Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் மேஷம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for mesam in Tamil
அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்தில் இருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 2, 8-ல் சஞ்சரித்த ராகு, கேது தற்போது ஏற்படும் ராகு கேது பெயர்ச்சியால் திருக்கணிப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் சில நேரங்களில் உங்கள் நிதானத்தை இழக்க நேரிடும் என்பதால் எதை செய்வது என்றாலும் யோசித்து செய்வது நல்லது. முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் தான் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக புது மண தம்பதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி பிரச்சினை, மனைவிக்கு உடம்பு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.
இக்காலங்களில் ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு 13-04-2022 முதல் 22-04-2023 முடிய விரய ஸ்தாதனமான 12லும் அதன் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளில் ஏற்ற தாழ்வுகள் தான் இருக்குமே தவிர தாராள வரவுகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு உங்கள் கையில் இருப்பதை வைத்து செலவு செய்தால் நிலைமையை சமாளிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பது, வாக்குறுதி அளிப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கடினமாக முயற்சித்தால் தான் ஒரு சிறு செயலையும் செய்து முடிக்க முடியும். 2023 ஏப்ரலுக்கு பிறகு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் போது 5, 7, 9-ஆம் வீட்டை பார்க்கும் என்பதால் திருமண சுப காரிய முயற்சிகள் எளிதில் கைகூடும் யோகமும் பிள்ளைகள் மூலம் நற்பலனும் கிடைக்கும்.
ஒரு ராசியில் நீண்ட நாட்கள் சஞ்சரிக்கும் கிரகமான சனி உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் கவனமாக செயல்படுவது நல்லது. சிறிது காலம் சற்று பொறுமையுடன் இருப்பது உத்தமம். திருக்கணிதப்படி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை சனி அதிசாரமாக 11-ல் சஞ்சரிக்க இருப்பதும், அதன் பிறகு முழுமையாக வரும் 17-01-2023 முதல் சனி 11-ல் சஞ்சாரம் செய்யும் காலத்தில் தொழில் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் அதிகபடியான லாபத்தை அடையும் யோகமும், தொழிலை விருத்தி செய்யவும் முடியும். உத்தியோகஸ்தர்கள் திறமைகள் பாராட்டப்படும். உயர் பதவியை அடையும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். பல்வேறு வகையில் முன்னேற்றங்களை அடைய முடியும்.
உடல் ஆரோக்கியம்
உடல் நிலை சற்று சாதகமாக இருக்கும், குரு பார்வை 6, 8-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் கடந்த கால சோர்வுகள் விலகி நீங்கள் சற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் முன் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மனைவி பிள்ளைகளுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. வீண் குழப்பங்களால் மன நிம்மதி குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. பண வரவுகள் சற்று சாதகமாக இருப்பதால் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகம்
பணியில் வேலைபளு அதிகமாக இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருப்பதால் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து விட முடியும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு மனைவி பிள்ளைகளை விட்டு வெளியிடங்களில் தங்க நேரிடும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை. புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் 2023 ஜனவரிக்கு பிறகு உங்களுக்கு ஒரு உயர்வான நிலை காத்திருக்கிறது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் நற்பலனை பெறுவீர்கள். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே உங்கள் இலக்கை அடைய முடியும். தொழில் வளர்ச்சிக்காக அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தற்போது தவிர்த்து விட்டு இருக்கும் ஆடர்களை கை நழவாமல் பார்த்து கொள்வது நல்லது. சனி 2023 முதல் 11-ல் சஞ்சரிக்கும் காலத்தில் நல்லதொரு வளர்ச்சியை தொழிலில் அடைய முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கையாலும் போது ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்பட்டால் வீண் இழப்பை தவிர்க்க முடியும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் கவனமாக செயல்படுவது நல்லது. கடந்த கால வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். விரைவில் நல்ல மாற்றங்களை பெற முடியும்.
அரசியல்
உங்களது பெயர் புகழுக்கு எந்த விதத்திலும் குறை ஏற்படாது. கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். முன்கோபத்தை குறைத்து கொள்வது, மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உடன் பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது, பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாது இருப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக இல்லை என்றாலும் உங்கள் தேவைக்கு ஏற்றவாறு அமையும். தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையுடன் இருக்கவும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கு ஏற்ற விலை சற்று குறைவாக கிடைக்கும். பொருளாதார நிலை எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. நெருங்கியவர்களையும் பங்காளிகளையும் அனுசரித்து சென்றால் எதையும் சமாளித்து விட முடியும்.
கலைஞர்கள்
தகுந்த கதா பாத்திரங்கள் கிடைத்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். போட்டி, பொறாமைகள் அதிகமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உங்களிடம் இருக்கும். பணவரவுகள் சற்று சாதகமாக அமையும். அதிக அலைச்சலால் சுகபோக வாழ்க்கையில் சிறிது பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.
பெண்கள்
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்லவும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.
மாணவ- மாணவியர்
கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் நிலை மந்தமாக இருக்கும் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் கவனம் தேவை. பெரிய மனிதர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
ஜென்ம ராசியில் ராகு சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குரு 12-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் தேக்கங்கள் இருந்தாலும் சனி அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். 7-ல் சஞ்சரிக்கும் கேது குரு நட்சத்திரத்தில் இருப்பதால் உடனிருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்– மனைவி இடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
ஜென்ம ராசியில் ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில், 7-ல் கேது குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் உங்களது பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். புத்திரர்களால் நிம்மதி குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள்.—— தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
ஜென்ம ராசியில் ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில், 7-ல் கேது ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பணம் வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையில் இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். கூட்டாளிகளும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உங்கள் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
சர்ப கிரகமான ராகு ஜென்ம ராசியில் அசுவனி நட்சத்திரத்தில், 7-ல் கேது சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சனி லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும் நிலை கடந்த கால நெருக்கடிகள் விலகி ஏற்றங்களை அடையும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். வரும் 22-4-2023 முதல் ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்து 7-ஆம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
ஜென்ம ராசியில் ராகு அசுவனி நட்சத்திரத்தில், 7-ல் கேது சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது, சனி 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சற்று சாதகமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொழிலில் நல்ல முன்னேற்றம், வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். வரவேண்டிய லாபங்கள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நற்பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும்.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் ரிஷபம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for rishbam in Tamil
கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, சர்ப கிரகமான ராகு ஜென்ம ராசியில், கேது 7-ல் இது நாள் வரை சஞ்சரித்ததால் பல நிம்மதி குறைவுகளை குடும்பத்தில் சந்தித்து வந்த உங்களுக்கு தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் திருகணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகு ஜென்ம ராசிக்கு 12-ஆம் வீட்டிலும், கேது 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். இதனால் உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றங்கள் உறுதியாக ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் இணையும் நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் இருந்த மன கசப்புகள் விலகி சுமுக நிலை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உங்கள் பலம் அதிகரித்து இது வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக மறையும்.
ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சாரம் செய்ய உள்ளதால் பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியான வளர்ச்சியை அடைய முடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்க்கும் உயர்வினை அடையலாம்.
குரு வரும் 22-04-2023 முதல் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க உள்ளதால் இக்காலத்தில் பொருளாதார ரீதியாக சற்று தேக்கங்கள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
உங்கள் ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் நல்ல பலனை அடையும் யோகம் உண்டு. திருக்கணிதப்படி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும் அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் ஜீவன ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிக்க உள்ள காலத்தில் தொழில் வியாபாரத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். கடந்த கால அலைச்சல் டென்ஷன்கள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இருந்து வந்த மருத்துவ செலவுகள் மறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மன நிம்மதி உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
பண வரவுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்தியோகம்
பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதிலும் திறம்பட செயல்பட முடியும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருப்பதால் லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் புதிய ஆடர்கள் கிடைத்து லாபத்தை அடைய முடியும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள் என்றாலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும்.
அரசியல்
பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகுவதால் அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும் என்றாலும் கவனத்துடன் பேசுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பத்திரிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
கலைஞர்கள்
மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். வர வேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருந்தாலும் வர வேண்டிய நேரத்தில் கைக்கு கிடைக்கும். படப்பிடிப்பிற்காக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கார் பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பொன் பொருள் சேரும். தாய் வழி சொத்துக்களால் அனுகூலப்பலன்களை பெற முடியும்.
மாணவ மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக வெளியூர் செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளைப் பெறுவார்கள். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
உங்கள் ராசிக்கு 6-ல் கேது குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். கடந்த கால சோதனைகள் மறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். ராகு 12-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சீராகும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்களால் கிடைக்க வேண்டி உதவிகள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
ஜென்ம ராசிக்கு 6-ல் கேது, 9-ல் சனி, 11-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிமையான காலமாக இக்காலம் அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். ராகு 12-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை நீங்கள் அடைவீர்கள். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சினைகள் யாவும் குறையும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர் ஓரளவுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்யும் அளவிற்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்கள் உதவியாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபங்கள் கிடைக்கும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
கேது 6-ல் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். குரு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ராகு 12-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை விலகி அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் ஆதரவாக நடப்பதால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து கடன் சுமைகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
கேது சுவாதி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். குரு 11-ல் வரும் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு சாதகமான பலனைப் பெறுவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் 22-04-2023 முதல் குரு 12-ல் இருப்பதால் எதிர்பாராத சுப விரயங்கள் ஏற்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
கேது செவ்வாய் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். ——ராகு 12-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணங்கள் மேற்கொள்கின்ற போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் வெளி ஆட்களால் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. அதிக தொகை கொண்ட செயல்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வேலைபளு அதிகரிப்பதால் ஒய்வு நேரம் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் உங்களுக்கு கிடைப்பதால் மன நிம்மதி ஏற்படும்.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் மிதுனம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for mithunam in Tamil
மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நல்ல தீர்க்கமான சிந்தனையும், அறிவாற்றலும், நினைவாற்றலும் கொண்ட மிதுனராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 6, 12-ல் சஞ்சரித்த ராகு கேது தற்போது ஏற்பட உள்ள இடபெயர்ச்சியால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 11-ஆம் வீட்டிலும், கேது பகவான் 5-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். ராகு 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொண்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். கேது 5-ல் இருப்பதால் வயிறு பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடு, பூர்வீக சொத்து ரீதியாக பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் நிம்மதி குறைவு ஏற்படலாம். உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.
ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே இருப்பதை தக்க வைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். உழைப்பிற்கான பலனை அடைய இடையூறு ஏற்படும். சுப காரியங்கள் தாமதம் ஆகும். அசையா சொத்து வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.
10-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 22-04-2023 முதல் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குரு மாற்றத்திற்கு பிறகு பண வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் கிடைக்கும். எதிலும் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும்.
சனி 8-ல் சஞ்சரித்து உங்களுக்கு அஷ்டமச்சனி நடைபெறுவதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருக்கணிதபடி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும், அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் சனி 9-ல் சஞ்சரிக்க இருக்கும் இக்காலத்தில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நிலை, உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் விலகும் அமைப்பு உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் தீவிர முயற்சிக்கு பின்பு நல்லது நடக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படவும். பூர்வீக சொத்துக்கள் ரீதியாக சிறிது மன நிம்மதி குறைவு ஏற்படும்,
உத்தியோகம்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் உங்களது உடல் நிலை ஒத்துழைக்காது. எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப் பின் கிட்டும். பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளு குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்போது பயன்படுத்தி கொண்டால் 2023-ல் மிகவும் உயர்வான நிலையை அடைய முடியும்.
தொழில் வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் உங்களது உழைப்பு சற்று அதிகமாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சினைகளை சமாளிக்க முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். போட்டி பொறாமைகளால் மனநிம்மதி குறையும். நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். அதிக முதலீடு விஷயத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தற்போது சற்று பொறுமையுடன் இருந்தால் 2023-ல் தொழிலில் நல்ல முன்னேற்றங்களை அடையலாம்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனத்துடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்ற விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அரசியல்
மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பங்கம் ஏற்படாது. மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விவசாயிகள்
உழைப்பு அதிகமாக இருந்தாலும் பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து சென்றால் அவர்களது ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் தக்க நேரத்தில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் பங்காளிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
கலைஞர்கள்
கிடைத்த வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படவும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட திருமண சுப காரியங்களில் தடை விலகி கைகூடும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பண வரவுகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொண்டு உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
மாணவ மாணவியர்
கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகளால் பல நன்மைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் நற்பலன் கிடைக்கும்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
உங்கள் ராசிக்கு ராகு சூரியன் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத சில அனுகூலங்களை அடைவீர்கள். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். சனி வரும் 29-04-2022 முதல் அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள ஆரோக்கிய குறைப்பாடுகள் விலகி நல்லது நடக்கும். 5-ல் சஞ்சரிக்கும் கேது குரு நட்சத்திரத்தில் இருப்பதால் ஆன்மீக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமாக செயல்பட்டால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
உங்கள் ராசிக்கு 11-ல் ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில், 5-ல் கேது குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்ற படி இருந்தாலும், குரு 10-ல் சஞ்சரிப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும் என்றாலும் திருமணம் நடைபெறுவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமாக இருக்கவும். பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க தேவையற்ற இடையூறு ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. தடைபட்ட வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 11-ல் சஞ்சரிப்பதால் எந்த வித நெருக்கடிகளையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். சனி 8-ல், குரு 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமாக செயல்பட்டால் ஒரு சில முன்னேற்றங்களை அடைய முடியும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை உண்டாகும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. இயற்கை உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த வேண்டாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்து செல்லவும். கூட்டாளிகள் ஆதரவால் ஒரு சில ஆதாயங்களை அடைவீர்கள்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
சர்ப கிரகமான ராகு அசுவனி நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்து எல்லாம் நடக்கும். சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரும் 22-4-2023 முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகவும் சிறப்படையும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் சிறுசிறு மன கவலை ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
ராகு 11-ல் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். சனி 9-ல், குரு 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட முடியும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கேது 5-ல் சஞ்சரிப்பதால் பிள்ளைகளால் சிறுசிறு மன கவலை தோன்றும். திருமண சுப காரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்களின் வேலைபளு குறைந்து மன நிம்மதியுடன் பணியாற்ற முடியும்.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் கடகம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for kadagam in Tamil
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5, 11-ல் சஞ்சரித்த ராகு கேது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). கேது ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும், ராகு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதும், சனி 7-ல் சஞ்சாரம் செய்வதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. தேவையில்லாத அலைச்சல், வேலைபளு காரணமாக உடல் அசதி இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திப்பீர்கள்.
பொன்னவன் என போற்றப்படும் குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகம் உண்டு. குரு பார்வை 1, 3, 5 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும் யோகம், பிள்ளைகளால் இருந்த கவலைகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும் யோகம் வரும் நாட்களில் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ஆன்மீக தெய்வீக தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் கிடைப்பது மட்டுமின்றி தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்து செல்வது செல்வது மூலம் வீண் செலவுகளை தவிர்க்க முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் பணிகளை உங்கள் தனி திறமையால் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும், அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரித்து அஷ்டம சனி நடைபெற இருப்பதால் உங்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை உங்களுக்கு பல்வேறு அனுகூலமான பலன்கள் கிடைக்கும் யோகம் உண்டு என்றாலும் 22-04-2023 முதல் குரு 10-ல் சஞ்சரிக்க உள்ளதாலும் அக்காலத்தில் அஷ்டமச் சனியும் நடக்கும் என்பதால் நீங்கள் பொருளாதார ரீதியாக சற்று நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும். தொழில் வியாபாரதில் நீங்கள் கவனமாக செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும் என்பதால் உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். தேவையற்ற மனக்குழப்பங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது சற்று ஆறுதலை தரும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களது அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை சற்று குறைப்பது உத்தமம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளில் வரும் நாட்களில் நற்பலன் கிடைக்கும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலைபளு காரணமாக உடல் அசதி இருந்தாலும் கௌரவ பதவிகளை அடைய முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். பொருளாதாரநிலை மிக சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பாக முடிக்க முடியும். உயர் அதிகாரிகள் ஆதரவால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வரும் நாட்களில் சிறப்பாக வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து படிபடியான முன்னேற்றம் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் நீங்கள் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் சாதிக்கும் யோகம் உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவு சற்று சுமாராக இருக்கும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வெளியூர், வெளிநாடு மூலம் எதிர்பார்க்கும் லாபம் ஓரளவுக்கு கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் பொருளாதார அனுகூலம் உண்டு.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் சிறப்பாக இருக்கும் காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை அடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இழுபறி நிலை நிடித்தாலும் தக்க நேரத்தில் திரும்பி வரும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் கிடைக்கும். உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்து சென்றால் எந்த நெருக்கடிகளும் இன்றி அன்றாட செயல்களை செய்ய முடியும்.
அரசியல்
மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாவதால் அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். நீங்கள் எதிர்பார்க்கும் கௌரவ பதவிகள் தேடி வரும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும்- என்றாலும் பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உடன் பழகுபவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்து சந்தையில் விலை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். காய், கனி, பூ போன்றவற்றாலும் கால் நடைகளாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சில இடங்களில் நீர் வரத்து குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் கூலி ஆட்கள் ஒத்துழைப்பு நன்றாக இல்லாத காரணத்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.
கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் கடந்த கால கடன்கள் பைசல் ஆகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகபோக வாழ்வை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இசைத் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும்.
பெண்கள்
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயப்பலனை அடைய முடியும்.
மாணவ மாணவியர்
கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் நல்ல நண்பர்களை தோந்தெடுத்து பழகுவது உத்தமம். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
ராகு சூரியன் நட்சத்திரத்தில் 10-ல், கேது குரு நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே அனுகூலங்களை அடைய முடியும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையா சொத்து வழியில் சுப செலவுகள் உண்டாகும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலவும். கணவன்— மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் ஆதாயம் அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நி¬வேறும். பயணங்களால் அலைச்சல் அதனால் உடல் அசதி ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் மறைந்து தற்போது லாபத்தை ஈட்ட முடியும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 10-ல், கேது குரு நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்லவும். அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு இக்காலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகள் மூலம் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயரதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 10-ல், கேது ராகு நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலம் நல்ல செய்தி வரும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். நல்ல வாய்ப்புகள் கிடைத்து போட்ட முதலீட்டை உங்கள் தனி திறமையால் எடுத்து விட முடியும். கூட்டாளிகளையும் வேலையாட்களை அனுசரித்து சென்றால் நற்பலனை அடையலாம்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் 10-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது இயற்கை உணவுகளை உண்பது உடல் நலத்திற்கு நல்லது. வரும் 22-04-2023 வரை குரு 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம், பண வரவுகள் சாதகமாக இருக்கும் நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் சிறு பிரச்சினை என்றாலும் உடனே சிகிச்கை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். அரசு வழி அதிகாரிகள் செய்யும் கெடுபிடிகளால் செய்யும் தொழிலில் நிம்மதி குறையும். வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் காலம் என்பதால் அவர்களை கவனத்துடன் கையாள்வது நல்லது.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் 10-ல், கேது சித்திரை நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதாலும், சனி 8-ல், குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எடுத்த பணிகளை முடிப்பதில் இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கிடைக்கும் வாய்ப்புகளை தற்போதிய காலத்தில் பயன்படுத்தி கொள்வது நல்லது. நீங்கள் தொழிலுக்காக எதிர்பார்க்கும் பண உதவிகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் எடுத்த பணியை சரியான நேரத்தில் முடித்து விட முடியும்.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் சிம்மம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for simmam in Tamil
மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்மராசி நேயர்களே, சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு 4, 10-ல் சஞ்சரிக்கும் ராகு கேது தற்போது ஏற்படும் இடபெயர்ச்சி மூலம் திருக்கணிதப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் கேதுவும், 9-ஆம் வீட்டில் ராகுவும் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பாகும். ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முடிய உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். உங்களுக்கு இதுநாள் வரை இருந்த அலைச்சல்கள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கடந்த கால கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடைவதால் பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். சிலர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைவார்கள்.
ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு 8-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சற்று தேக்கம், சுபகாரியங்கள் கைகூட இடையூறுகள் ஏற்படும் என்றாலும் சனி, கேது சாதகமாக இருப்பதால் எதையும் சிறப்பாக கையாண்டு நற்பலனை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
வரும் 22-04-2023 முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். இக்காலத்தில் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருந்து உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் கைகூடுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்கள் தற்போது தடைப்பட்டாலும் 2023 ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கைகூடும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் யாவும் குறையும்.
உத்தியோகம்
பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை அடைய முடியும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும்,
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சிறப்பான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். போட்டி பொறாமைகள் மறையும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்கள் சற்று தாமதமாக வசூலாகும். பெரிய தொகைகளை கையாளும் போது சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய அனுகூலத்தை அடைய முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
அரசியல்
பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகளில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும் என்பதால் சிக்கனமாக செலவு செய்யவும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டு. பங்காளிகளிடம் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. கால் நடைகளால் எதிர்பாராத செலவுகளை எதிர் கொள்வீர்கள். கடன் சுமைகள் குறையும்.
கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமல் தடைபட்டு கொண்டிருந்த பணத்தொகைகள் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார் வீடு போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். இசை துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். கடன்களும் படிபடியாக குறையும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் கடந்த காலங்களில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஏப்ரல் 2023க்கு பிறகு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.
மாணவ மாணவியர்
நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்கள் ஏற்படும். படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
ராகு சூரியன் நட்சத்திரத்தில் 9-ல், கேது குரு நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். உங்கள் செயல்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். சனி அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். வேலையாட்களிடமும் கூட்டாளிகளிடமும் சற்று விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு கூடுதலாக இருக்கும். உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் சிறு வாய்ப்பை கூட தவற விடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 9-ல், கேது விசாக நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் பல்வேறு வகையில் அனுகூலமான பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். நல்ல வாய்ப்புகள் கிடைப்பதால் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணி புரிய முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
ராகு பரணி நட்சத்திரத்தில் 9-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் சற்றே ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைத்து உங்களுக்கு இருந்த பொருட்தேக்கங்கள் குறையும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். சிலருக்கு வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் 9-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குரு வரும் 22-04-2023 முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியகங்ளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்பு கரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். புதிய திட்டங்களை செயல்படுத்தி தொழிலில் லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழும் வாய்ப்பு ஏற்படும். வேலை தேடியவர்களுக்கு கௌவரமான இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று 9-ல், கேது செவ்வாய் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும். உங்களின் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். கடந்த கால பண பிரச்சினைகள் விலகி மன நிம்மதியுடன் வாழ முடியும். வாங்கிய கடன்களை பைசல் செய்ய முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும். கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல வளர்ச்சி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் கன்னி - Rahu Ketu Peyarchi Rasi Palan for kanni in Tamil
உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரித்த சர்ப கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). கேது 2-ஆம் வீட்டிலும், ராகு 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறைவு, ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் பொறுமையுடன் நடந்து கொண்டால் மட்டுமே ஏற்படும் சிறுசிறு சிக்கல்களை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.
உங்கள் ராசிக்கு 4, 7 ஆம் வீட்டிற்கு அதிபதியான குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை 7-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களது பொளாதார நிலை அற்புதமாக இருக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி அளிக்கும் நிகழச்சிகள் நடைபெறும். நவீன பொருட்கள், வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகம் சிலருக்கு உண்டாகும். எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்ட முதலீட்டை எடுப்பது மட்டுமின்றி தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு உண்டு. கூட்டாளிகளின் ஆதரவால் நற்பலன்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் சரியான நேரத்திற்கு கிடைக்காத காரணத்தால் நீங்கள் நேரடியாக சில நேரங்களில் வேலை செய்ய வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் அனுகூலங்களை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி வளர்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். வெளியூர் சென்று பணிபுரிய வேண்டும் என எண்ணியவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.
ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும் அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்க இருப்பது உங்களுக்கு மிக பெரிய அதிர்ஷடத்தை தரும் அமைப்பாகும்.
வரும் 22-04-2023 முதல் குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக சற்று தேக்கத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் வரும் 17-01-2023 முதல் சனி 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர் கொண்டு பல்வேறு வலமான பலன்களை அடைவீர்கள். சனி 6-ல் சஞ்சரிக்கும் காலம் என்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்குவது மட்டுமின்றி தொழில் வியாபாரம் லாபகரமாக இருந்து அனைத்து வகையிலும் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிகபெரிய பதவி கிடைக்கும். உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருந்து நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், அலர்ஜி ஏற்படலாம் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சில நேரங்களில் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது, மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். குரு சனி சாதக சஞ்சாரத்தால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு அழகிய குழந்தை கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.
உத்தியோகம்
செய்யும் பணியில் சில நிம்மதி குறைவுகளை சந்திக்க நேர்ந்தாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியிடங்களில் தங்கி பணிபுரிய நேரிடும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபங்களை பெற முடியும். வேலையாட்களால் சிறிது தொந்தரவு ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க முடியும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் லாபம் அடைய முடியும். கடன்கள் ஒரளவுக்கு குறையும்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களது சேமிப்பு அதிகரிக்கும். கொடுத்த பணத்தை வரும் நாட்களில் எளிதில் வசூல் செய்ய முடியும். உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். உற்றார் உறவினர்கள் பண விஷயத்தில் சிறிது நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.
அரசியல்
மக்களின் ஆதரவை நீங்கள் பெற முடியும். பெயர் புகழ் கௌரவ பதவிகள் தேடி வரும். பேச்சால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் எது பேசுவது என்றாலும் சிந்தித்து பேச்சினால் நற்பலனை அடைய முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தாராளமாக பலருக்கு உதவி செய்யும் வாய்ப்புகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் இருந்தாலும் உடல் நிலையில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். உடன் இருப்பவர்களிடமும் பங்காளிடமும் பேச்சில் கவனத்துடன் இருப்பதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. காய்கனிகளாலும், கால்நடைகளாலும் லாபத்தை அடைய முடியும்.
கலைஞர்கள்
உங்கள் உழைப்பிற்கான பலனை பெற முடியும். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகள் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். இழந்தவற்றை மீட்க கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சல்கள் இருந்தாலும் அதனால் ஆதாயம் இருக்கும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும். மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, கணவர் வழி உறவினர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் அற்புதமாக இருப்பதால் நவீன பொருட்களை வாங்குவீர்கள். தாய் வழி சொத்துகளால் நற்பலன் கிடைக்கும்.
மாணவ மாணவியர்
கல்வியில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றாலும் உடல் சோர்வு ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் நற்பெயர் எடுக்க முடியும். உங்கள் தனி திறமைகளை வெளிகாட்டி பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போதும் நிதானம் தேவை.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
ராகு சூரியன் நட்சத்திரத்தில் 8-ல், கேது குரு நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குரு 7-ல் சஞ்சரிப்பதாலும், வரும் 29-04-2022 முதல் சனி 6-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உண்டு. எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதனால் பொருளாதார அனுகூலம் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்பை அடைய முடியும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
ராகு பரணி நட்சத்திரத்தில் 8-ல், கேது குரு நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. குரு 7-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் நன்றாக இருந்து உங்கள் வாழக்கை தரம் உயரும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். உங்கள் மீது இருந்த வீண் பழி சொற்கள் விலகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வேலையாட்களின் உதவி குறைவாக இருப்பதால் உங்களுக்கு பணி சுமை அதிகரித்து ஒய்வு நேரம் குறையும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 8-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. குரு 7-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். புதிய திட்டங்களை போட்டு அதன் மூலம் பொருளாதார மேன்மைகளை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் 8-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதால் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. குரு வரும் 22-04-2023 வரை 7-ல் சஞ்சரிப்பதால் பண வரவுக்கு பஞ்சமிருக்காது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தகுதி வாய்ந்த வேலையாட்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் வீண் இழப்புகளை தவிர்க்க முடியும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று 8-ல், கேது சித்திரை நட்சத்திரத்தில் 2-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய தாமதநிலை ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். எதையும் எதிர் கொள்ளும் திறன் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் நல்ல லாபங்களை அடைவீர்கள். உங்கள் தனி திறமையால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். நீங்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் துலாம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for thulam in Tamil
சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
முன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 8-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்களான ராகு கேது வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்படும் சிறு சிறு சிக்கல்களை எதிர் கொள்ள முடியும். கடந்த கால உடல் நிலை பாதிப்பு விலகும் என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சற்று சாதகமாக இருக்கும் நிலை, பெற்றோர்களின் ஆதரவு மூலம் குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு உண்டாகும்.
சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி 17-01-2023 வரை 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம நடப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறு, அசையும் அசையா சொத்து வழியில் சுப செலவுகள் ஏற்படும்.
ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு 6-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைபளு அதிகமாக இருப்பதால் உடல்நிலை சோர்வடையும். எடுக்கும் பணிகளை திறம்பட செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மூலம் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.
அர்த்தாஷ்டம சனி நடைபெற்றாலும் வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும், அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் சனி 5-ல் சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமாக அமைப்பு என்பதால் உங்களுக்கு உள்ள அலைச்சல்கள் குறையும். தற்போது சில நெருக்கடிகளை நீங்கள் எதிர் கொண்டாலும் வரும் 22-04-2023 முதல் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தாராள தன சேர்க்கை உண்டாகும்.
சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி 17-01-2023 வரை 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம நடப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறு, அசையும் அசையா சொத்து வழியில் சுப செலவுகள் ஏற்படும்.
ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு 6-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைபளு அதிகமாக இருப்பதால் உடல்நிலை சோர்வடையும். எடுக்கும் பணிகளை திறம்பட செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மூலம் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.
அர்த்தாஷ்டம சனி நடைபெற்றாலும் வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை அதிசாரமாகவும், அதன் பின்பு முழுமையாக 17-01-2023 முதல் சனி 5-ல் சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமாக அமைப்பு என்பதால் உங்களுக்கு உள்ள அலைச்சல்கள் குறையும்.
தற்போது சில நெருக்கடிகளை நீங்கள் எதிர் கொண்டாலும் வரும் 22-04-2023 முதல் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தாராள தன சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் விலகி அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தேடி வரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்லது நடக்கும்.
உடல் ஆரோக்கியம்
உடல் நிலையில் கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உங்களின் விடா முயற்சியால் எதையும் எதிர் கொள்வீர்கள். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். தூர பயணங்கள் உங்களுக்கு அலைச்சலை தந்தாலும் அதனால் பொருளாதார அனுகூலங்கள் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின்பு நற்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள் உண்டாகும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் எதிலும் திறமையுடன் செயல்பட முடியும் என்றாலும் அதற்கான சன்மானம் குறைவாக கிடைக்கும். வேலைபளு அதிகரிப்பதால் உடல் அசதி ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகள் தாமதம் ஆகும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமாக இருந்தால் நல்ல நிலையை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் 2023-ல் உயர்வான நிலையை அடைய முடியும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வது நல்லது. போட்டிகள் அதிகமாக இருப்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வளமான பலனை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் அவர்களை கலந்தாலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பதும் நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் மேன்மைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க இடையூறுகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
அரசியல்
உங்கள் முன் கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்து செல்வது உத்தமம். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயர் எடுப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்வதால் உங்கள் கையிருப்பு குறையும். தூர பயணங்கள் காரணமாக உடல் அசதி ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் நன்றாக இருந்தாலும் அதற்கான விலை கிடைக்க இடையூறுகள் ஏற்படும். உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை பெற தடங்கல்கள் உண்டாகும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டாலும் எதையும் தனித்து நின்று சமாளித்து விடுவீர்கள். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பங்காளிகளிடம் பேச்சை குறைக்கவும்.
கலைஞர்கள்
எதிலும் திறமையுடன் செயல்படுவீர்கள் என்றாலும் போட்டிகள் காரணமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமல் இருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபட முடியும். வெளியூர் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் அதனால் அலைச்சல் ஏற்படும். பத்திரிக்கைகளில் வரும் கிசுகிசுக்களால் மனநிம்மதி குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் ஓரளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண சுபகாரியங்கள் கைகூட உடன் இருப்பவர்களே இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். கணவன்- மனைவி இடையே அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது.
மாணவ மாணவியர்
கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். தேவையற்ற பொழுது போக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச் செல்லும். போட்டி தேர்வுகளில் சற்று கவனமுடன் செயல்படுவதும், உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதும் நல்லது. கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
ஜென்ம ராசியில் கேது குரு நட்சத்திரத்தில், 7-ல் ராகு சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 6-ல் குரு சஞ்சரிப்பதாலும் பண விஷயத்தில் நெருக்கடி நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உழைப்பிற்கான சன்மானம் தற்போது கிடைக்காது. வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலையாட்கள் மூலம் வீண் பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரிடும். தொழிலில் ஏற்படும் மறைமுக எதிர்ப்பு காரணமாக நீங்கள் அடைய வேண்டிய லாபங்கள் தடைப்படும். வெளி நபர்களிடம் தொழில் விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
ஜென்ம ராசியில் கேது குரு நட்சத்திரத்தில், 7-ல் ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 4-ல் சனி, 6-ல் குரு சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்து வழியில் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மன அமைதி குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறு உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஏற்பட கூடிய வாக்கு வாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமத நிலை ஏற்படும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்க மாட்டார்கள் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக வேலை செய்தால் தான் எடுத்த பணியை முடிக்க முடியும். அரசு வழியில் ஏற்படும் கெடுபிடியால் தொழிலில் நிம்மதியுடன் பணிபுரிய முடியாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருக்கும். தேவையற்ற வீண் பழி சொல்லை எதிர் கொள்ள நேரிடும். சக ஊழியர்கள் உதவியால் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பீர்கள்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
ஜென்ம ராசியில் கேது சுவாதி நட்சத்திரத்தில், 7-ல் ராகு பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 4-ல் சனி, 6-ல் குரு சஞ்சரிப்பதாலும் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வீண் செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் விட்டு கொடுத்து செல்லவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அன்றாட செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். வண்டி, வாகனங்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். வேலைபளு காரணமாக மன நிம்மதி குறையும். நீங்கள் எதிர்பார்க்கும் பொருளாதார உதவிகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்ற கூடும். வேலைபளு அதிகரித்து மற்றவர்கள் பணியை நீங்கள் எடுத்து செய்ய நேரிடும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்ல நிலையை அடைய முடியும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
ஜென்ம ராசியில் கேது சுவாதி நட்சத்திரத்தில், 7-ல் ராகு அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரும் 22-04-2023 முதல் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் தற்போது உள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து தாராள தன வரவு, குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்புகள் உண்டு. முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை மறைந்து லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். வரும் நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து பணியில் நிம்மதியுடன் பணி புரிய முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புதிய வேலைவாய்ப்பு கிடைத்து மன நிம்மதி ஏற்படும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள். இதுவரை இருந்த பொருட் தேக்கங்கள் விலகி கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். புதிய ஆடர்கள் கிடைத்து உங்களுக்கு உள்ள தொழில் பிரச்சினைகள் படிப்படியாக விலகும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
ஜென்ம ராசியில் கேது செவ்வாய் நட்சத்திரத்தில், 7-ல் ராகு கேது நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் சனி 5-ல், குரு 7-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் குறைந்து சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். நல்ல வரன்களும் தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். நல்ல வேலையாட்கள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் நற்பலனை அடைய முடியும். நீண்ட நாட்களாக வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் மூலம் நல்ல செய்திகள் வரும்.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் விருச்சிகம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for viruchigam in Tamil
விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 1, 7-ல் சஞ்சரித்த சர்ப கிரகங்கள் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகு 6-ஆம் வீட்டிலும், கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பது சிறப்பான அமைப்பாகும். உடல் நிலை சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிலும் நிதானத்துடன் செயல்பட்டு இருக்கும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். சமுதாயத்தில் கௌரவ பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கடந்த கால கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருங்கியவர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்திகரமாக அமைந்து ஏற்றங்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படும்.
ராகு 6-ல் சஞ்சரிப்பது மட்டுமில்லாமல் ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 17-01-2023 முடிய 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும் தைரியத்துடன் செயல்படும் திறன், உங்களின் நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் வரும் நாட்களில் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான குரு பஞ்சம ஸ்தானமான 5-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சாரம் செய்வது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருந்து கடன்கள் யாவும் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் யாவும் தடையின்றி கைகூடும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வர். உயர் அதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மனநிம்மதியை ஏற்படுத்தும். உங்களுக்கு இருந்த நீண்ட நாள் நெருக்கடிகள் விலகி திறமைகளை வெளிகாட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
சனி வரும் 17-01-2023 முதல் 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் அர்த்தாஷ்டம சனி நடைபெற இருப்பதாலும், குரு வரும் 22-04-2023 முதல் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதாலும் இக்காலத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடி, தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ராகு 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்த சொல்ல முடியாத பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாகவும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவதால் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். பூமி, மனை வாங்கும் யோகம் வரும் நாட்களில் உண்டு.
உத்தியோகம்
பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களை அடைய முடியும். எடுக்கும் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வரும் நாட்களில் உயர்வான நிலையை எட்ட முடியும். சக நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த கால நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்து மன நிம்மதி அடைவீர்கள். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். வெளியூர் தொடர்புகளால் மேன்மைகளை அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சாதகமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை கையாண்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பல பொது நல காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
அரசியல்
பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமான அனுகூலங்கள் கிடைக்கும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைவரையும் திருப்திபடுத்த முடியும். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் பண வரவுகள் சிறப்பாக அமையும். நீர் வரத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடு வரும் நாட்களில் குறையும். நவீன முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் உண்டு. உறவினர்களின் ஆதரவு மனநிம்மதியை தரும்.
கலைஞர்கள்
எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று உங்களின் நடிப்புத் திறன் வெளிச்சத்திற்கு வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுகளால் மனநிறைவு உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. புதிய முதலீடுகளில் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் சற்று குறையும். இசைத்துறையில் உள்ளவர்களுக்கும் சாதிக்க கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்கள்
உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமணம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி, உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
மாணவ மாணவியர்
உங்களுக்கு இருந்த மந்த நிலை முழுமையாக விலகி கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். போட்டி தேர்வுகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். மேற் கல்விக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், குரு 5-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்து எல்லாம் நடக்கும். கேது 12-ல் குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணங்கள் மூலம் நல்லது நடக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்பதால் உங்கள் கடன் பிரச்சினைகள் குறையும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பணி சுமை குறைந்து நிம்மதியுடன் பணி புரிய முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலம் நல்ல செய்தி வரும். எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைய முடியும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
ராகு பரணி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், சனி 3-ல் குரு 5-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பயன்படுத்தி வளர்ச்சி அடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் கிடைத்து உங்கள் வாழக்கை தரம் உயரும். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் சனி, 5-ல் குரு சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள் நடக்கும். 12-ல் கேது ராகு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் தூர பயணங்கள் மூலம் அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் அனுகூலம் கிடைக்கும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உடல் நிலை சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். வேலையாட்கள் உதவியாக இருப்பதால் பெரிய ஆடரை கூட எளிதில் கையாண்டு நல்ல லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறைந்து நிம்மதியுடன் தொழில் செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைபளு குறைவது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வரும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதாலும், வரும் 22-04-2023 முடிய குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக வளமான பலன்கள் கிடைக்கும். சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வண்டி வாகனங்கள் மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் அவர்களே தேவையற்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். தொழிலாளர்களும் கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவார்கள். பயணங்களால் சாதகப்பலன் அமையும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும் இட மாற்றம் கிடைக்கும். உங்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். உங்கள் மீது இருந்த வீண் அவபெயர் விலகும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதால் உங்கள் உழைப்பால் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 6-ல் குரு, 12-ல் கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் பண விஷயத்தில் நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அலைச்சல் காரணமாக உடல் அசதி உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகி குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்க பெறும் என்றாலும் தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்ளவும்.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் தனுசு - Rahu Ketu Peyarchi Rasi Palan for thanus in Tamil
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6, 12-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்கள் தற்போது ஏற்படும் ராகு- கேது பெயர்ச்சி மூலம் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). உங்கள் ராசிக்கு ராகு 5-லும், கேது 11-லும் சஞ்சரிக்க உள்ளனர். நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்து ரீதியாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது சிந்தித்து பேசுவது நல்லது. எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள்.
உங்கள் ராசிக்கு தற்போது 2-ல் சனி சஞ்சரிப்பதால் சிறிது காலத்திற்கு பேச்சில் பொறுமையுடன் இருக்கவும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவைற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்கள் ராசியாதிபதி குரு 4-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தற்போது இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
தொழில் வியாபாரத்தில் தற்போது உள்ள வாய்ப்புகளை தக்க வைத்து கொண்டு நீங்கள் சற்று கடினமாக உழைத்தால் படிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை 3-ல் அதிசாரமாக சஞ்சரிக்க இருக்கும் காலத்தில் உங்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அடையும் யோகம் உண்டு. வரும் 17-01-2023 முதல் சனி உங்கள் ராசிக்கு 3-ல் திருக்கணிதப்படி சஞ்சரிக்க இருப்பதால் ஏழரைச்சனி முழுமையாக முடிந்து உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். அது மட்டுமில்லாமல் குரு 22-04-2023 முதல் 5-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும்.
வரும் 2023-ல் உங்கள் வாழ்வில் மிகபெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமாகன சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபரத்தில் நல்ல முன்னேற்றம், இருந்த நெருக்கடிகள் விலகி அனைத்து வகையிலும் லாபங்கள் கிடைக்கும். தற்போது உள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி சேமிக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை மேன்மை அடையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோக ரீதியாக இருந்த பணி சுமைகள் விலகி உங்கள் திறமைகள் பாராட்டப்படும். உயர் பதவிகள் கிடைக்கும் யோகம், எதிர்பார்த்த இடமாற்றங்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த மன கவலைகள் விலகி சமுதாயத்தில் கௌரவமான நிலையை எட்ட முடியும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் இருந்தாலும் எதையும் சமாளித்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். சிறு பாதிப்பு என்றாலும் உடனே அதற்கு சிகிச்சை எடுப்பது நல்லது. நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். ஜனவரி 2023 முதல் உங்கள் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். சிலருக்கு வயிறு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது.
குடும்பப் பொருளாதார நிலை
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறிது மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பக்குவமாக கையாளுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் ரீதியாக உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடுகளுக்கு வாய்ப்பு இருப்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் சற்று சாதகமாக இருக்கும். 2023 ஜனவரிக்கு பிறகு உங்களுக்கு உள்ள அனைத்து பிரச்சினைகளும் விலகி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள்.
உத்தியோகம்
பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் சற்று தாமதமாக கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மன நிம்மதியை தந்தாலும் சக நண்பர்களிடம் சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் 2023 ஜனவரிக்கு பிறகு மிக பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றங்கள் இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உங்கள் செயல்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகளை மட்டும் அனுசரித்து செல்வது நல்லது. தற்போது சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் 2023 ஜனவரி முதல் தொழிலில் சிறப்பான நிலையை அடைவீர்கள்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் ஆதாயம் கிடைக்கும். பெரிய தொகைகளை கையாள்வதை தற்போதிய காலத்திற்கு தள்ளி வைக்கவும். 2023 ஜனவரிக்கு பிறகு உங்கள் பிரச்சினைகள் குறைந்து நல்ல லாபத்தை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். கொடுத்த கடன்கள் சற்று தாமதமாக வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
அரசியல்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு உயர் பதவிகள் ஜனவரி 2023-ல் கிடைக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவு அதிகரிக்கும். பத்திரிக்கையாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். கூலியாட்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். கால் நடைகளால் அனுகூலம் உண்டாகும்.
கலைஞர்கள்
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள் உழைப்பிற்கான பலன் தற்போது கிடைக்காக விட்டாலும் விரைவில் நல்ல நிலை அடைவீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு இடையூறு ஏற்படும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். படப்பிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். சிலருக்கு கர்பபை சம்மந்தபட்ட பாதிப்பு ஏற்படலாம் என்பதால் உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் சற்று அனுசரனையாக நடந்து கொள்வது நல்லது. 2023 ஜனவரிக்கு பிறகு அனைத்து வகையிலும் மகிழ்ச்சி குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். மேற்படிப்பிற்காக வெளியூர் செல்வீர்கள். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்வீர்கள்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
உங்கள் ராசிக்கு 5-ல் ராகு கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 4-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக சில ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் கேது 11-ல் ராசியாதிபதி குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், சனி 3-ல் வரும் 29-04-2022 முதல் அதிசாரமாக சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். உங்களின் கடன் பிரச்சினைகள் சற்று குறைந்து நிம்மதி ஏற்படும். பின்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை இருத்தாலும் பொருட் தேக்கங்கள் விலகி படிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திப்பீர்கள்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
உங்கள் ராசியாதிபதி குரு நட்சத்திரத்தில் கேது 11-ல் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். சனி 2-ல், குரு 4-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. ராகு 5-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ஒரு சில அனுகூலங்கள் கிடைக்கும் என்றாலும் பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
கேது 11-ல் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு நற்பலனை பெறுவீர்கள். குரு 4-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபங்களை அடைய முடியும். சனி 2-ல் சஞ்சரிப்பதாலும், ராகு 5-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். குடும்பத்தில் அடிக்கடி சிறு சிறு தேவையற்ற ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்து கொள்வார்கள் என்பதால் சிந்தித்து பேசுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலமானப் பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தற்போது தள்ளி வைக்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். பணிசுமை காரணமாக அதிக அலைச்சலை எதிர் கொள்ள நேரிடும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
உங்கள் ராசிக்கு 11-ல் கேது சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும். 3-ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். எல்லா வகையிலும் அனுகூலங்கள் கிடைக்கும். ராகு 5-ல் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இயற்கை உணவுகளாக எடுத்து கொண்டால் உடல் நலம் நன்றாக இருக்கும். வரும் 22-04-2023 முதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைவது மட்டுமில்லாமல் கடந்த கால கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபம் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள். உங்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து நல்ல பதவியை அடையும் யோகம் உண்டு. நீண்ட நாட்களாக வராது இருந்த சம்பளபாக்கி வந்து மகிழ்ச்சி ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தேடி வரும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
உங்கள் ராசிக்கு கேது 11-ல் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும். சனி 3-ல், குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் இருந்த அனைத்து விதமான சோதனைகளும் மறைந்து மிகபெரிய வளர்ச்சியை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும்.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் மகரம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for makaram in Tamil
உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5, 11-ல் சஞ்சரித்த நிழல் கிரகங்கள் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகு ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டிலும், கேது 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதே நேரத்தில் சனி ஜென்ம ராசியில் 17-01-2023 முடியவும் அதன் பிறகு 2-லும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெற இருப்பதும், குரு உங்கள் ராசிக்கு 3-ல் 13-04-2022 முதல் 22-04-2023 வரையும் அதன் பின்பு 22-04-2023 முதல் 4-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, சிறு பிரச்சினை என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. தேவையற்ற மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள மருத்துவ காப்பிடு எடுப்பது உத்தமம்.
பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்போதிய காலத்தில் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் கை இருப்பை கொண்டு செலவு செய்வதும் கடன் வாங்குவதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
உங்கள் ராசிக்கு 22-04-2023 முடிய 3-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 7, 9, 11-ஆம் வீடுகளை பார்ப்பதால் பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், கணவன்- மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். அழகிய குழந்தையை பெறும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.
தொழில் வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்கும். இருக்கும் வேலையாட்கள் சரியாக ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதால் நீங்கள் எதிலும் முன் நின்று செயல்பட்டால் மட்டுமே தொழிலில் அன்றாட செயல்களை சிறப்பாக செய்ய முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அவர்களை சார்ந்து செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தள்ளி வைப்பது நல்லது அப்படி செய்ய வேண்டும் என்றால் அதனை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. தற்போது இருக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டால் 17-01-2023 முதல் சனி 2-ம் வீட்டிற்கு சென்ற பிறகு தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். நீங்கள் எடுக்கும் பணிகளை சற்று தாமதமாக செய்து முடிந்தாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் உழைப்பிற்கான ஊதியம் தற்போது கிடைக்கா விட்டாலும் பணியில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். சக ஊழியர்களை சற்று அனுசரித்து சென்றால் பணியில் நிம்மதியுடன் இருக்க முடியும். முடிந்த வரை கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் எந்த பணியிலும் முனைப்புடன் செயல்பட்டால் 2023 ஜனவரிக்கு பிறகு நல்ல வளர்ச்சியை அடைய முடியும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி குறையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கடினமாக உழைத்தால் தான் நற்பலனை அடைய முடியும்.
குடும்பம் பொருளாதாரநிலை
பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களை உற்றார் உறவினர்கள் தவறாக எடுத்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு சுப செலவுகளை சந்திப்பீர்கள்.
உத்தியோகம்
எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகமாக இருக்கும் என்பதால் மனநிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் நிலை காரணமாக எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேன்மைகள் அடைவீர்கள் என்றாலும் அதிக அலைச்சல் இருக்கும். தொழில் சிறப்பாக இருந்தாலும் மறைமுக பிரச்சினைகளால் அனைத்து விஷயத்திலும் அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். உடனிருப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். தூர பயணங்களை தவிர்க்கவும்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வாங்குவதற்கு பலமுறை அலைந்து தான் வாங்க முடியும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதராயம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு மன ஆறுதலை தரும்.
அரசியல்
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் பணியில் சுனக்கம் ஏற்படும். எதிலும் நீங்களே முன் நின்று செயல்பட வேண்டிய நிலை இருப்பதால் ஒய்வு இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். பங்காளிகளை பகைத்து கொள்ளாமல் இருப்பது, தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
கலைஞர்கள்
எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் சுகவாழ்விற்கு இடையூறு தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருக்கவும். மண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருக்கும்.
மாணவ- மாணவியர்
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
ராகு சூரியன் நட்சத்திரத்தில் 4-ல், கேது குரு நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகளை ஏற்படும். ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் காலம் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை குறைக்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் மனநிம்மதி குறையும். எதிலும் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் தான் போட்ட முதலை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு கூடுதலாக இருக்கும் என்பதால் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
ராகு சுக்கிரன் நடசத்திரத்தில் 4-ல், கேது குரு நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதும், ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள், வாக்கு வாதங்கள் போன்றவை தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதற்கான சூழ்நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க முடியும். நீங்கள் எதிர்பார்க்கும் பொருளாதார உதவிகள் தாமதப்படுவதால் தொழிலில் சற்று நெருக்கடியுடன் அன்றாட செயல்களை செய்ய நேரிடும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
ராகு பரணி நட்சத்திரத்தில் 4-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர் நீச்சல் போட வேண்டிய காலமாகும். ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது கை இருப்பை கொண்டு செலவு செய்வது நல்லது. பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கணவன்- மனைவி தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்த்து விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்ற கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்போது தவிர்ப்பது நல்லது. அரசு வழி அதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் 4-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பல்வேறு வகையில் வேலைபளு அதிகரித்து சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிக்கும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சை குறைத்து கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. முன் கோபத்தால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் நீங்கள் எடுக்கும் பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து நற்பெயர் எடுக்க முடியும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு வெகு தூரம் சென்று பணிபுரியும் நிலை ஏற்படும். அசையா அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திப்பீர்கள்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
ராகு கேது நட்சத்திரத்தில் 4-ல், கேது செவ்வாய் நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சனி 2-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. குரு 4-ல் சஞ்சரித்து 8, 10-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் இருந்த உடம்பு பாதிப்புகள் குறையும் அமைப்பு, தொழில் ரீதியாக படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகளால் உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய வலிமையை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் கும்பம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for kumbam in Tamil
அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 4-லும், கேது 10-லும் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ராகு ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும், கேது 9-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். கடந்த கால அலைச்சல் டென்ஷன் எல்லாம் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலருக்கு வெளியூர் பயணங்களால் மேன்மைகள் ஏற்படும். அன்றாட செயல்களில் திறம்பட ஈடுபடுவீர்கள். கடந்த கால வீண் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் ஏற்படும். பிரிந்த சொந்தங்களும் தேடி வந்து நட்பு பாராட்டும். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தினை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி பெரிய மனிதர்களின் ஆதரவுகளைப் பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். கடந்த காலங்களில் இருந்த பொருட்தேக்கங்கள் குறைந்து லாபகரமான பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.
உங்கள் ராசியாதிபதி சனி தற்போது 12-ல் சஞ்சரிப்பதாலும் வரும் 17-01-2023 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது, அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
குரு வரும் 22-04-2023 முதல் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கமாக நிலை இருக்கும் என்றாலும் ராகுவின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து முன்னேற்றங்களை அடைவீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். மருத்துவச் செலவுகள் சற்று குறையும். வீண் செலவுகளை எதிர் கொள்ள மருத்துவ காப்பிடு எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பன் கிடைக்கும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களிடம் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்தியோகம்
கடந்த கால தடைகள் விலகி பணியில் பதவி உயர்வுகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். இருக்கும் இடத்தில் கௌரவமும் பெயர் புகழும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். அலைச்சல்கள் குறைந்து எதிலும் நிம்மதியாக இருக்க முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும் என்பதால் வேலைபளு சற்று அதிகரிக்கும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் சற்று குறையும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனம் தேவை.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
அரசியல்
பெயர் புகழ் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெயர் புகழ் உயர்வடையும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய பணவரவுகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ மிக்க பதவிகள் தேடி வரும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைப்பதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். கூலியாட்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு கிடைக்க மாட்டார்கள் என்பதால் நீங்கள் எதிலும் நேரடியாக செயல்பட வேண்டி இருக்கும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும்.
கலைஞர்கள்
திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையில் இருந்த பணத் தொகைகள் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். படபிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். நேரத்திற்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியதுவம் தருவது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இயற்கை உணவுகளை எடுத்து கொண்டால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலம் ஏற்படும்.
மாணவ மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 2-ல் குரு ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி கடந்த கால சோதனைகள் மறைந்து வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கேது விசாக நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் உடம்பு பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் குரு 6, 8-ஆம் வீடுகளை பார்ப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்கான நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில்- வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். உங்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து மன நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளை பெற முடியும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
ராகு தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு 2-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் நீங்கள் பல்வேறு வலமான பலன்களை பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் சனி 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கேது குரு நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
ராகு பரணி நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு 2-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்கள் வெற்றி பெற்று சமுதாயத்தில் உயர்வான நிலையை அடைவீர்கள். ஏழரைச்சனி நடப்பதால் அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது, குறிப்பாக வேலை பளுவை குறைத்து கொள்வது நல்லது. கேது சுவாதி நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் அனுகூலம் கிடைக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில்- வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் 3-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்தால் நீங்கள் எதிலும் தைரியத்துடன் செயல்பட முடியும். குரு வரும் 22-04-2023 முடிய 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவிற்கு பஞ்சம் இருக்காது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் நலத்திற்கு முக்கியதும் தருவது நல்லது. அலைச்சல் டென்ஷன் காரணமாக உடல் அசதி ஏற்படும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். புதிய வாய்ப்புகள் கிடைத்து தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து மன நிம்மதி அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் பெற முடியும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், கேது செவ்வாய் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதாலும் எதிர் நீச்சல் போட்டாவது நன்மைகளை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. முடிந்த வரை தூர பயணங்களை தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டு. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும். தொழில்- வியாபாரத்தில் ஒரு சில அனுகூலம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். சிறுசிறு நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். சக ஊழியார்கள் உதவி கிடைப்பதால் எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் மீனம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for meenam in Tamil
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 3, 9-ல் சஞ்சரித்த ராகு, கேது தற்போது ஏற்படும் மாறுதலால் திருக்கணிப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). சர்ப கிரகங்களான ராகு உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளதால் வரும் நாட்களில் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது, சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது உத்தமம்.
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி 17-01-2023 வரை சஞ்சரிப்பதால் சனியின் சாதக சஞ்சாரத்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலனை அடைய முடியும். புதிய உக்திகளை பயன்படுத்தி சமுதாயத்தில் நல்ல நிலையை எட்ட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல நிலையும், கௌரவ பதவியை அடையும் வாய்ப்பும் உண்டாகும்.
சனி வரும் 17-01-2023 முதல் 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனி தொடங்குவதால் சனி மாற்றத்திற்கு பிறகு ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
உங்கள் ராசியாதிபதி குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து 5, 7, 9- ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் சுப காரியங்களில் நிலவிய தடைகள் விலகி நல்லது நடக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் எதிலும் சற்று சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
வரும் 22-04-2023 முதல் குரு 2-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் அக்காலத்தில் ஏழரைச்சனி நடைபெற்றாலும் பண வரவுகளில் அனுகூலங்கள் ஏற்படும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்லது நடக்க கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் சற்று முன்னேற்றங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் உள்ள பிரச்சினைகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பதும் இயற்கை உணவுகளை எடுத்து கொள்வதும் நல்லது. தூர பயணங்களை தவிர்க்கவும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப்பலன்களை அடைய முடியும்.
உத்தியோகம்
எடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தவற விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. புதிய நபர்களிடம் பேசும் போது பேச்சில் சிந்தித்து பேசுவது உத்தமம். தொழிலில் படிப்படியான வளர்ச்சியை அடையும் யோகம் உங்களுக்கு இருந்தாலும் உடல் நலத்திற்கு சற்று நேரம் ஒதுக்குவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் வசூல் செய்து விட முடியும். வம்பு வழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் மன நிம்மதி கிடைக்கும்.
அரசியல்
மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொது இடங்களில் பேசும் போது பேச்சில் கவனமாக இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். சந்தையில் விளை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். தக்க நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பங்காளிகளை அனுசரித்து செல்வது மூலம் எதையும் எதிர் கொள்ள முடியும்.
கலைஞர்கள்
உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து திறமைகளை வெளிபடுத்த முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களது சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக இருக்கும். அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். கடன்களை பைசல் செய்ய முடியும். போட்டிகள் அதிகம் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும்.
பெண்கள்
கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, கணவர் வழி உறவினர்களிடம் பேச்சில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
மாணவ மாணவியர்
கல்வியில் கவனமாக செயல்பட்டால் தான் முன்னேற்றத்தை அடைய முடியும். திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்றாலும் படிப்பிற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். தனி திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை
ராகு சூரியன் நட்சத்திரத்தில் 2-ல், கேது குரு நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது உடல் ஆரேக்கியத்திற்கு முக்கியதும் தருவது நல்லது. குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பண வரவில் சற்று நெருக்கடிகள் இருக்கும் என்பதால் சிக்கனமாக செயல்படவும். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய வாய்ப்பு உண்டு. அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது சிறப்பு. கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் தொழிலில் அனுகூலங்களை அடைய முடியும். வங்கி மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். வேலைபளு அதிகரித்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை
ராகு பரணி நட்சத்திரத்தில் 2-ல், கேது குரு நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. குரு பார்வை 7-ம் வீட்டிற்கு இருப்பதால் சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் பொறுமையுடன் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சனி 11-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தற்போது கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில்- வியாபாரத்தில் இருந்த நெருக்கடி குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சுமாராக இருந்தாலும் புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் கடந்த கால பொருட் தேக்கங்கள் குறையும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும்.
ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை
ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 2-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க முடியும். சனி 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்த வரை மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் சுப செலவுகள் ஏற்படலாம். தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் இல்லாமல் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். கூட்டாளி மற்றும் தொழிலாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு கூடுதலாக இருக்கும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் 2-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் பிரச்சினைகள் ஏற்படும். குரு வரும் 22-04-2023 முதல் 2-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் விலகி படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். எந்த நெருக்கடிகளையும் எதிர்கொண்டு நற்பலன்களை அடைவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமல் இருப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அலைச்சல் டென்ஷன்களால் உடல் சோர்வு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. தொழில்- வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை மாறி லாபங்களை அடைய முடியும். கொடுத்த கடன் தக்க நேரத்தில் திரும்பி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். வெளியூர் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.
ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை
ராகு அசுவனி நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய ஒற்றுமை குறைவுகள் விலகி நிம்மதி ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்கள் கஷ்டங்கள் விலகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் சுப செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு புது வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கேது சித்திரை நட்சத்திரத்தில் 8-ல், சனி 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. இயற்கை உணவுகளை எடுத்து கொண்டால் ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்கலாம். தொழில்- வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய திட்டங்களை செயல்படுத்தி தொழிலை விரிவுபடுத்த முடியும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த வேலைபளு குறைந்து பதவி உயர்வுகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் பணியை சிறப்பாக செய்து நற்பெயர் எடுப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் நீங்கள் மன நிம்மதியுடன் பணி புரிய முடியும்.
Click the links to get ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் for mesam rishbam mithunam kadagam simmam kanni thulam viruchigam thanus makaram kumbam meenam rasi palan