Curry Leaves Kulambu Recipe in Tamil
கறிவேப்பிலை நமது சமையலில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மூலிகையாகும். நாம் சமைக்கும் அனைத்து உணவிலும் தாளிப்பின் போது கறிவேப்பிலை சேர்ப்பது வழக்கம். இதற்க்கு தனியானதொரு மனம் உண்டு. இதில் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆனால் அதை நாம் உணவில் இருந்து தூக்கி எறிந்து விடுகிறோம். கறிவேப்பிலையை நம் உணவில் சேர்த்துக் கொள்வதற்கான ஒரு அற்புதமான வழி கறிவேப்பிலைப் பொடி அல்லது சட்னி அல்லது கருவேப்பிலை குழம்பு தயாரிப்பது. எளிய பாரம்பரிய கருவேப்பிலை குழம்பு செய்முறையைப் பயன்படுத்தி கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கே பார்ப்போம்.
மேலும் அறிய: கங் பாவ் சிக்கன் செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்
- 1 கப் கறிவேப்பிலை
- 12 சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- புளி சிறிய எலுமிச்சை அளவு
- உப்பு தேவையானஅளவு
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 2-3 டீஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 தேக்கரண்டி கடுகு
செய்முறை
- சின்ன வெங்காயத்தை) தோலுரித்து 2 துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
- தக்காளியை விழுதாக அரைக்கவும்.
- கறிவேப்பிலையைக் கழுவி, மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- புளியை வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
மேலும் அறிய: மிகவும் எளிதாக செய்துமுடிக்க வெஜ் புலாவ்!
கருவேப்பிலை குழம்பு வைப்பது எப்படி?
-
- ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு சேர்த்து, அது வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- தக்காளி விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.
- தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் புளி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், குழம்பு கெட்டியானதும் எண்ணெய் பிரிந்து வரை வேகவைத்து இறக்கவும்.
- எளிதான கறிவேப்பிலை குழம்பு தயார், மிக குறைந்த நேரத்தில் செய்துமுடிக்கலாம்.
- சாதம் அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மேலும் அறிய: இந்த கத்தரிக்காய் சாம்பார் செய்து பாருங்கள்..