தீபாவளி 2023 தேதி | Diwali 2023 Date
இந்தியாவில் மிக முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று தீபாவளி. இந்த பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினத்தில் புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள், வர்ண விளக்குகள், வண்ண வண்ண கோலங்கள் மற்றும் தோரணங்களால் வீட்டை அலங்கரிக்கிறது.
தீபாவளி என்று சொல்லும் போதே நமது மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பிறருக்கும் பகிரும் விதமாக வாழ்த்துக்களை கூறி மகிழ்வோம். வகை வகையான இனிப்புகளை நமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் பகிர்வோம்.
மக்கள் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்து தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் செழிப்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வத்தை தருமாறு லட்சுமி தேவியிடம் வேண்டுகிறார்கள்.
நரகாசுரன், ராவணன் போன்ற அரக்க குணம் கொண்டவர்களை அழித்து இருள் நீக்கி, ஒளி பெற்ற நாள் ஆதலால் தீபாவளி என்ற பெயர் வந்தது.
இந்த வருடம் தீபாவளி எந்த மாதத்தில், எந்த தேதியில் (diwali dates) வருகிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தீபாவளி தேதி 2023 | Diwali 2023 Date in India Calendar
2023 நவம்பர் 12ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்கள் இதை ஒரு நாள் மட்டும் கொண்டாடுகின்றனர். ஆனால் மற்ற பல இடங்களில் தீபாவளியை ஐந்து நாள் கொண்டாட்டமாக கொண்டாடுகின்றனர். நவம்பர் 10ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கி 14-ம் நாள் செவ்வாய் கிழமை அன்று தீபாவளி கொண்டாட்டம் முடிவடைகிறது.
தீபாவளி 2023 தமிழ் தேதி | Diwali which Date
தமிழ் மாதமான ஐப்பசி 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. அமாவாசை அன்று தான் தீபாவளி வரும்.
ஆனால் ஒரு சில வருடங்கள் அம்மாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வரும். இந்த வருடம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி வருகிறது.
தீபாவளி நல்ல நேரம்
காலை – 7.00 முதல் 8.00 வரை
மாலை – 3.15 முதல் 4.15 வரை