தமிழ் ஆண்டுகள் எத்தனை தெரியுமா ???

Updated On

தூய தமிழ் வருட பெயர்கள் | Tamil Years 60 Names in Tamil

நட்சத்திரங்களை முன்வைத்தும் பூமியின் சுழற்சியை அடிப்படையாக வைத்தும் உருவாக்கப்பட்டது தான் தமிழ் காலண்டர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் வருடங்கள் எத்தனை என்பது பலரும் அறியாத ஒன்று. தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 என்று பிரிக்கப்பட்டுள்ளது. இது சுழற்சி முறையில் திரும்பத் திரும்ப தொடர்ந்து வருகிறது.

தமிழ் வருடங்கள் வரலாறு

60 ஆண்டுகள் கணிப்பு’ என்பதை பூமியோடு தொடர்புடையதாக மற்ற கிரகங்கள் வானத்தில் இருக்கிற நிலையோடு தொடர்புபடுத்தி நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 30 வருடங்களை எடுத்துக்கொள்கிற சனிக் கிரகமும் 12 வருடங்களை எடுத்துக்கொள்கிற வியாழன் கிரகமும் 60 வருடங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரே நிலைக்கு வருவதை இந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறை குறிக்கிறது.

பழந்தமிழர் காலத்தைப் பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப்பிரித்தனர்.

ஒரு வருடத்தை இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, )பின்பனி ( மாசி, பங்குனி) என்று ஆறாகப் பிரிப்பதுதான் பெரும் பொழுது.

ஒரு தினத்தை வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று ஆறாகப் பிரிப்பதுதான் சிறுபொழுது.

தமிழ் வருடங்கள் பெயர் காரணம்

சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம்-இதுவே முதல் வருடம். இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் பெயரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.

தமிழ் வருடத்திற்கான தமிழ் பெயர், வடமொழி பெயர் மற்றும் வருடங்கள் கீழே காணலாம்.

 

Tamil Varudam Name List | தமிழ் ஆண்டு பெயர்கள்

தமிழ் வருடங்கள் 60 பெயர்கள் | Tamil Year Names and Meaning

எண்

தமிழ் பெயர்

வடமொழி பெயர்

வருடம்

1 நற்றோன்றல் பிரபவ 1987–1988
2 உயர்தோன்றல் விபவ 1988–1989
3 வெள்ளொளி சுக்ல 1989–1990
4 பேருவகை பிரமோதூத 1990–1991
5 மக்கட்செல்வம் பிரசோற்பத்தி 1991–1992
6 அயல்முனி ஆங்கீரச 1992–1993
7 திருமுகம் ஸ்ரீமுக 1993–1994
8 தோற்றம் பவ 1994–1995
9 இளமை யுவ 1995–1996
10 மாழை தாது 1996–1997
11 ஈச்சுரம் ஈஸ்வர 1997–1998
12 கூலவளம் வெகுதானிய 1998–1999
13 முன்மை பிரமாதி 1999–2000
14 நேர்நிரல் விக்கிரம 2000-2001
15 விளைபயன் விஷு 2001-2002
16 ஓவியக்கதிர் சித்திரபானு 2002-2003
17 நற்கதிர் சுபானு 2003-2004
18 தாங்கெழில் தாரண 2004-2005
19 நிலவரையன் பார்த்திப 2005-2006
20 விரிமாண்பு விய 2006-2007
21 முற்றறிவு யாவுந்திறல் சர்வசித்து 2007-2008
22 முழுநிறைவு சர்வதாரி 2008-2009
23 தீர்பகை விரோதி 2009-2010
24 வளமாற்றம் விக்ருதி 2010-2011
25 செய்நேர்த்தி கர 2011-2012
26 நற்குழவி நந்தன 2012-2013
27 உயர்வாகை விஜய 2013-2014
28 வாகை ஜய 2014-2015
29 காதன்மை மன்மத 2015-2016
30 வெம்முகம் துன்முகி 2016-2017
31 பொற்றடை ஹேவிளம்பி 2017-2018
32 அட்டி விளம்பி 2018-2019
33 எழில்மாறல் விகாரி 2019-2020
34 வீறியெழல் சார்வரி 2020-2021
35 கீழறை பிலவ 2021-2022
36 நற்செய்கை சுபகிருது 2022-2023
37 மங்கலம் சோபகிருது 2023-2024
38 பகைக்கேடு குரோதி 2024-2025
39 உலகநிறைவு விசுவாசுவ 2025-2026
40 அருட்டோற்றம் பரபாவ 2026-2027
41 நச்சுப்புழை பிலவங்க 2027-2028
42 பிணைவிரகு கீலக 2028-2029
43 அழகு சௌமிய 2029-2030
44 பொதுநிலை சாதாரண 2030-2031
45 இகல்வீறு விரோதகிருது 2031-2032
46 கழிவிரக்கம் பரிதாபி 2032-2033
47 நற்றலைமை பிரமாதீச 2033-2034
48 பெருமகிழ்ச்சி ஆனந்த 2034-2035
49 பெருமறம் ராட்சச 2035-2036
50 தாமரை நள 2036-2037
51 பொன்மை பிங்கள 2037-2038
52 கருமைவீச்சு காளயுக்தி 2038-2039
53 முன்னியமுடிதல் சித்தார்த்தி 2039-2040
54 அழலி ரௌத்திரி 2040-2041
55 கொடுமதி துன்மதி 2041-2042
56 பேரிகை துந்துபி 2042-2043
57 ஒடுங்கி ருத்ரோத்காரி 2043-2044
58 செம்மை ரக்தாட்சி 2044-2045
59 எதிரேற்றம் குரோதன 2045-2046
60 வளங்கலன் அட்சய 2046-2047

 



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore