எண் ஜோதிடம் பிறந்த தேதி பலன்கள் | Date of Birth Astrology in Tamil

Updated On

பிறந்த தேதி சொல்லும் சேதி | Date of Birth Astrology in Tamil Online

எண் ஜோதிடத்தில் பிறந்த தேதியை வைத்து ஒருவரின் குண நலம் மற்றும் அவரது எதிர்காலத்தை பற்றி கூறும் வழக்கம் உள்ளது. பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து தான் ஒருவருடைய ஜாதகம் கணிக்கப்படுகிறது. இந்த பதிவில் 1 முதல் 9 வரை உள்ள ஆதிக்க எண்ணிற்கும் என்னென்ன குணநலம் என்றும் பார்ப்போம்.

எண் ஜோதிடம் பிறந்த தேதி பலன்கள் | பிறந்த தேதி கூட்டு எண் பலன்கள்

பிறந்த தேதி கூட்டு எண் என்பது நமது பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடம் ஆகிய அனைத்து எண்களையும் கூட்டி வரும் கடைசி எண் ஆகும். இது ஒற்றை இலக்க எண்ணாக வரும் வரை கூட்ட வேண்டும்.

பிறந்த தேதி கூட்டு எண் 1 பலன்கள் 

கூட்டு எண் 1-ல் பிறந்தவர்கள் மிகவும் துணிச்சலானவர்களா இருப்பார்கள். இவர்களின் முகத்தை பார்த்து அவர்களை எடை போட முடியாது. மிகவும் அமைதியான தோற்றத்துடன் இருப்பார்கள், ஆனால் மிகவும் வீரம் மற்றும் தைரியம் உடையவர்கள்.

தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்வார்கள். மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் கெடுதல் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர் தனித்து நின்று செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். பிறருக்கு உதவி செய்வதில் முதல் ஆளாக இருப்பார். பிறருடைய தவறுகளை எளிதில் மன்னித்துவிடுவார். மொத்தத்தில் கள்ளம் கபடம் இல்லாத மனிதராக இருப்பார்கள்.

பிறந்த தேதி கூட்டு எண் 2 பலன்கள்

கூட்டு எண் 2-ல் பிறந்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பான மனிதராக இருப்பார்கள். மற்றவர்களை பேசியே மயக்கும் வல்லமை கொண்டவர்கள். ஒரு காரியத்தை செய்வதற்க்கு முன்பு நன்கு ஆலோசித்து அதற்க்கு பின்பு தான் ஒரு முடிவை எடுப்பார். இவர்

அதிகம் பொய் பேசாதவர் மற்றும் மற்றவர்கள் பொய் பேசி ஏமாற்றினால் சற்றும் மன்னிக்கமாட்டார். இவர்கள் நல்ல அறிவாளியாகவும், ஞாபக சக்தி உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளியாக இருப்பர். தன்னிடம் இல்லை என்று வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வார்கள். இவர்கள் சற்று பயந்த சுவபாத்துடன் இருப்பார்கள்.

பிறந்த தேதி கூட்டு எண் 3 பலன்கள்

கூட்டு எண் 3-ல் பிறந்தவர்கள் ஒரு தொழிலை எடுத்து செய்தால் அதில் வெற்றியடையாமல் நிற்கமாட்டார்கள். அதில் எவ்வளவு தடை வந்தாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களின் தனித்திறமை மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

எந்த ஒரு விஷயத்தையும் புதுவித கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். இவர்களின் திறமையை மற்றவர்கள் சாதகமாக்கி லாபம் காண்பார்கள். அன்பும், அரவணைப்பும் அதிகமாக இருக்கும். சுயகௌரவம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

பிறந்த தேதி கூட்டு எண் 4 பலன்கள்

பிறந்த தேதி கூட்டு எண் 4-ல் பிறந்தவர்கள் சலிக்காமல் பேசும் பேச்சு திறமை உள்ளவர்கள். மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இவர்களை கொண்டுவருவது மிகவும் கடினம். தொழில் தொடங்குபவர்கள் இவர்களிடம் ஐடியா கேட்டு செய்தல் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இவர்கள் தனது மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசி விடுவார்கள். எது சரி எது தவறு என்று யோசிக்க மாட்டார்கள். இவர்களை பார்த்தல் கடுமையான தோற்றத்தில் இருக்கும், ஆனால் மிகவும் பாசமானவர்களாக இருப்பார்கள்.

பிறந்த தேதி கூட்டு எண் 5 பலன்கள்

பிறந்த தேதி கூட்டு எண் 5-ல் பிறந்தவர்கள் கடவுள் பக்தி நிறைந்தவர்களா இருப்பார்கள். இவர்கள் எதிர்காலத்தை பற்றி சொல்வது அப்படியே பலிக்கும். இவர்களின் உழைப்புக்கு ஈடுஇணை கிடையாது. அவர்கள் எடுத்து வைத்த காரியத்தை முடிக்காமல் அடுத்த வேளைக்கு போகமாட்டார்கள்.

மற்றவர்களிடம் பேசியே தனது காரியத்தை சாதித்துக்கொள்ளும் வல்லமை உடையவர்கள். மற்றவர்களின் மனதில் எளிதாக இடம் பிடித்துவிடுவார்கள். பொறுமை மற்றும் பொறுப்பு இவர்களின் தனித்தன்மை ஆகும்.

பிறந்த தேதி கூட்டு எண் 6 பலன்கள்

கூட்டு எண் 6-ல் பிறந்தவர்கள் சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் நேர்மையாகவும் மற்றும் உதவிகரமாகவும் இருப்பார்கள். துரோகம் செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இவர்கள் மிகவும் யதார்த்தமாகவும், ஜாலியாகவும் இருப்பார்கள்.

இவர்களை சுற்றி ஒரு பெரிய கூட்டமே இருக்கும். சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக வைத்துக்கொள்வார்கள். இவர்கள் சற்று பிடிவாத குணம் கொண்டவர்கள். இவர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியாது. அவர்கள் எடுத்துக்கொண்ட லட்சியத்தை முடிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

பிறந்த தேதி கூட்டு எண் 7 பலன்கள்

7-ம் எண்ணில் பிறந்தவர்கள் சமூக சிந்தனை உடையவர்கள். இவர்கள் சில நேரம் மிகுந்த சந்தோசத்துடன் இருப்பார்கள், சில நேரம் கவலையுடனும், மெளனமாகவும் இருப்பார்கள். இவர்களை புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இவர்களுக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் இருப்பார்கள். ரகசியங்களை பாதுகாப்பதில் சிறந்தவர்கள். ராஜாங்க ரகசியங்களை கூட இவரிடம் தைரியமாக கூறலாம். தலைமைத்துவமும், கற்பனைத்திறனும் அதிகம் இருக்கும்.

பிறந்த தேதி கூட்டு எண் 8 பலன்கள்

இந்த 8-ம் எண்ணில் பிறந்தவர்கள்  நேர்மையாகவும், திறமையாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் நன்கு யோசித்து, நிதானமாகவே முடிவெடுப்பார்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை எதையும் பொருட்படுத்தாது, உழைத்துக்கொண்டே இருப்பார்கள்.

மற்றவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். இவர்கள் பேசும் போது நாம் என்ன பேசுகிறோம் என்று நன்கு யோசித்து மிகவும் நிதானமாக பேசுவார்கள். பேச்சல் மற்றவர்கள் மனதை துன்புறுத்திவிட கூடாது என்று எண்ணுவார்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை நன்றாக புரிந்துகொள்வார்கள்.

பிறந்த தேதி கூட்டு எண் 9 பலன்கள்

கூட்டு எண் 9-ல் பிறந்தவர்கள் மற்றவர்களை போல சாதாரணமாக இல்லாமல் சற்று வித்தியாசமான குணம் உடையவர்கள். இவர்களின் ரசனை வித்யாசமாக இருக்கும். தான் முடித்த முயலுக்கு மூன்று கால் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள்.

ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். தன்னுள் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதை மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்களை ஊக்கப்படுத்தி சாதனை அடையச்செய்வார்கள். பெரியவர்களிடம் மரியாதையும், சிரியவர்களிடம் அன்பும், பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore