பல்லி விழும் பலன்கள் – அதிர்ஷ்டம்? | Palli Vilum Palangal in Tamil

Updated On
பல்லி விழும் பலன்

பல்லிகள் நம் வீடுகளில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு ஊர்வன உயிரினமாகும். அவ்வாறு சமையலறை முதல் குளியலறை வரை ஊர்ந்து திரியும் பல்லிகள் சில சமயங்களில் நம் உடலின் மேல் கை , கால் , தலை, தொடை, மார்பு என ஏதாவது ஒரு பகுதியில் விழுவதுண்டு.

அவை திடீரென்று பல்லி உங்கள் உடலில் விழுந்தால் ஏதாவது கெட்டது நடக்கும் என்று மக்கள் பயப்படுகிறார்கள். பல்லி மேலே விழுந்தால், உடனடியாக பஞ்சாங்கத்தை எடுத்தோ அல்லது தமிழ் காலண்டரை எடுத்தோ அல்லது இணையத்தில் பல்லி விழும் பலன்களைத் தேடுவோம்.

பொதுவாக வீட்டில் பல்லிகள் இருப்பது நல்லது. பல்லிகளால் எந்தத் தீங்கும் இல்லை, நன்மைகள் அதிகம். அவை வீட்டில் உள்ள பூச்சிகள், கொசுக்கள் , சிறு வண்டுகளை உண்டு வாழும்.

எந்த பாகத்தின் மீது பல்லி விழுந்தது என்ற அடிப்படையில் நன்மைகள் தீமைகள் பற்றி முன்னோர்கள் கூறியுள்ளனர் . பல்லி விழுந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி கௌலி பஞ்சாங்கம் என்பதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் நம் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் கத்தினால் நல்லது நடக்கும், எந்த இடத்தில் கத்தினால் கெட்டது நடக்கும், எங்கு பல்லி விழுந்தால் அதிர்ஷ்டம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

நெற்றியில் பல்லி விழுந்தால் (Lizard Falling On ForeHead)

நெற்றியில் பல்லி விழுவது உங்களுடைய பொருளாதாரம் மேம்பட வழிவகுக்கிறது. நெற்றியில் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, அதுவே நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மி கடாட்சம் என்று பல்லி சாஸ்த்திரம் கூறுகிறது. ஒரு வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் இருந்தால், அங்கு செல்வம், பணம் , புகழ் அதிகரிக்கும்.

தலையில் பல்லி விழுந்தால் (Lizard Falling On the Head )

தலையில் பல்லி விழுவது அவ்வளவு நல்லது கிடையாது . ஆனால் பல்லி தலை முடியில் பட்டு, உடனடியாக விலகிச் செல்வது, உங்களுக்கு வரவிருந்த ஆபத்து, தீமை விலகி செல்வதை குறிப்பதாக கருதப்படுகிறது. அதனால் பல்லி தலையில் விழும் பொது உடனடியாக ஒதுங்கிவிடுவது தீமையை குறைக்க வழிவகுக்கும்.

வயிற்றின் மேல் பல்லி விழுந்தால் (Lizard Falling On the Stomach )

வயிற்றின் மேல் பல்லி விழுவது நல்லது. வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி, வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்.

முகத்தில் பல்லி விழுந்தால் (Lizard Falling On the Face )

முகப்பகுதியில் பல்லி விழுந்தால் உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். மேலும் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். நீண்ட நாட்களாக உறவினர்களுடன் இருந்த வந்த மோதல்கள், கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரலாம்.

புருவத்தில் பல்லி விழுந்தால்: (Lizard Falling On the Eyebrows )

புருவத்தில் பல்லி விழுந்தால் அரசாங்க பதவியில் இருப்பவர்களிடமிருந்து உதவி கிடைக்கும். மேலும் பதவி உயர்வு கிடைக்க பெறலாம்.

இடது கை அல்லது இடது கால் பல்லி விழுந்தால் : (Lizard Falling On the Legs )

இடது கை மற்றும் இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது .

மற்ற பகுதியில் விழுந்தால், கீழ் உள்ள அட்டவணை-ஐ காண்க,

உறுப்பு வலம் இடம்
தலை கலகம் துன்பம்
உதடு கஷ்டம் வரவு
வயிறு தானியம் மகிழ்ச்சி
முழங்கால் நஷ்டம் பந்தனம்
கண் சுகம் சிறை பயம்
தோல் வெற்றி போகம்
பிருஷ்டம் சுகம் செல்வம்
பாத விரல் ராஜ பயம் நோய்
காது ஆயுள் லாபம்
கை விரல் சன்மானம் சஞ்சலம்
கணைக்கால் பிரயாணம் சுகம்
கபாலம் தனம் வரவு
மணிக்கட்டு பீடை கீர்த்தி
விலா வாழ்வு தாழ்வு
நகம் செலவு நஷ்டம்
மூக்கு வியாதி கவலை
மார்பு தனலாபம் சுகம்
தொடை துக்கம் சஞ்சலம்
நெற்றி லட்சுமிகரம் காரிய சித்தி
கழுத்து பகை வெற்றி
முதுகு நஷ்டம் கவலை
பாதம் நோய் துக்கம்
கை துக்கம் துன்பம்


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore