கழுத்து, முதுகு, இடுப்பு வலியை குணமாக்கும் மர்ஜாரி ஆசனம் | Marjari asana benefits in tamil

Updated On

கழுத்து மற்றும் தோள்பட்டை வலி நீங்க யோகாசனம் |
Yoga for Neck pain and Shoulder pain

கழுத்து, தோள்பட்டை வலி, முதுகு, மற்றும் இடுப்பு வலி என்பது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனையாகும். இதனை சமாளிக்க ஒரு எளிமையான ஆசனத்தை தினமும் செய்தால் போதும், விரைவில் இந்த வலியில் இருந்து விடுபடலாம்.

மர்ஜரியாசனம் (Cat Pose) செய்வது மிகவும் எளிது. இதன் நன்மைகள் அதிகம். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம், கழுத்து, தோள்பட்டை, முதுகு ஆரோக்கியமாக இருக்கும். கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, நீங்கும். நுரையீரல் சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு நன்மையளிக்கிறது.

மார்ஜரியாசனம் செயதால் உடல் மற்றும் மனதையும் சமநிலைப்படுத்துகிறது. மனதின் ஆற்றலை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் மன அழுத்தத்தை குறைத்து, மனதிற்கு அமைதியளிக்கிறது.

யோகா செய்ய சிறந்த நேரம் | Best time to do yoga

அதிகாலை ஐந்து மணிக்கு முன்பே எழுந்து உடலை சுத்தம் செய்த பின்பு பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். 5 மணியிலிருந்து 7 மணிக்குள் பயிற்சி முடிக்க வேண்டும். பயிற்சி செய்யும் இடம் மிக சுத்தமாக மற்றும் காற்றோட்டமாக இருக்க வேண்டும். வெறும் தரையில் பயிற்சி செய்யக் கூடாது. துணி விரித்து கொள்ளலாம். வெறும் வயிறோடு தான் பயிற்சி செய்ய வேண்டும். முடிந்த வரை இரவு வேலைகளில் பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.

மர்ஜரியாசனத்தின் நன்மைகள் | Cat pose yoga benefits

 • முதுகுத்தண்டுக்கு நெகிழ்வுத்தன்மையை தருகிறது
 • மணிக்கட்டு மற்றும் தோள்களை பலப்படுத்துகிறது
 • செரிமான உறுப்புகளை மேம்படுத்துகிறது
 • இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
 • அடிவயிற்றை குறைகிறது
 • மனதை அமைதிப்படுத்துகிறது

மர்ஜரியாசனம் செய்யும் முறை

மார்ஜாரி ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, நீங்கும். கழுத்து, தோள்கள், முதுகு ஆரோக்கியமாக இருக்கும்.

 

 • முதலில் தரையில் ஒரு விரிப்பை விரித்து, குழந்தை தவழும் நிலை போல செய்யவும்.
 • உங்கள் மணிக்கட்டு உங்கள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.
 • மூச்சை உள்ளே இழுக்கும் போது, வயிற்று பகுதியை கீழ் நோக்கி உள்ளிழுக்கவும். தலையை தூக்கி மேலே பார்க்கவும்.
 • அதே நிலையில் 2 முதல் 3 வினாடிகளுக்கு அப்படியே இருக்கவும்.
 • பின்பு , மூச்சை வெளியே விடும் போது, முன்பு செய்ததற்கு அப்படியே தலைகீழாக, வயிற்று மேல்நோக்கி வளைத்து, தலையை குனிந்து நெஞ்சு பகுதியை பார்க்கவும்.
 • இந்த ஆசனத்தை தினமும் 20 முதல் 25 நிமிடங்களுக்கு காலை எழுந்தவும் செய்யவும்.

மணிக்கட்டு மற்றும் முட்டியில் தீவிர வலி உள்ளவர்கள் மற்றும் தீவிர முதுகு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

தீவிர கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்தை நேராக வைத்து செய்யலாம்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore