அறிவியல் புதிர்கள் | Ariviyal Vidugathaigal in Tamil
அறிவியல் புதிர்களை நாம் தீர்ப்பதன் மூலம் பல்வேறு கோணத்தில் நமது சிந்தனை இருக்கும். அறிவியல் விடுகதைகள் குழந்தைகளுக்கு முக்கியமான அறிவியல் உண்மைகளை நினைவில் வைக்க உதவும்.
விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer-வுடன் என்று எண்ணுபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும்.
சிறந்த விடுகதைகள் | Science Puzzles in Tamil
1. நீங்கள் என்னை பார்க்க முடியாது, ஆனால் நான் உங்களை துல்லியமாக பார்க்க முடியும் நான் யார்?
விடை : எக்ஸ்ரே (X-Ray)
2. நான் மிகவும் முக்கியமானவன் ஆனால் ஒரு சில வினாடிக்கு மேல் என்னை உங்களிடம் வைத்திருக்க முடியாது நான் யார்?
விடை : மூச்சு காற்று
பதில் கொண்டு தமிழ் விடுகதைகள்
3. கண்ணால் பார்க்கமுடியாது, காதால் கேட்க முடியும், நாம் பேசாதவரை அது திரும்ப பேசாது அது என்ன?
விடை : எதிரொலி
மேலும் அறிய: தமிழ் நகைச்சுவை விடுகதைகள் with Answer
புதிர் விடுகதைகள்
4. என்னிடம் இறகுகள் உண்டு ஆனால் நானாக பறக்க முடியாது நான் யார்?
விடை : விமானம்
5. உணவு கொடுத்தால் சாப்பிடும் தண்ணீர் கொடுத்தால் இறந்துவிடும் அது என்ன?
விடை : தீ,
தமிழ் விடுகதைகள் | Vidukathai in tamil
6. நான் ஒரு பாறை ஆனால் நீரில் போட்டால் கரைந்து விடுவேன் நான் யார்?
விடை : ஐஸ் கட்டி
7. தேர் ஓடுது பூ உதிருது அது என்ன?
விடை : கிரைண்டர்
விடுகதைகள் with answer in tamil
8. கோடையில் வெப்பத்தை தடுப்பேன், குளிர்காலத்தில் குளிர்ந்த காற்றை தடுப்பேன் நான் யார்?
விடை : ஜன்னல்
9. அஸ்திவாரம் இல்லாமல் அரண்மனை கட்டினேன் அது என்ன?
விடை : கப்பல்
10. கொஞ்சம் தண்ணீர் கொண்ட பழம், சமையலுக்கு பாலும், எண்ணெய்யும் தரும் பழம், சற்று உயரத்தில் இருக்கும் பழம் அது என்ன பழம்?
விடை : தேங்காய்
அறிவியல் புதிர் கேள்விகள்
11. பார்த்தால் பார்க்கும், சிரித்தால் சிரிக்கும், குத்திப் பார்த்தல் பத்து சில்லாம் அது என்ன?
விடை : கண்ணாடி
12. நீ உறங்கும் போது விழித்திருப்பவன் நான். ஆனால் நீங்கள் விழித்திருக்கும் போது நான் ஓய்வெடுப்பேன் நான் யார்?
Tamil Riddles with Answers
விடை : நிலவு மற்றும் அலாரம்
13. மொட்டை தட்டிலே எட்டுப்பேர் பயணம் அது என்ன?
விடை : படகு
14. வாங்கும்போது கறுப்பாகவும், பயன்படுத்தும்போது சிவப்பு நிறமாகவும், தூக்கி எறியும்போது சாம்பல் நிறமாகவும் இருப்பது எது?
விடை : விறகு
விடுகதைகள் | Vidukathaigal
15. இந்த ஊரிலே அடிபட்டவன் அடுத்த ஊரிலே போய் சொல்லுகிறான் அவன் யார்?
விடை : தந்தி
16. உடல் உண்டு தலையில் இல்லை கையுண்டு கால் இல்லை அல்லும் பகலும் ஓடும் அது என்ன?
விடை : கடிகாரம்
மேலும் அறிய: Current Bill-யை பாதியாக குறைப்பது எப்படி?
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்
17. வானத்திலே ரோடு போட்டு எட்டாத தொலைவிலே இங்கிருந்து பார்த்தால் இங்கிலீஷ்காரன் பள்ளிக்கூடம் அது என்ன?
விடை : தொலைக்காட்சி
18. ஆடையில்லா கருப்பழகி ஆடிச் சுழன்று பாடுகிறாள் அவள் யார்?
விடை : இசைத்தட்டு
Science Riddles in Tamil
19. மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும் அது என்ன?
விடை : இரயில்
20. நாலு கால் உண்டு வீச வால் இல்லை அது என்ன?
விடை : நாற்காலி