வெஜிடபுள் புலாவ் | Vegetable Pulao Rice in Tamil
குழந்தைகளுக்கு மற்றும் பணிக்கு செல்வோர்க்கு மதிய உணவிற்கு என்ன சமைப்பது என்று பெண்கள் மிகவும் யோசிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளுக்கு பிடித்த விதமாக அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியமானதாகவும் சமைத்து கொடுக்க வேண்டும், அதற்கு வெஜ் புலாவ் ஒரு அருமையான உணவாக இருக்கும். இதனுடன் ஏதாவுது ஒரு வறுவல் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
வெஜ் புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஊறவைத்த பாசுமதி அரிசி – 11/2 கப்
- வெங்காயம் – 1
- கேரட் – 1
- பீன்ஸ் – 10
- பச்சை பட்டாணி – 1/4 கப்
- காலிஃளார் – 1/4 கப்
- புதினா- ஒரு கை பிடி
- இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- பிரியாணி இல்லை – 2
- பட்டை – 2
- கிராம்பு – 4
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- ஏலக்காய் – 4
- ஸ்டார் பூ – 1
- மிளகு – 10
- பச்சை மிளகாய் – 2
- முந்திரி – 6-7
- எண்ணெய் – தேவையான அளவு
- நெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்தவுடன், அதில் சீரகம், பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, அன்னாசிப்பூ மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- முழு மசாலா பொருட்கள் லேசாக வறுபட்டவுடன் சிறிய துண்டுகளாக வேண்டிய வெங்காயத்தை சேர்க்கவும்.
- பின்பு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
- இப்பொழுது நறுக்கிய காய்கறிகள் மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.
- நன்றாக வதக்கி 2-3 நிமிடம் வேகவைக்கவும். பின்னர் 2 1/2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். (குக்கரில் சமைத்தல் 2 1/2 கப் தண்ணீர் போதுமானது. தனி பாத்தரித்தில் சமைத்தல் 3 கப் தண்ணீர் சேர்க்கவேண்டும் )
- தண்ணீர் கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து உப்பு சரிபார்க்கவும், தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
- குக்கர் மூடி போட்டு மிதமான தீயில் 1 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். விசில் சத்தம் நின்று சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து கரண்டியின் அடிப்பகுதியை வைத்து மெதுவாக கிளறிவிடவும்.
இப்போது மிகவும் வாசனையான வெஜ் புலாவ் தயார்.