Veg cutlet in Tamil | வெஜ் கட்லெட்
பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை என்று சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்படினா இதை ட்ரை பண்ணி பாருங்க.
வெஜ் கட்லட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 2 கப்
- பீன்ஸ் – 1/2 கப்
- கேரட் – 1 கப்
- பச்சை பட்டாணி – 1/2 கப்
- கொத்தமல்லி இலை – 1/2 கப்
- பச்சை மிளகாய் – 2
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பிரெட் கிரம்ஸ் – 1/2 கப்
- மைதா மாவு – 4 தேக்கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
- நறுக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், மற்றும் பச்சை பட்டாணி அனைத்தையும் குக்கரில் சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். 2 அல்லது 3 விசில் விட்டு இரக்கவும். (இந்த காய் கறிகளை நீராவியிலும் வேகவைக்கலம்).
- காய்கறிகளில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். தண்ணீர் இருந்தால் வடிகட்டி எடுத்து, பின்னர் மசித்து கொள்ளவும்.
- அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கரம் மசாலா, இஞ்சி விழுது, உப்பு மற்றும் சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும். பின்னர் 6 தேக்கரண்டி பிரட்கிரம்ப்ஸ்(பிரட் துகள்) சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இந்த கலவை கையில் ஒட்டாமல் இருந்தால் பதம் சரியாக இருக்கும். இதில் எலுமிச்சை அளவு மாவை எடுத்து வட்ட வடிவமாக, வடை போல் தட்டி எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கிண்ணத்தில் 4 தேக்கரண்டி மைதா மாவை சேர்த்து அதில் 7 முதல் 8 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். மற்றொரு கிண்ணத்தில் பிரெட் கிரம்ப்ஸ் எடுத்து வைக்கவும்.
- வடை போல் தட்டிய மாவை முதலில் மைதா கலவையில் நனைத்து எடுத்து பின்பு பிரெட் கிரம்ப்ஸில் பிரட்டி, எல்லா இடத்திலும் படும் படி பிரட்டவும்.
- எல்லா உருண்டைகளையும் இதேபோல செய்து எடுக்கவும்.
- ஒரு கடாயில் 3 முதல் 4 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கவும், பின்னர் கட்லெட் ஒவ்வொன்றையும் எண்ணெயில் போட்டு வேகவைக்கவும். இரண்டு பக்கமும் சிவந்து வந்ததும் அதை வேறு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- இதே போல அனைத்து கட்லெட்டுகளையும் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான வெஜ் கட்லெட் தயார்.
- புதினா சட்னி அல்லது எதாவுது ஒரு சாஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.