மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாமா?
மழை காலங்களிலும் குளிர் காலங்களிலும் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறினார் அதை நாமும் கடைபிடித்து வருகிறோம். ஏனென்றால், தயிர் சாப்பிடுவதால் சளி இருமல் வரும் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. ஆனால், இது முற்றிலும் தவறான எண்ணம் என்கின்றனர் நிபுணர்கள்
தயிர் எல்லா காலநிலைகளுக்கும் ஏற்ற உணவு. இதில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால், வயிறு சம்பந்தமான நோய்கள் குணமடைவதோடு, இந்த கொரோனா தொற்று (Corona Virus) பரவல் காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய: குழந்தைகளுக்கான தயிர் நன்மைகள்?
தயிர் சிறந்த புரோபயாடிக் உணவுகளில் ஒன்றாகும், இதில் நம் உடல் அரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல நுண்ணுயிரிகள் உள்ளன. புரோபயாடிக் உணவுகள், தொற்று நோயை எதிர்த்து போராடும் என்பதோடு, ரத்தத்தின் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இதனால் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால், சாதாரண சளி, இருமல் மட்டுமல்ல, கொரோனாவும் அஞ்சி ஓடும்.
நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) மட்டுமல்ல, தயிர் சருமத்திற்கும் தலைமுடியை மென்மையாக்கும் மருந்து பொருளை போல் பயன்படுத்தலாம். ஆரோக்கியமான, பளபளப்பான முடியைப் பெற இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். மேலும், தயிர், எலுமிச்சை மற்றும் கடலை மாவு கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும். தயிர் ப்ளீச்சாகவும் செயல்படுகிறது. குளிர் காலத்தில் சருமமும், முடியும் வறண்டு போகாமல் இருக்கும்.
அதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. கார்டிசோல் எனப்படும் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக இடுப்பைச் சுற்றி சேரும் அதிக கொழுப்பு ஆகியவற்றை சீராக்குகிறது. தயிர் கால்சியம் நிறைந்துள்ளது. இது கார்டிசோல் உற்பத்தியை குறைப்பதால், உடல் எடை குறைகிறது. தயிர் (Curd) உட்கொள்வது நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். கலோரிகளின் அளவைக் குறைப்பதன் மூலம் வயிற்றை குறைக்கவும் இது உதவுகிறது.
மேலும், தினமும் தயிர் சாப்பிடுவது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும், இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இதனால், இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
நீங்கள் சோர்வாக இருந்தால், தயிர் எடுத்துக் கொள்ளவது உடனடி பலன் அளிக்கும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த, தயிர் ஒரு ஆற்றல் ஊக்கியாகும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது கடின உழைப்பிற்கு பிறகு ஏற்படும் சோர்வை விரைவாக மீட்க உதவுகிறது.
இத்தனை பலன்கள் நிறைந்த தயிரை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.
மேலும் அறிய: 7 days Diet chart for weight loss