உளுந்து இல்லாத பன் தோசை | Bun Dosa Recipe in Tamil

Updated On

எளிமையான பன் தோசை | Aval Dosai Recipe in Tamil

ஒரே மாதிரியான இட்லி அல்லது தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா? அப்போ இந்த வித்யாசமான உளுந்து இல்லாத பன் தோசையை ட்ரய் பண்ணி பாருங்க. காலை மற்றும் இரவு நேர உணவுக்கு ஏற்ற மிகச்சுவையான பன் தோசை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தென்னிந்திய காலை உணவு வகைகள் | South Indian Breakfast Recipes

மாவு அரைக்க தேவையான பொருட்கள்

 1. பச்சை அரிசி – 2 கப்
 2. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
 3. அவல்  – 1 கப்
 4. துருவிய தேங்காய் – 1 கப்
 5. உப்பு  – 1 தேக்கரண்டி

தாலிப்பதற்கு தேவையான பொருட்கள்

 1. எண்ணெய் – 3 தேக்கரண்டி
 2. கடுகு –  1 தேக்கரண்டி
 3. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
 4. பச்சை மிளகாய் – 3
 5. கருவேப்பிலை – 1 கொத்து

காலை டிபன் வகைகள் செய்முறை |
Healthy Breakfast Recipes in Tamil

செய்முறை

 • ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் பச்சரிசி, 1/2 தேக்கரண்டி வெந்தயம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
 • அரிசி நன்றாக ஊறியதும் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
 • மாவு நன்றாக அரைத்ததும் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
 • அடுத்து,  ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் அவல், ஒரு கப் துருவிய தேங்காய் மற்றும் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
 • அதை அரிசி அரிசி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து எடுக்கவும்.
 • இதை எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
 • தோசை மாவு நன்றாக புளித்ததும். தாளிப்பு தயார் செய்யவும்.
 • இப்போது மாவு தாளிக்க ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பொரியவிடவும்.
 • இதை தோசை மாவுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
 • ஆப்பக் கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் அல்லது நெய் தடவி,  ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றவும். மாவை பரப்பாமல் அப்படியே விடவும்.
 • ஒரு மூடி வைத்து மிதமான சூட்டில் 3 நிமிடங்கள் வேக விடவும். 3 நிமிடத்திற்கு பிறகு திருப்பி போட்டு மறுபுறமும் வேக வைக்கவும்.
 • தோசை நன்றாக வெந்ததும் வேறு தட்டிற்கு மாற்றவும். இப்போது பஞ்சு போன்ற சுவையான பன் தோசை தயார்.

இதை தேங்காய் சட்னி அல்லது சாம்பருடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore