்பது என்று விரிவாக பார்ப்போம்.

 

ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி

Step 1: முதலில் Google இணையதளத்தில் “tneb aadhaar link” என்று டைப் செய்யுங்கள். அதில் முதலில் வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Step 2: அது மின் வாரியத்தின் அதிகார பூர்வமான இணைய தளமான https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற வலைதளத்திற்கு செல்லும். அதில் TANGEDCO
Link Aadhar என்ற தலைப்பில் இருக்கும்.

Step 3: அதில் Service Connection Number என்ற கட்டத்தில் உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யுங்கள்.

Step 4: EB Consumer Number பதிவு செய்து Enter ஆப்ஷனை கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் உங்கள் மின் இணைப்பு எண் மற்றும் உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண் அதில் தெரியும்.

Step 5: உங்கள் Registered Mobile Number சரியானது என்றால் “Do you want to send OTP to this mobile number” என்ற கேள்விக்கு Yes என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Enter செய்யவும்.

Step 6: அடுத்து உங்கள் மொபைல் எண்ணிற்க்கு OTP வரும் அதை பதிவு செய்யவும்.

Step 7: அதற்கு அடுத்து Owner or Tenant or  Owner Name Transfer-இல் , ஏதாவது ஒரு  ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

Step 8: அடுத்தது வரும் பக்கத்தில் நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்கள் அதில் காட்டப்படும். கீழே இருக்கும் கேப்ட்சாவை டைப் செய்யவும். அங்கு உங்களுடைய ஆதார் எண் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதனை சரியாக நிரப்புங்கள்.

Step 9: பின்னர், Declaration கேட்கப்படும் அதை தேர்வு செய்யவும். அடுத்து Submit கொடுத்தால், உங்கள் ஆதார் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் காட்டும்.

How to Check Aadhaar TNEB Link Status:

Just enter the TNEB Service Number in this page https://adhar.tnebltd.org/Aadhaar/  and press submit.  Adhar Updated and Pending for Acceptrance.

 

Once the Aadhar Verfied means, you will get the “Aadhar updated for this consumer Number Already”



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore