முதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம் | Back ache relief at home
நாம் முதுகு வலியை சாதாரணமாக எண்ணி புறக்கணிக்க கூடாது, அதற்க்கு தகுந்த சிகிச்சையை வீட்டிலேயே (back pain home remedies) செய்து பார்க்கலாம், அவ்வாறு செய்தும் வலி குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி ட்ரீட்மெண்ட் எடுப்பது அவசியம்.
உங்கள் முதுகு வலியை தணிக்க பல்வேறு வகையான இயற்கை வைத்தியங்கள் உள்ளன, இது மருந்து உட்கொள்வதைக் குறைத்து அல்லது உங்கள் மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் பலனை அளிக்க உதவும்.
முதுகு வலிக்கு தமிழ் மருத்துவத்தில் (back pain tamil medicine) சிறந்த பலன்களை பெற முடியும். அதற்க்கு, உணவு கட்டுபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிக எண்ணெயில் வறுத்த தின்பண்டங்கள், அதிக காரம் கொண்ட மசாலா பொருட்கள், அதிக புளிப்பு, கிழங்கு வகைகள், பொறித்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.
மேலும் அறிய: கழுத்து மற்றும் தோள்பட்டை வலி நீங்க யோகாசனம்
இயற்கை முறைகளில் நாள்பட்ட முதுகு வலிக்கான பயனுள்ள வலி நிவாரண குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.
முதுகு வலி நீங்க பாட்டி வைத்தியம் | Steps of Patti vaithiyam Muthugu vali Kunamaga
- குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உங்கள் முதுகில் கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். பின்னர், வெந்நீரில் குளிக்கவும்.
- ஆமணக்கு எண்ணெயை (விளக்கெண்ணெய்) சூடாக்கி, உங்கள் முதுகில் மசாஜ் செய்யவேண்டும். அதை இரவு முழுவதும் அப்படியே விடவும்.
- வீட்டில் தேநீர் தயாரிக்கும் போது இஞ்சியைச் சேர்த்து தயாரிக்கவும், இது முதுகுவலியின் வாய்ப்புகளைக் குறைக்க உதவும்.
- உங்கள் முதுகில் மசாஜ் செய்ய மூலிகை எண்ணெயைப் பயன்படுத்துவதும் விரைவாக முதுகு வலி குணமடைய (Home remedies for fast back pain relief) வழிவகை செய்யும்.
- கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். இது உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.
- அரை கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு அவற்றுடன் கற்பூரப் பொடியை சேர்த்து மிதமான சூடாக இருக்கும் போது வலி உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும்.
- சூடான நல்லெண்ணை மற்றும் உப்பு சேர்த்து முதுகில் மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாகச் செய்யவும்.
- தண்ணீரை மிதமான சூடாக்கி அதில் சிறிது யூக்கலிப்டஸ் தைலம் ஊற்றி கலந்து அதில் குளித்து வந்தால் முதுகுவலி மற்றும் உடல் வலி குணமாகும்.
- ஒரு கப் பாலில் சிறிது மஞ்சள் தூள், தேன் சேர்த்து குடித்து வந்தால் முதுகு வலி மட்டுமில்லாமல், உடல் வலியும், தொண்டை வலியும் சரியாகும்.
- கேழ்வரகு மாவை ஒரு காட்டன் துணியில் கட்டி, அடுப்பில் வெறும் மண் பானையை வைத்து சூடாக்கி, அதில் அந்த மாவு துணியை சூடாக்கி அதை முதுகில் மற்றும் கழுத்தில் வலி இருக்கும் இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்தல் வலி குறையும்.
- கருப்பு உளுந்து – 250 grm, பொட்டு கடலை – 100 grm, நிலக்கடலை 150, கருப்பு எள் 50 grm, இதை எல்லாம் வாசனை வரும் வரை வருத்து எடுக்கவும். இதை அனைத்தையும் சேர்த்து மிக்சி அல்லது மெஷினில் கொடுத்து அரைக்கவும். பின்னர் உருண்டை வெல்லம் 100 gm சேர்த்து பாகு காட்சி அதில் மாவை சேர்த்து நெய் விட்டு பிசைந்து உருண்டையாக செய்து சாப்பிடலாம்.
மேலும் அறிய: ஒற்றை தலைவலிக்கு பாட்டி வைத்தியம்
முதுகு தண்டு வலி நீங்க உடற்பயிற்சி | Back pain relief Exercises
கீழ் முதுகு வலியால் சிரமப்படுவோர் (lower back pain immediate relief), தரையில் சம்மணமிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை நேராக வையுங்கள். மூட்டு வலி உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்.
நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டி மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். 20 தடவை வரை இதே போல் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியின் நேரத்தை அதிகப்படுத்தி 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.
முதுகு வலிக்கான காரணங்கள் (Causes of back pain in tamil)
உங்கள் முதுகின் தசைகள், தசைநார் அல்லது வட்டுகளில் ஏதேனும் சேதம் அல்லது காயம், முதுகு வலிக்கு வழிவகுக்கும்.
இறுக்கமான தசைநார்கள், தசைகள் அல்லது பிடிப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்:
- ஒரு பொருளை தவறாக தூக்குதல்
- கனமான பொருட்களை தூக்குதல்
- முறையான படுக்கையின்மை
- உட்காரும் முறை
- பொருந்தாத மெத்தை
- தூக்கக் கோளாறுகள்
- வயதானவர்கள் முதுகுவலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
- ஆண்களை விட பெண்களுக்கு முதுகு வலி அதிகம் வருகிறது.
- கர்ப்பம்
- கடுமையான உடல் பயிற்சி
மேலும் அறிய: Top 50 பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்
நீங்கள் நீண்ட நேரம் உட்காரும் போது, உங்கள் முதுகுத்தண்டில் அழுத்தம் அதிகரிக்கும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து சிறிது நேரம் நடக்க வேண்டும்.
உங்கள் முதுகுத்தண்டில் அழுத்தத்தைத் தடுக்க உங்கள் கழுத்து, தோள்பட்டை மற்றும் பின் முதுகு உட்காரும் அமைப்பை சரிசெய்யவேண்டும். நீங்கள் குனிந்த நிலையில் அமர்வது அல்லது முதுகை வளைத்து உக்காருவது, உங்கள் முதுகில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், வலியை ஏற்படுத்தும் அல்லது அதிகரிக்கும்.