10 Easy thirukkural with Meaning | 10 எளிமையான திருக்குறள் மற்றும் விளக்கம்
Easy Thirukkural 10 | எளிமையான திருக்குறள்
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம் (Thirukkural meaning):
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்
Easiest thirukkural 10
2. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
விளக்கம் (Thirukkural meaning):
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.
விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்
திருக்குறள் தமிழ் | Thirukural with Tamil Meaning
3. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
விளக்கம் (Thirukkural meaning):
இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்
4. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
விளக்கம் (Thirukkural meaning):
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்
Top 10 thirukkural in tamil
5. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
விளக்கம் (Thirukkural meaning):
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்
6. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
விளக்கம் (Thirukkural meaning):
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்
10 Easy Thirukkural in Tamil with Meaning
7. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
விளக்கம் (Thirukkural meaning):
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்
8. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
விளக்கம் (Thirukkural meaning):
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்
10 Elimaiyana Thirukkural | 10 எளிமையான திருக்குறள்
9. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
விளக்கம் (Thirukkural meaning):
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்
10. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
விளக்கம் (Thirukkural meaning):
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.