உடற் பருமனைக் குறைக்க எளிய முறைகள் | Weight Loss Tips in Tamil
மனித வாழ்வில் மிகவும் அடிப்படையான ஒன்று சத்தான உணவு மற்றும் தின்பண்டங்கள். ஆரோக்கியமான உணவு என்பது ஐம்பது சதவிகிதம் பழங்கள் மற்றும் காய்கறிகள், 25 சதவிகிதம் தானியங்கள் மற்றும் 25 சதவிகிதம் புரதம் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடல் பருமன் அதிகரிக்க முக்கியமான காரணம் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, கடைகளில் சாப்பிடுவது மற்றும் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது.
சரியான உணவு முறையை பின்பற்றாத காரணத்தால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது நமது உடலை மட்டுமல்லாது மனதையும் பாதிக்கும்.
உடல் எடையை குறைக்க வழிமுறைகள் | Stomach Weight Loss Tips in Tamil
- காலை நேரத்தில் நடைபயணம் செல்வது, உடல் பருமனை குறைப்பது மட்டுமல்லாது, மனஆரோக்கியம், தூக்கம் மற்றும் செரிமானம் போன்ற அனைத்திற்கும் உதவும்.
- மதிய உணவிற்கு பிறகு தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், அதுமட்டுமல்லாது இரவு உணவை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். சாப்பிட்ட உடனே தூங்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
- இரவு தூக்கம் மிகவும் முக்கியமான ஓன்று. 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம்.
- தேனுடன் எலுமிச்சை சாரை கலந்து குடித்தால் உணவு செரிமானம் சீராக இருக்கும்.
- சீரகத்தை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், கொழுப்பு குறையும்.
- சீரான எடையை பராமரிக்க, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலும் அறிய: 7 நாளில் உடல் எடை குறைய உணவு அட்டவணை
உடல் எடையை குறைக்கும் உணவுகள் | Weight Loss Foods in Tamil
- வெந்தய விதையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்கிறது.
- கற்றாழை சாறு தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
- சௌசௌ, சுரைக்காய் போன்ற காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கேட்ட நீர் வெளியேறும்.
- அதிக அளவிலான சர்க்கரை, மைதா மற்றும் உப்பு இவற்றை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- எலுமிச்சை, பூண்டு மற்றும் வெங்காயம் உணவில் சேர்த்துக்கொண்டால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் தாங்காது.
- இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்த நீரை பருகினால், உடல் எடை குறையும்.
- புரதம் நிறைந்த உணவான இறைச்சி மற்றும் மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், மது மற்றும் புகையிலை தவிர்க்க வேண்டும்.
மேலும் அறிய: உடல் எடையை குறைக்க உதவும் 12 குறிப்புகள்