Current Bill-யை பாதியாக குறைப்பது எப்படி?

Updated On

உங்கள் வீட்டில் இருக்கும் மின் சாதனங்கள் எவ்வளவு மின் நுகர்வு செய்துனு தெரிஞ்சுக்கணுமா?

வீட்டில் உபயோகிக்கும் மின் சாதனப் பொருட்களான கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன், வாட்டர் கீட்டர், மோட்டார் மற்றும் ஏர் கண்டிஷனர் போன்ற சாதனங்கள் தனித்தனியாக எவ்வளவு யூனிட் கன்ஸ்யூம் பண்ணுதுனு தெரிஞ்சுக்கணும்னு எல்லோரும் நினைப்போம். எந்த மின் சாதனம் அதிக யூனிட் கன்ஸ்யூம் பண்ணுதுனு தெரிந்துகொண்டால் அதை சற்று குறைத்து மின் கட்டணத்தை குறைக்க முடியும். ஆனால் ஒவ்வொரு சாதனத்தையும் தனித்தனியா பார்த்து தெரிஞ்சுக்கறது என்பது சவாலான ஒன்று.

இதற்க்கு ஒரு ஸ்மார்ட் பிளக் அறிமுகமாகியுள்ளது. உதாரணத்திற்கு Wipro Smart Plug அந்த ஸ்மார்ட் பிளக்கை பயன்படுத்தி எந்த மின் சாதனம் எவ்வளவு யூனிட் கன்ஸ்யூம் பண்ணதுன்னு தெரிந்துகொள்ளலாம்.
16A ஸ்மாட் பிளக் பாயிண்ட் வாங்கி வீட்டில் இருக்கும் மின் சாதனங்கள் ஒவ்வொன்றும் என்ன மாதிரி மின் நுகர்வு செய்துன்னு தெரிஞ்சுக்கலாம்.

இந்த ஸ்மார்ட் பிளக்கை எங்கிருந்து வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். உங்களது ஸ்மார்ட் போனில் ஆப் மூலம் கட்டுப்படுத்த முடியும். உங்கள் மின் சாதனங்கள் தேவையில்லாமல் ஆன்ல இருந்தால் அதை உங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் ஆஃப் செய்ய முடியும். இதனால் உங்கள் மின் கட்டணத்தை குறைக்க முடியும்.

இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று இருக்கு , அது என்னனா உங்க வீட்டு மின் சாதனம் எத்தனை மணிக்கு ஆன் ஆகணும் எப்ப ஆஃப் ஆகனும்னு என்பதை இந்த ஸ்மார்ட் ஆப் மூலமா ஸ்கெடியூல் (schedule) பண்ணிக்கலாம். இதை உபயோகிக்க இன்டர்நெட் வசதி வேண்டும்.

Electricity bill-யை அதிகமாக்கும் ஒரு சாதனம் AC. இதை கவனமாக பயன்படுத்தினாலே நமது மின் கட்டணத்தை குறைக்க முடியும். AC உபயோகிக்கும் போது கதவு மற்றும் சன்னலை நன்றாக மூடி வைக்க வேண்டும். ஏ.சியை 25°C செட் செய்ய வேண்டும். தூங்கிய பிறகு ஆப் ஆகுற மாதிரி டைமர் செட் செய்ய வேண்டும். அதனுடன் இந்த ஸ்மார்ட் பிளக்கை பயன்படுத்தினால் மேலும் கரண்ட் பில்லை பாதியாக குறைக்க முடியும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore