முட்டை கொத்து இடியாப்பம் | Egg Kothu Idiyappam
இடியாப்பம் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் அதை அடிக்கடி செய்தால் சாப்பிட மறுப்பார்கள். அதை சற்று புது விதமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் முட்டை சேர்த்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மிகவும் எளிதில் செய்யக்கூடிய முட்டை இடியாப்பம் செய்முறையை கீழே பார்க்கலாம்
முட்டை இடியாப்பம் | Egg String Hopper Recipe in Tamil
தேவையான பொருட்கள் | Egg Idiyappam Ingredients
- இடியாப்பம் – 1 கப்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- தக்காளி – 1
- முட்டை – 2
- பச்சைமிளகாய்- 1
- கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – அரை ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு – கால் ஸ்பூன்
- வெங்காயம் – 1
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
மேலும் அறிய: சோன் பப்டி இப்படி செய்து பாருங்கள்….
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் ஒரு பெரிய வெங்காயம் சேர்க்கவும், வெங்காயம் பாதி வதங்கியதும் ஒரு பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- பின்பு ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு தக்காளி, உப்பு, அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் அரை ஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் 2 முட்டையை உடைத்து ஊற்றவும். முட்டை நன்றாக வெந்ததும், 1 கப் இடியாப்ப உதிரியை சேர்த்து கிளறவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை இடியாப்பம் தயார்.
மேலும் அறிய: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிபன் சாம்பார்