Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.
மாத ராசி பலன் துலாம் - Monthly Rasi Palan for thulam in Tamil
December Matha Rasi Palan 2023 சூரியன், செவ்வாய் 12-ல் மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். முன்கோபத்தையும், பேச்சையும் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஒரளவுக்கு நற்பலனை பெற முடியும். குடும்பத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். சனி 3-ல், சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவுகள் ஏற்பட்டு உங்களது சிக்கல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் தனி திறமையால் எதையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் லாபங்களை அடைய முடியும். சிவ வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 01-12-2023 காலை 10.12 மணி முதல் 03-12-2023 இரவு 09.35 மணி வரை மற்றும் 28-12-2023 மாலை 06.37 மணி முதல் 31-12-2023 அதிகாலை 05.42 மணி வரை.
Click the links to get மாத ராசி பலன் for mesam rishbam mithunam kadagam simmam kanni thulam viruchigam thanus makaram kumbam meenam rasi palan