தர்பூசணி பழம் எப்படி வாங்குவது?
கோடைக்காலம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தர்பூசணி தான். இது மிகவும் சுவையாகவும், விலை குறைவாகவும் மற்றும் தாகத்தை தீர்க்கும் விதமாகவும் இருக்கும். இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய் போன்றவை தர்பூசணியை விட விலை அதிகமாக இருக்கும்.
ஆண் மற்றும் பெண் தர்பூசணி பூக்கள்
தர்பூசணி பழத்தில் ஆண், பெண் என்ற வகை இல்லை. தர்பூசணி பூக்களில் மட்டுமே ஆண், பெண் வகை உண்டு. பெண் தர்பூசணி பூக்கள் மட்டுமே காயாக மாறும். ஆண் தர்பூசணி பூக்கள் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது.
ஆண் பூவில் தான் மகரந்தம் உள்ளது. பெண் பூவின் அடிப்பகுதியில் சிறிய தண்டு அல்லது சிறிய பிஞ்சு இருக்கும்.
தர்பூசணி விவசாயம் செய்பவர்கள் அருகில் தேனீக்கள் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். தேனீக்கள் இருந்தால் தான் விரைவில் ஆண் பூக்களில் இருந்து பெண் பூக்களுக்கு மகரந்த சேர்க்கை நடைபெறும். அப்பொழுது தான் அதிக மகசூல் பெற முடியும்.
அதே போன்று தர்பூசணி தோட்டத்திற்கு மிக அருகில் வேறு அதிக வாசனை தரும் பூக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் அறிய: ஒட்டன்சத்திரம் காய்கறி விலை இன்று
தர்பூசணி பழத்தை பார்த்து வாங்கும் முறை
சுவையான தர்பூசணி பழத்தை பார்த்து வாங்குவது சற்று கடினமான விஷயம் தான். பழத்தை எப்படி பார்த்து வாங்குவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆண், பெண் என்று இருவகை தர்ப்பூசணி இருப்பது உண்மை இல்லை. தர்பூசணி ரகங்கள் பலவகை உண்டு. நீளமான, மற்றும் வட்டமான பழங்கள் உள்ளது.
அளவு
வடிவத்தில் பெரிதாக மற்றும் நீண்ட வடிவில் இருக்கும் தர்பூசணி பழங்கள் சற்று சுவை குறைவாக இருக்கும். சிறிய மற்றும் உருண்டை வடிவில் இருக்கும் பழங்கள் இனிப்பு சுவையுடன் இருக்கும்.
காம்பு
தர்பூசணி வாங்கும் போது நல்ல பழுத்த பழமாக வாங்குவது அவசியம். அதற்க்கு சரியான வழி பழத்தின் காம்பு பகுதி வாடி, காய்ந்த நிலையில் இருப்பது போன்று வாங்குவது செடியிலே நன்றாக பழுத்த பழமாக இருக்கும்.
பழத்தின் தோல்
தர்ப்பூசணி பழத்தின் தோல் பகுதி கரும்பச்சை மற்றும் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். இதில் வலைப்பின்னல்கள் போன்ற கோடுகள் அதிகமாக இருந்தால் அந்த பழம் சுவையாக இருக்கும்.
அடிப்பகுதி
பழத்தின் அடிப்பகுதியில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதற்க்கு காரணம் பழம் தரையில் இருக்கும் போது தரையின் வெப்பம் காரணமாக நிறம் மாறி இருக்கும்.
அவ்வாறு மாறிய நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், அந்த பழம் சுவையாகவும் நல்ல பழுத்த பழமாகவும் இருக்கும்.
சத்தம்
தர்ப்பூசணி பழத்தை விரலால் தட்டிப்பார்த்தால், நல்ல அதிரும் சத்தம் வந்தால் அது நன்றாக பழுத்த பழமாக இருக்கும்.
விதையற்ற தர்பூசணி
விதையற்ற தர்பூசணி சாப்பிடுவதற்கு இடையூறு இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதன் சுவை மிகவும் குறைவாகவே இருக்கும். விதையுள்ள பழத்தில் தான் அதிக இனிப்பு சுவை இருக்கும்.
மேலும் அறிய: வாழைப்பழம் வகைகள் பயன்கள் | Types of Banana and Its Benefits in Tamil