நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Palm Fruit Benefits in Tamil

Updated On 28/01/2022

பனை நுங்கு பயன்கள் | Palm Fruit Benefits

palmyra fruit benefits in pregnancy

கோடைக்காலத்தில் ஏற்படும் வெய்யிலின் தாக்கத்திற்கு சிறந்த உணவு என்றால் அது நுங்கு தான். இந்த நுங்கு அனைவரும் விரும்பும் ஒன்று. நுங்கின் சுவை மிகவும் தனித்துவமானது, இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. கோடை காலத்தில் நமது உடலுக்கு அதிக நீர்ச்சத்து தேவைப்படுகிறது. பனை நுங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது.

தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுங்கு ஆரோக்கியமான உணவாகும். இதில் வைட்டமின் பி மற்றும் சி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் தயாமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

நுங்கு உடலில் இருக்கும் வெப்பத்தை தனித்து உடலை குளிர்ச்சியடையச் செய்யும். கோடைகாலங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை தவிர்த்து, இயற்கையாக கிடைக்கும் நுங்கை சாப்பிடுங்கள். நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (benefits of eating palm fruit) பற்றி காண்போம்.

palmyra fruit benefits in tamil

 

நுங்கின் பயன்கள் | Health Benefits Of Ice Apple

உடலுக்கு குளிர்ச்சி தரும்

நுங்கு(Nungu) ஒரு இயற்கையான குளிர்ச்சி நிறைந்த பழமாகும். இது கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. உடல் வெப்பம், நீரிழப்பு, வறண்ட சருமம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பல வெப்பம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும் இது உதவுகிறது.

இது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல், அதிகப்படியான வியர்வையால் இழக்கப்படும் ஊட்டச்சத்துக்களை மீட்டு தருகிறது. நுங்கு உங்கள் தாகத்தைத் தீர்த்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது.

தோல் சம்மந்தமான நோய்களுக்கு சிறந்தது | Ice Apple Benefits for Skin

நுங்கு கோடைக்காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை தணிப்பதற்கு சிறந்த வீட்டு மருந்தாகும். நுங்கின் சாரை நமது தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால், அது ஒரு நல்ல விளைவைக் தரும். கோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு மற்றும் அரிப்பு போன்ற தோல் சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாகும். அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வயிற்றுப் பிரச்சனைகளுக்கு தீர்வு

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க பனை நுங்கு நன்மை தரும். இது உடலின் இழந்த தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை சரிசெய்கிறது மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி ஏற்படுவதை குறைக்கிறது. வெயிலினால் ஏற்படும் உடல் சோர்வைத் தடுக்கிறது.

கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

எடையைக் குறைக்க உதவுகிறது

நுங்கு குறைந்த கலோரி உள்ள பழமாகும், இது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு நன்மை தரும். நுங்கில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது, இது உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் அதிக பங்களிக்கிறது. அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது.