பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?

Updated On

பழங்கள் எப்போது சாப்பிட வேண்டும் | Best Time to Eat Fruits in Tamil

இயற்க்கை நமக்கு கொடுத்த மிகப்பெரிய ஆசிர்வாதம் தான் பழங்கள். பழங்கள் பல வகை உள்ளது, அதன் நன்மைகளும் ஏராளமாக உள்ளது. இருந்தபோதிலும், அதை எப்படி சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் மக்கள் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

பழங்களின் முழுமையான சத்துக்களை பெறவும், பாதகமான விளைவை தவிர்க்கவும், பழங்களை சரியான நேரத்தில், சரியான அளவு எடுத்துக்கொள்வது அவசியம்.

காய்கறிகளில் இல்லாத வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளது. பழங்கள் இரத்த அழுத்தத்தை குறைகிறது, இதயநோய் அபாயத்தை குறைக்கிறது மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்து போராடுகிறது.

பழங்களை சாப்பிடுவதற்கான நேரம் குறித்து பல வகையான கருத்துக்கள் நிலவி வருகிறது.  இந்த பதிவில் அதை தெளிவுபடுத்தும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பழங்கள்

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் தான் அதன் முழுமையான பலனை பெற முடியும் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் ஆராய்ச்சியால் அது நிரூபிக்கப்படவில்லை.

உணவுக்கு முன் அல்லது உணவுக்கு பின் எப்போது வேண்டுமானாலும் பழங்களை சாப்பிடலாம். எப்போது சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் மாறுவதில்லை. வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் அந்த நாள் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

பழங்களை சாப்பிடும் முறை மற்றும் நேரங்கள் | Fruits Time to Eat in Tamil

  • காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஓன்று. இரவு பல மணி நேரம் உணவு உண்ணாமல் இருப்பதால், நாம் வயிறு காலியாக இருக்கும். அதனால் காலை உணவை தவிர்க்க கூடாது. அதுபோலத்தான் காலை வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்களை விரைவில் எடுத்துக்கொள்ளும்.
  • பழங்களை மட்டுமே உணவாக சாப்பிட்டு உயிர் வாழலாம் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். இதில் வைட்டமின், நார்ச்சத்து,  தாதுபொருட்கள் மற்றும் இனிப்பு ஆகியவை பழங்களில் அடங்கியுள்ளன்.
  • பழங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடையை அதிகரிக்காது. இது எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. பழங்களில் கார்போ-ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சத்துக்கள் குறைவாக உள்ளது.
  • பழத்தை முழுமையாக சாப்பிடுவதை பலர் விரும்புவதில்லை, அதனை சாறாக பிழிந்து கொடுத்தால் குடித்துவிடுவார்கள். ஆனால் பழங்களை அப்படியே சாப்பிட்டால் தான் முழுமையான பலனை பெற முடியும்.
  • பழங்களை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், பழங்களை குளிர்விக்கும் போது அதன் சத்துக்கள் குறைகின்றன.
  • காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.
  • காலை வெறும் வயிற்றில் மாதுளை, கொய்யா, பப்பாளி, தர்பூசணி, போன்றவை சாப்பிட்டால் நல்ல பலனளிக்கும்.
  • ஏதாவது ஒரு பழங்களை தினந்தோறும் நமது உணவில் எடுத்துக்கொண்டால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும். சாப்பிட்ட உடனே பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். மற்ற உணவுகள் ஜீரணமாக அதிக நேரமாகும்.
  • அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

இரவில் சாப்பிட கூடாத பழங்கள்

இரவு உணவை சாப்பிட்டவுடன் தூங்க செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்க்கு காரணம் சாப்பிட்ட உடனே தூங்கினால் உணவு செரிக்காது என்பதற்க்காக. இரவு உணவு நாம் தூங்க செல்வதற்கு முன்பு குறைந்தது 2 அல்லது 3 மணி நேரம் முன்னதாகவே சாப்பிட வேண்டும்.

இரவு நேரத்தில் பழங்களை சாப்பிட கூடாது என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் அது உண்மை இல்லை. தூங்க செல்வதற்கு ஓன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்பே பழங்களை சாப்பிட்டால் உடலில் எந்த பிரச்சனையும் வராது.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore