New Year Rasi Palan in Tamil – புத்தாண்டு ராசி பலன்

On 2022-12-30 11:23:32

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan mesam

புத்தாண்டு ராசி பலன் மேஷம் - New Year Rasi Palan for mesam in Tamil

மேஷ ராசி பலன் 2023 (Mesham Rasi Palan 2023 in tamil), எந்த செயலிலும் தைரியத்தோடு செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்வில் வரும் 2023-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட இருக்கிறது. ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் வரும் 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் சகல விதத்திலும் குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை அடையும் யோகம் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து முன்னேற்றமான நிலை உண்டாகும். தொழிலில் இருந்த தேக்க நிலைகள் எல்லாம் முழுமையாக விலகி நல்ல வளர்ச்சியினை அடையும் யோகம், சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறும் நிலை ஏற்படும். தொழிலில் லாபம், தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு எல்லாம் குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. நல்ல பதவிகள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சர்ப்ப கிரகமான ராகு, கேது 30-10-2023 முடிய 1, 7-ல் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் நெருங்கியவர்களிடம் பேச்சை குறைத்துக் கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆண்டுக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிலும், 22-04-2023 முதல் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க உள்ளது அவ்வளவு சிறப்பான அமைப்பு என கூற முடியாது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஏப்ரலுக்கு பிறகு குரு பார்வை 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்பத்தில் நிலவக்கூடிய சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் கூட சற்று விலகி ஒற்றுமை அதிகரிக்க கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்து வகையில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பங்காளி வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடுவதில் சிறிது தடைகள் இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடி இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் ஏற்படும்.

inraiya rasipalan rishbam

புத்தாண்டு ராசி பலன் ரிஷபம் - New Year Rasi Palan for rishbam in Tamil

ரிஷப ராசி 2023 (Rishaba Rasi Palan 2023 in tamil), நவகிரகங்களில் சுக காரகன் சுக்கிரனின் ராசியில் பிறந்த நீங்கள் ஆடம்பர வாழ்வில் அதிகம் நாட்டம் கொண்டவராகவும் நவீனகரமான பொருட்களை அனுபவிப்பதில் அலாதி பிரியம் கொண்டவராகவும் விளங்கக்கூடிய உங்களுக்கு, வரும் 2023-ஆம் ஆண்டில் சிக்கனத்தோடு செயல்பட்டால் தான் அனைத்தையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை நீங்கள் அடைய முடியும். 2023—ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு சர்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய யோகங்கள் உண்டு, கேது உங்கள் ராசிக்கு 6-ல் 30-10-2023 வரையும் அதன் பிறகு ராகு 11-லும் சஞ்சரிப்பதால் கிடைக்க வேண்டிய நேரத்தில் தகுந்த உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பதால் வளமான பலன்களை பெற முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்களில் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் எடுக்கின்ற பணிகளில் சிறு சிறு இடையூறு இருந்தாலும் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனிபகவான் வரும் 17-01-2023 முதல் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு செயல்பட்டால் தான் அனுகூலங்களை அடைய முடியும். பெரிய முதலீடுகள் கொண்ட செயல்களில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்காது என்பதால் நீங்கள் எதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது நன்று. கூட்டாளிகள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அவர்களை சார்ந்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை சற்று கூடுதலாக இருக்கும் நிலை, மற்றவர்கள் பணியும் சேர்த்து நீங்கள் செய்யக்கூடிய ஒரு சூழல் ஏற்படும். உங்கள் உழைப்புக்கான சன்மானத்தை அடைவதில் ஒரு சில இடையூறுகள் இருக்கும் என்றாலும் உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு இருப்பது நல்லது. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஆண்டுகோள் என வர்ணிக்க படக்கூடிய குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமான நிலை, திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடக்கூடிய யோகங்கள், நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு, பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய யோகம் உண்டாகும். வரும் 22-04-2023-க்கு பிறகு குரு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபடுகின்ற பொழுது அதனை ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்துவது மிகவும் உத்தமம். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் அளிப்பது போன்றவற்றை வரும் நாட்களில் தள்ளி வைப்பது நல்லது. எதிலும் பெரியோர்களின் ஆசியுடன் அவர்களின் ஆலோசனை கேட்டு செயல்பட்டால் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். தொழில், வியாபார விஷயங்களில் எதிலும் சுயமாக செயல்படாமல் குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு செயல்படுகின்ற பொழுது வீண் செலவுகளையும், இழப்புகளையும் தவிர்த்து போட்ட முதலீட்டை எடுக்கும் வாய்ப்பு உண்டாகும்.

inraiya rasipalan mithunam

புத்தாண்டு ராசி பலன் மிதுனம் - New Year Rasi Palan for mithunam in Tamil

மிதுன ராசி பலன் 2023 (Mithuna rasi palan 2023 in tamil), புதனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் ஒவ்வொரு செயலிலும் சூழ்நிலைக்கு தக்கவாறு உங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் வல்லவராகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கக்கூடிய உங்களுக்கு வரும் 2023-ஆம் ஆண்டு மிகப் பெரிய ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஆண்டாக இருக்கும். மிதுனத்தில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை மேன்மை அடைந்து சகல விதத்திலும் ஏற்றங்களை அடைய முடியும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த சிறு சிறு பாதிப்புகள் கூட தற்போது முழுமையாக விலகி பொருளாதார ரீதியாக அனுகூலங்களை பெறுவீர்கள். வீண் மருத்துவ செலவுகள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை இருக்கும். சர்பகிரகமான ராகு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் 30-10-2023 வரை சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான குரு ஆண்டின் தொடக்கத்தில் 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறிது தேக்கமான நிலையை நீங்கள் எதிர்கொண்டாலும் வரும் 22-04-2023 முதல் குரு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் பலம், உங்களுக்கு இருந்த கடன்கள் எல்லாம் குறைய கூடிய சூழல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் எல்லாம் மறைவது மட்டுமில்லாமல் எதிரிகள் கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய சூழல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வியக்கத்தக்க அளவிற்கு நல்ல லாபத்தை அடைவது மட்டுமில்லாமல் தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். தொழில் ரீதியாக உங்களுக்கு இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் முழுமையாக விலகி அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை தற்போது பெற்று தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மேலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியாக உங்களின் மன கவலைகள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்களுக்கு கௌரவமான பதவிகள் தேடி வரும். உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாக இருந்த சுணக்கமான நிலை மாறி குடும்பத்தில் மகிழ்ச்சி, அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் ஏற்படும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய யோகமும் உயர் பதவியை அடையக்கூடிய அதிர்ஷ்டமும் ஏற்படும். இவ்வாண்டில் கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நல்லது.

inraiya rasipalan kadagam

புத்தாண்டு ராசி பலன் கடகம் - New Year Rasi Palan for kadagam in Tamil

கடக ராசி பலன் 2023 (Kadagam Rasi Palan 2023 in tamil), சந்திரனின் ராசியில் பிறந்து சிறந்த கற்பனை திறனும், மற்றவர்களை கவரும் பேச்சுத் திறனும் கொண்ட கடக ராசி நேயர்களே, எடுக்கும் செயல்களில் விடா முயற்சியுடன் செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படக்கூடிய உங்களுக்கு வரும் 2023-ஆம் ஆண்டில் ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 22-04-2023 முடிய பாக்ய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் இந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்கள் உங்களின் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும் நீங்கள் எண்ணியதை செயல்படுத்துவது என்றால் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்வது நல்லது. திருமண முயற்சிகள் ஆண்டில் தொடக்கத்தில் மேற்கொண்டால் அதில் அனுகூலமான பலன்களை அடைய முடியும். வரும் 22-04-2023 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க உள்ளதால் குரு மாற்றத்திற்குப் பிறகு பொருளாதார நிலையானது ஏற்ற இறக்கமாக இருக்கும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரவினை அடைவதில் தேவையற்ற சுணக்கங்கள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக ஒரு சில அனுகூலங்கள் கிடைக்கும் என்றாலும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தவிர்ப்பது, எதிலும் கையிருப்பை கொண்டு செயல்படுவது நல்லது. அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக சுபச் செலவுகளை மேற்கொள்ள நேரிடும். மனைவி, பிள்ளைகள் மூலமாக எதிர்பாராத வீண் செலவுகளை எதிர்கொள்ள கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கும் என்றாலும் எதிர்நீச்சல் போட்டால் தான் அடைய வேண்டிய பலனை அடைய முடியும். சில வெளிநபர்கள் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் சற்று குறையும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். நீங்கள் எதிலும் திறமையுடன் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவராக இருந்தாலும் உங்களின் உடல் நிலையானது அன்றாட செயல்களுக்கு ஒத்துழைக்காது. உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொல்களை சொல்வார்கள் வரும் ஆண்டில் 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச் சனி நடைபெற இருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும். 2023-ஆம் ஆண்டில் கேது 4-லும் ராகு 10-லும் 30-10-2023 வரை சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் மூலமாக கூட எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எதிலும் சிக்கனமாக இருந்தால் ஏற்படக்கூடிய சிறு சிறு இடர்பாடுகளை எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடையலாம்.

inraiya rasipalan simmam

புத்தாண்டு ராசி பலன் சிம்மம் - New Year Rasi Palan for simmam in Tamil

சிம்ம ராசி பலன் 2023 (simmam Rasi Palan 2023 in tamil), நவகிரங்களில் ராஜா என வர்ணிக்கப்படும் சூரியனின் ராசியில் பிறந்த சிம்ம ராசி நேயர்களே, இயற்கையிலே பிறரை வழி நடத்துவதில் வல்லவராக விளங்க கூடிய உங்களுக்கு வருகின்ற 2023-ஆம் ஆண்டில் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை அடையக்கூடிய ஆண்டாக இருக்கும் உங்கள் ராசிக்கு இவ்வாண்டில் சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 22-04-2023 வரை அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலையும் சிறிதளவு நெருக்கடிகள் இருந்தாலும் 22-04-2023 முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார தேக்கங்கள் எல்லாம் விலகி தாராள தன வரவு ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கைகூடும். திருமண வயது அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கக்கூடிய யோகமும் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் வருகின்ற நாட்களில் உங்களுக்கு உண்டு. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் நல்ல முன்னேற்றங்களையும் நீங்கள் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம் பார்க்கக் கூடிய நிலையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவதற்கான யோகங்கள் உண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் இவ்வாண்டு முடிவுக்கு வந்து உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும் யோகம் உண்டாகும். உங்களின் நீண்ட நாளைய திட்டங்களை ஏப்ரலுக்கு பிறகு செயல்படுத்தினால் அதில் முழுமையான வெற்றியினை அடைய முடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இவ்வாண்டில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 17-01-2023 முதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு முடிந்தவரை பேச்சில் பொறுமையோடு இருந்தால் வரும் ஆண்டில் நீங்கள் எல்லா வகையிலும் வளமான பலன்களை அடைய முடியும்.

inraiya rasipalan kanni

புத்தாண்டு ராசி பலன் கன்னி - New Year Rasi Palan for kanni in Tamil

கன்னி ராசி பலன் 2023 (Kanni Rasi Palan 2023 in tamil), புதனின் ஆதிக்கத்தில் பிறந்து சூழலுக்குத் தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2023 ஆம் ஆண்டில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் 17-01-2023 முதல் உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் வலுவாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும் துணிந்து செயல்படக்கூடிய ஆற்றல், பொருளாதார ரீதியாக அனுகூலங்கள், இருக்கும் இடத்தில் உங்களுடைய பெயர், புகழ், செல்வாக்கு மேலோங்க கூடிய யோகம் உண்டாகும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக மறையும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு தற்போது நல்லபடியாக நடந்து கொள்வார்கள். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து வியக்கும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை எட்ட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவியை அடையும் யோகம், வெளியூர், வெளி மாநிலங்கள் மூலமாக அனுகூலமான பலனை அடையும் வாய்ப்பு உண்டாகும். ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 22-04-2023 வரை சம சப்தமஸ்தானமான 7-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூட கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 22-04-2023-க்கு பிறகு குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். குரு 8-ல் சஞ்சரிக்க கூடிய காலத்தில் சனி 6-ல் சஞ்சரிக்கும் என்பதால் எதையும் சமாளித்து அனுகூலங்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய ராகு, கேது இவ்வாண்டில் 30-10-2023 வரை கேது 2-லும், ராகு 8-லும் அதன் பிறகு கேது ஜென்மத்திலும் ராகு 7-லும் சஞ்சரிக்க இருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது, இரவு பயணங்களை தவிர்ப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குறிப்பாக 2023-ஆம் ஆண்டில் சனி பகவான் 6-ல் வலுவாக சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்க்கை தரமானது சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, உங்களின் நீண்ட நாளைய கனவுகளை வரும் நாட்களில் நிறைவேற்றக்கூடிய ஒரு யோகம் உண்டாகும். வீடு, மனை வாங்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும்.

inraiya rasipalan thulam

புத்தாண்டு ராசி பலன் துலாம் - New Year Rasi Palan for thulam in Tamil

துலாம் ராசி பலன் 2023 (Tulam Rasi Palan 2023 in tamil), வாழ்வில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களை சமமாக பாதிக்கும் பண்பு கொண்ட துலா ராசி நேயர்களே, பிறர் செய்யும் தவறுகளை உரிமையோடு தட்டிக் கேட்கும் தைரியம் கொண்ட உங்களுக்கு இதுநாள் வரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரித்த சனி பல்வேறு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தினார். வரும் 17-01-2023 முதல் சனிபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் வலுவாக சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை பெறுவீர்கள். இதுநாள் வரை இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் விலகி சகல விதத்திலும் ஏற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் கடந்த காலங்களில் இருந்து வந்த உடல் சோர்வுகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக அனுகூலமான பலன்களை பெற முடியும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். தொழில் ரீதியாக கடந்த காலங்களில் இருந்து வந்த பொருட் தேக்கங்கள் விலகி சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறி உங்களுடைய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவும், போட்ட முதலீட்டை எடுக்கக் கூடிய பலமும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து சுமூகமாக பணிபுரியக்கூடிய அமைப்பு, உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நிலை வரும் நாட்களில் ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் ஆண்டுகோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் 22-04-2023 முதல் குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள், மறைமுக எதிர்ப்புகள் விலகி மன நிம்மதியான நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு ஏற்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். ஒரு சிலருக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய யோகம் உண்டாகும். சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது 30-10-2023 முடிய ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு என சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். பொதுவாக உடனிருப்பவர்களிடம் முன் கோபத்தை குறைத்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆக வரும் 2023-ஆம் ஆண்டில் உங்களுக்கு பொருளாதார மேன்மை, நீங்கள் நினைத்தது நடக்கும் யோகம் ஏற்படும்.

inraiya rasipalan viruchigam

புத்தாண்டு ராசி பலன் விருச்சிகம் - New Year Rasi Palan for viruchigam in Tamil

விருட்சிக ராசி பலன் 2023 (Virutchigam Rasi Palan 2023 in tamil), செவ்வாயின் ராசியின் பிறந்த நீங்கள் பார்ப்பதற்கு வெகுலியாக இருந்தாலும் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 30-10-2023 முடிய 6-ல் சஞ்சரிரிப்பதும், அதன் பிறகு கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் நினைத்ததை ஆண்டின் தொடக்கத்தில் முயற்சித்தால் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடக் கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. உங்கள் எண்ணங்கள் நிறைவேற கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வரும் 22-04-2023 முதல் குரு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குரு 6-ல் சஞ்சரிக்கும் பொழுது தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசிக்கு 2, 10, 12 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பார் என்பதால் நெருங்கியவர்களின் உதவி கிடைக்கும். தொழில் ரீதியாக ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் எதிர்கொண்டு அணுகூலங்களை அடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனத்தோடு செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உங்கள் மீது வீண் பழிச் சொற்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது வெளி நபர்களிடம் வீண் பேச்சை குறைப்பது நல்லது. ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கக்கூடிய கிரகமான சனி வரும் 2023-ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ல் 17-01-2023 முதல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்க உள்ளது. இதன் காரணமாக அலைச்சல், டென்ஷன், வசதி வாய்ப்பு இருந்தாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அதிக வேலைப்பளு காரணமாக உங்களின் ஓய்வு நேரம் குறைய கூடிய ஒரு சூழல் உண்டாகும். அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் உண்டாகும்.

inraiya rasipalan thanus

புத்தாண்டு ராசி பலன் தனுசு - New Year Rasi Palan for thanus in Tamil

தனுசு ராசி பலன் 2023 (Thanusu Rasi Palan 2023 in tamil), பிறருக்கு உதவி செய்வதில் முன் நின்று செயல்படக்கூடிய தனுசு ராசி நேயர்களே, நவகிரகங்களில் முழு சுப கிரகமான குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எதை செய்வதென்றாலும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து செய்யும் திறன் கொண்டவராக செயல்படுவீர்கள். வரும் 2023-ஆம் ஆண்டில் உங்களுக்கு இது நாள் வரை நடைபெற்று வந்த ஏழரைச் சனி 17-01-2023-ல் முழுமையாக முடிவதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மறுமலர்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கடந்த கால மருத்துவ செலவுகள் குறைய கூடிய நிலை நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது உடலில் ஒரு நல்ல முன்னேற்றம் வருகின்ற நாட்களில் ஏற்படும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார சங்கடங்கள் எல்லாம் முழுமையாக குறைந்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். தொழில் ரீதியாக கடுமையான தேக்க நிலையை எதிர்கொண்ட உங்களுக்கு வரும் நாட்கள் சந்தை சூழ்நிலை முற்றிலும் உங்களுக்கு சாதகமாக மாறி உங்களின் ஒவ்வொரு செயலுக்கும் நல்ல லாபங்களும் சமுதாயத்தில் ஒரு நல்ல உயர்வும் கிடைக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக விலகும். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு நட்புடன் பழகக் கூடிய ஒரு சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த கால வேலைபளு எல்லாம் குறைந்து சுபிட்சமான நிலை ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்கும் ராசி அதிபதி குருபகவான் வரும் 22-04-2023 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். ஏப்ரலுக்கு பிறகு உங்களது பலமும், வலிமையும் மேலும் அதிகரிக்கும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலை ஏற்படும். மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் அரங்கேறும். பூர்வீக சொத்து ரீதியாக நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைக்கு எல்லாம் வரும் நாட்களில் உங்களுக்கு சாதகமாக நல்ல தீர்வு கிடைக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு வரும் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. நீங்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை அடைய முடியும். வரும் 2023-ஆம் ஆண்டில் சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 5-லும், கேது 11-லும் 30-10-2023 வரை சஞ்சாரம் செய்ய உள்ளனர். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பல்வேறு அணுகூலமான பலன்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு சிறப்பான அமைப்பாகும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. உறவுகளை சற்று அனுசரித்து செல்வதன் மூலம் மேலும் வளமான பலன்களை வரும் 2023-ஆம் ஆண்டில் அடைய முடியும்.

inraiya rasipalan makaram

புத்தாண்டு ராசி பலன் மகரம் - New Year Rasi Palan for makaram in Tamil

மகரம் ராசி பலன் 2023 (Magaram Rasi Palan 2023 in tamil), எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் உங்களுடைய லட்சியங்களை நிறைவேற்றுவதில் மன உறுதியோடு செயல்படும் மகர ராசி நேயர்களே, சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு இது நாள் வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி வரும் 17-01-2023 முதல் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனி முடிந்தாலும் பாத சனி தொடரும். உங்கள் உடல் ஆரோக்கியமானது சற்று சிறப்பாக இருக்கும். குடும்ப ஸ்தானமான 2-ல் சனி சஞ்சரிக்க இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு செயல்படுவது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குறிப்பாக குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். பொருளாதார நிலையானது முன்பை விட தற்போது உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு வரும் 22-04-2023 வரை 3-ஆம் வீட்டிலும் அதன் பிறகு 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளார். 2023-ஆம் ஆண்டில் பண விஷயத்தில் நீங்கள் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது குறிப்பாக கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது, பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்வை ஏழாம் வீட்டுக்கு இருக்கும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணங்களை தற்காலிகமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக உங்கள் பெயரில் முதலீடு செய்வதை விட குடும்ப உறுப்பினர்கள் பெயரில் முதலீடு செய்வது மிகவும் நல்லது. கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் தொழிலில் ஒரு சில அனுகூலமான பலன்களை அடைய முடியும். உத்தியோக ரீதியாக உங்கள் பணியில் கவனத்தோடு செயல்படுவது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், ஓய்வு நேரம் குறைய கூடிய ஒரு சூழல் உண்டாகும். சர்ப்ப கிரகமான ராகு, கேது 30-10-2023 வரை 4-ல் ராகு, 10-ல் கேது என சஞ்சரிக்க இருக்கின்றனர். குறிப்பாக வண்டி, வாகனங்கள் மூலம் வீண் செலவுகள், அசையா சொத்துக்கள் மூலமாக எதிர்பாராத செலவுகளை வரும் நாட்களில் எதிர்கொள்ள நேரிடும். 2023-ஆம் ஆண்டில் நீங்கள் எதிலும் சற்று சிக்கனத்தோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கலாம்.

inraiya rasipalan kumbam

புத்தாண்டு ராசி பலன் கும்பம் - New Year Rasi Palan for kumbam in Tamil

கும்ப ராசி பலன் 2023 (Kumbam Rasi Palan 2023 in tamil), பிறர் விஷயத்தில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே, சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களுக்கு இக்கட்டான நிலையில் உதவி செய்யக்கூடிய நல்ல பண்பு கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் ராசி அதிபதி சனி இது நாள் வரை விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்தார், தற்போது வரும் 17-01-2023 முதல் சனி திருக்கணிதபடி ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடங்குகிறது. ஜென்மச் சனி நடைபெற உள்ளதால் உங்களின் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். தேவையில்லாத அலைச்சல், செய்யும் செயல்களில் சுறுசுறுப்பு இல்லாத நிலை, சக்திக்கு மீறிய வீண் செலவுகளை சந்திக்க கூடிய ஒரு நிலை ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். அன்றாட பணிகளில் ஈடுபாடற்ற நிலை இருக்கும் என்பதால் முடிந்தவரை உங்கள் பணியில் அக்கறை செலுத்துவது நல்லது. உங்களின் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருப்பது மட்டுமில்லாமல் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. மனைவி, பிள்ளைகள் வழியில் கூட தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் அவர்களது ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டிய நேரமாகும். ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். ஆண்டுக்கு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் 22-04-2023 வரை தனஸ்தானமான 2-ல் பலமாக சஞ்சரிப்பதால் ஆண்டின் முதல் நான்கு மாத காலங்கள் உங்களின் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஒரு சில எதிர்பாராத லாபங்களை பெற்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது நல்ல வாய்ப்புகள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். வரும் 22-04-2023-க்கு பிறகு குரு முயற்சி ஸ்தனமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருக்கும் என்பதால் திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் வரும் ஆண்டில் எளிதில் கைகூடும். பிள்ளைகள் வழியாக ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து சென்றால் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். கடினமான நெருக்கடியில் நீங்கள் இருந்தாலும் உரிய நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு செயல்படுவது நல்லது. உங்கள் பெயரில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது, பிறரை நம்பி பண உதவி செய்வது போன்றவற்றை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியாக தவிர்க்க முடியாத காரணத்தால் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை இருந்தால் உங்கள் பெயரில் முதலீடு செய்யாமல் மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் முதலீடு செய்வது நல்லது. அசையா சொத்து வகையில் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். சர்ப்ப கிரகமான ராகு 30-10-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உங்களுக்கு வெளியூர், வெளி மாநிலங்கள் மூலமாக ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும்.

inraiya rasipalan meenam

புத்தாண்டு ராசி பலன் மீனம் - New Year Rasi Palan for meenam in Tamil

மீன ராசி பலன் 2023 (Meenam Rasi Palan 2023 in tamil) , கம்பீரமான தோற்றமும், சிறப்பான உடல் அமைப்பும், உதவி செய்யக்கூடிய பண்பும் கொண்ட மீன ராசி நேயர்களே, நவகிரகங்களில் முழு சுப கிரகமான குருவின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசி அதிபதி குரு 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும், 22-04-2023 முதல் தன ஸ்தானமான 2-ல் சாதகமாக சஞ்சரிக்க இருப்பதால் முதல் மூன்று மாதங்கள் நீங்கள் சமாளித்து விட்டால் ஏப்ரலுக்கு பிறகு உங்களின் பொருளாதார நிலை மிக மிக நன்றாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை ஏப்ரலுக்கு பிறகு மேற்கொண்டால் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பதால் கடினமான பணிகளை கூட சிறப்பாக செய்து முடிக்க கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு தற்போது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க கூடிய சனி வரும் 17-01-2023 முதல் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி தொடங்குகிறது. இதன் காரணமாக வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களிலும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தூரப் பயணங்களை தள்ளி வைப்பது குறிப்பாக இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதனை தவிர்ப்பது நல்லது. ஏழரைச் சனியின் காரணமாக எதிர்பாராத வகையில் கடன் வாங்க நேரிடும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, சக்திக்கு மீறி செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கடன் வாங்கக்கூடிய நெருக்கடியான நிலை இருந்தாலும் உங்கள் பெயரில் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, தேவையான மருத்துவ பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் சஞ்சரிக்க இருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள், ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குறிப்பாக ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

Click the links to get புத்தாண்டு ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore