ஆரோக்யம் தரும் முள்ளங்கி

Updated On

இந்த முள்ளங்கியை உண்பதால் ஏற்படும் நன்மைகளை ஏராளம்.

மலச்சிக்கல் நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். தினந்தோறும் முள்ளங்கியை கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும்.

உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும். உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

முள்ளங்கியை தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. மூலம் அதிகம் காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

எப்படிப்பட்ட மூல நோயையும் தினந்தோறும் முள்ளங்கி காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். வெண்குஷ்டம் சிலருக்கு தோலின் செல்களில் ஏற்படும் மாறுதல்கள் காரணமாக தோலின் சில பகுதிகள் வெள்ளை நிறமாக மாறி, வெண்குஷ்டம் ஏற்படுகிறது. இந்நோய்க்கு நிரந்தர தீர்வாக எந்த ஒரு மருந்தும் இல்லை என்றாலும் முள்ளங்கி காயை இந்த பாதிப்பு கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் உடலின் பிறபகுதிகளுக்கு பரவுவதை கட்டு படுத்துகிறது.

யுனஎநசவளைநஅநவெ சுவாசக் கோளாறுகள் நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.

விஷ பூச்சிகள் நம்மை கடித்து விடுவதால் நமது தோலில் வீக்கம், அரிப்பு, தோல் சிவந்து போதல் போன்றவை ஏற்படுகின்றன. இப்படியான சமயங்களில் முள்ளங்கியை ஜூஸ் போட்டு குடிப்பது நமது உடலில் இருக்கும் பூச்சி கடி விஷம் முறியும். பூச்சி கடித்த இடத்தில் முள்ளங்கி ஜூஸின் சில துளிகளை இட்டு தேய்ப்பதும் நன்மையளிக்கும்.

ஜுரம் தட்ப வெட்ப மாறுதல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஜுரம் ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இந்நேரத்தில் உடலின் உஷ்ணம் அதிகமாகி நீர் சத்துகளின் தேவை உடலுக்கு அதிகம் ஏற்படும். இந்நேரங்களில் முள்ளங்கி காயை பக்குவம் செய்து உண்டால் ஜுரம் விரைவாக நீங்கும்.

உடல் எடை குறைப்பு

கட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் முள்ளங்கி ஜூஸ் அருந்தி வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.

மஞ்சள் காமாலை

நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு தேவையான சத்தாக மாற்றும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் கிருமித்தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. இந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முள்ளங்கி ஜூசை உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் இந்நோயின் தீவிரதன்மை குறையும். சிறுநீரக கற்கள் தண்ணீர் அதிகம் அருந்தாமை உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. முள்ளங்கி ஜூஸ் தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore