இந்த நிற பூனையை வளர்த்தால் உங்க வீட்டில் அதிர்ஷ்டம் கொட்டுமாம்

Updated On

அனைவருக்கும் பிடித்தமான செல்ல பிராணிகளில் ஒன்று பூனை. காலை எழுந்ததும் பூனை முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்று ஜப்பானிய மக்கள் நம்புகிறார்கள்.

பூனைகளை வீட்டில் வளர்த்தால் நமக்கு உடலில் எந்த ஆரோக்கிய பிரச்சனையும் வாராது. பூனை வளர்ப்பதால் பூனைகள் எலிகள் மற்றும் பூச்சிகளை பிடித்து சாப்பிடுகின்றன. இதனால் எலிகள் மற்றும் பூச்சிகளால் நோய் பரவும் அபாயத்தை குறைக்கிறது.

பூனை பலன்கள் | Poonai Palangal in Tamil

நமது நாட்டில் சில மக்கள் பூனை வளர்ப்பது அபசகுணமானது என்று நினைக்கிறார்கள். ஆனால் பூனை தீய சக்திகளை எதிர்த்து போராடும் என்றும் கூறப்படுகிறது.

பூனைகள் லட்சுமி தேவியின் நெருக்கமான பிராணியாகும், அதனால் வீட்டில் செல்வம் மற்றும் பொன்பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

எந்த நிறமுள்ள பூனையை வளர்ப்பது அதிர்ஷ்டம்?

கருப்பு பூனைகள் மிகவும் அதிஷ்டமான பூனைகள் என்பது பலருக்கும் தெரியவில்லை. கருப்பு என்றால் துருதிஷ்டத்தின் சின்னமாக நினைக்கின்றனர், ஆனால் அது மூட நம்பிக்கை. கருப்பு நிறத்திற்கு தீய சக்திகளை அழிக்கும் பண்பு உள்ளது.

கருப்பு நிற பூனைகளிடம் எதிர்மறை சக்தியை அகற்றும் திறன் அதிகம் உள்ளது. அதனால் இந்த பூனை அமானுஷ்ய சக்திகள் மற்றும் சாபங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

சிவப்பு, கருப்பு, வெள்ளை  ஆகிய மூன்று நிறங்களும்  சேர்ந்த பூனைகளை வளர்த்தால், கெடுதல் நடக்காமல், தீய சக்தி அண்டாமல் நம்மை பாதுகாப்பதுடன், நம் வீட்டுக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யுமாம்.

நீலம் அல்லது சாம்பல் நிற பூனைகளை வளர்த்தால், அது நம் வீட்டில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் அதிகரிக்க செய்யுமாம்.

சாம்பல், வெள்ளை ஆகிய இரு கலப்பு நிறங்களை கொண்ட பூனையை வீட்டில் வளர்த்தால், அது எதிர்மறை சக்தியை கண்டறியும் திறனுடன் ஞானமும், பொது அறிவும் கொண்டிருக்குமாம்.

ஆமை கூடுனை போல கலப்பு நிறம் கொண்ட பூனையானது ஞானதிருஷ்டி திறன் கொண்டது. இதன் முன் கெட்டவை நடக்கும் முன்னரே தனது செயல்கள் மூலம் அறிகுறிகள் வெளிப்படுத்துமாம்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore