அம்மா பாசம் கவிதைகள் | Tamil Amma Kavithaigal
நம் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டவர் அம்மா மட்டுமே. நாம் எவ்வளவு வயதானாலும், நம் தாயின் அன்பு எப்போதும் நமக்கு அர்த்தமுள்ளதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். அம்மாவின் அன்பு தூய்மையானது.
ஒரு உண்மையான அன்பை காணவேண்டும் என்றால் அது தாயின் கண்களில் மட்டுமே காண முடியும். நம் தாயின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த சில கவிதைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு செல்லாமல்
கைக்கூப்பி வணங்காமல்
உன் ஆசையை நிறைவேற்றும்
ஒரு தெய்வம் அம்மா…!
அம்மா கவிதைகள் வரிகள் | Amma Kavithaigal Tamil

கோடி உறவு அருகில் இருந்தாலும்
அம்மாவை மிஞ்சின உறவேதும்
உலகில் இல்லை..!
மேலும் அறிய: 50+ புதிய ரங்கோலி கோலங்கள் 2022
அம்மா கவிதைகள் Download | Amma Kavithai Tamil Image

வானத்தில் உதிக்கும் சூரியனுக்கு கூட
இரவில் ஓய்வுண்டு..
ஆனால் தாய்க்கு என்றுமே
ஓய்வில்லை…
மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள் | Amma Best Kavithai in Tamil

இந்த மண்ணில் வாழும்
ஒவ்வொரு உயிருக்கும் சுவாசமாக
இருப்பாள் தாய் மட்டுமே..!
அம்மா தியாகம் கவிதைகள் | Amma Ninaivu Kavithai

என் தாயே
உயிரில் கலந்த உறவே
உன் மடி வேண்டும்
நான் படுத்துறங்க.
மேலும் அறிய: தமிழ் நகைச்சுவை
அம்மா நினைவு கவிதை | Amma Ninaivu Kavithai

எல்லா குற்றங்களையும் மன்னிக்கும்
ஒரே நீதிமன்றம் என் அன்புள்ள
அம்மாவின் இதயம்..!
அம்மா கவிதை 2 வரிகள் | Amma Kavithai in Tamil 2 Lines

அம்மா என் சகலமும் நீ…
அம்மா நான் நிதம் தேடும் உயிர் நீ…
அம்மாவுக்கு நிகர் அம்மா மட்டுமே.
அம்மா கவிதை போட்டோ | Amma Kavithai Images Free Download

என்ன தவம் செய்தேனோ
நான் உன்னை அன்னையை பெறுவதற்கு…!
மேலும் அறிய: தமிழ் நகைச்சுவை விடுகதைகள் with Answer
Love அம்மா கவிதை | New Amma Kavithaigal

காலம் முழுவதும் நம்மை
வயிற்றிலும், தோளிலும், மடியிலும், மார்பிலும்
சுமப்பவள் தாய் மட்டுமே!!
அம்மா நினைவு கவிதை | Amma Ninaivu Kavithai

மலர்களை விட அழகானது
தாயின் அன்பு!
Amma Kavithai Whatsapp Status | அம்மா மகன் கவிதைகள்

பாலூட்டி சீராட்டி பசி மறந்து
என்னை காத்தாயே!
அம்மா என நான் அழைக்கும்
ஒரு சொல்லுக்கு!
தாய் கவிதை வரிகள் | Mother Kavithaigal in Tamil

அம்மா என்ற ஒரு உறவு இல்லாவிட்டால்
இந்த உலகமும் ஒரு அனாதைதான்
அம்மா கவிதை 10 வரிகள் | Amma Kavithai in Tamil 10 Lines

ஆழ்கடல் பெருமை அம்மா…
வலிகளின் சிகரம் அம்மா…
வாழ்வின் தேடல் அம்மா…
கருணையின் உருவம் அம்மா…
கர்ப்பத்தின் புனிதம் அம்மா….
மேலும் அறிய: Happy Birthday Wishes in Tamil
அம்மா கவிதைகள் | Mother’s Quotes in Tamil
நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்,
தெரிந்தும் சுமக்கிறாய்
பத்து மாதம் வரை அல்ல..
உன் ஆயுள் காலம் வரை.
உலகிலேயே சிறந்த தெய்வம்
தாய் மட்டுமே..
உலகிலேயே மிகச் சிறந்தவர்கள்
தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.!
