Restaurant Style Sambar | Tiffin Sambar Recipe in Tamil
ஹோட்டலில் இட்லி, தோசை மற்றும் பொங்கலுடன் சேர்த்து கொடுக்கும் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். அதில் எந்த காய்கறிகளும் சேர்க்காமலே சுவையாகவும் நறுமணமாகவும் இருக்கும். அந்த சுவைக்கு காரணம் அதில் அரைத்து சேர்க்கப்படும் பொருட்கள் தான். அதே போன்ற முறையில் நாமும் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். ஹோட்டல் ஸ்டைல் டிபன் சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு – 1/2 கப்
- சின்ன வெங்காயம் – 12
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி -2
- மஞ்சள் தூள் – 1/2டீஸ்பூன்
- புளி – நெல்லிக்காய் அளவு
- உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- தனியா – 1 1/2டீஸ்பூன்
- சீரகம் – 1டீஸ்பூன்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- வரமிளகாய் – 5
- தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க தேவையானவை
- எண்ணெய் – 2டீஸ்பூன்
- கடுகு – 1டீஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை
- துவரம் பருப்பை கழுவி குக்கரில் 4 விசில் விட்டு வேக விடவும்.
ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தனியா 1 1/2 டீஸ்பூன்,கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,1 டீஸ்பூன் சீரகம்,1/2 டீஸ்பூன் மிளகு வரமிளகாய் 5 மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து எடுக்கவும். இவை அனைத்தும் சூடு ஆறியதும் மிக்சியில் பொடியாக அரைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை ஊற வைக்கவும். - கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு 1 டீஸ்பூன் கருவேப்பிலை சிறிது, நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி , சேர்த்து வதக்கி விடவும். இவை அனைத்தும் வதங்கிய பிறகு அரைத்த விழுதை சேர்த்து கலக்கிவிடவும்.
- அடுத்து வேகவைத்த பருப்பை சேர்த்து அதனுடன் புளி கரைசல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சாம்பார் நன்றாக கொதி வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு, மல்லி இலை தூவி இரக்கவும். காலை உணவான இட்லி, தோசை, பொங்கல் மற்றும் உளுந்து வடைக்கு ஏற்ற சாம்பார் தயார்.