முருங்கைக் கீரையில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

Updated On

முருங்கைக் கீரையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்

வட இந்தியாவை தாயகமாக கொண்டது முருங்கை மரம். இது உலக மக்கள் அனைவராலும் உணவாகவும் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிரம்பியுள்ளது.

நமது பாரம்பரிய மருத்துவத்தில் முருங்கை மரத்தில் உள்ள இலை, பூ, காய் மற்றும் பட்டை அனைத்தும் பல காலங்களாக உபயோகப் படுத்தப்படுகிறது.

முருங்கை கீரை சத்துக்கள் | Murungai Keerai Benefits In Tamil

நமது வீட்டில் எளிதாக வளர்க்கப்படும் ஒரு மரம், முருங்கை மரம். வீட்டில் மரங்கள் இருந்தாலும் அதன் பலன் தெரியாமல், கடைகளில் சென்று அதிக விலை கொடுத்து பெயர் தெரியாத கீரைகளை எல்லாம் வாங்கி சாப்பிடுகிறோம்.

முருங்கை இலையில் அதிசயமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. அதில் உள்ள நன்மைகள் மற்றும் பயன்களை கீழே பார்ப்போம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் முருங்கை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு சற்று குறையும்.

முருங்கை இலை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது உடல் பருமனையும் குறைக்கும்.

இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

உடல் சூடு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் முருங்கை இலையை வேகவைத்து அதன் சாறை குடித்து வந்தால் விரைவில் சரியாகும்.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மற்றும் உடல் சோர்வு உள்ளவர்கள் முருங்கை இலை சூப் குடித்தால் நல்ல ஆரோக்கியத்தை பெற முடியும்.

சிறுநீரக பிரச்சனை மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் முருங்கை இலை மற்றும் முருங்கை காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல ஆரோக்கியம் பெற முடியும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை இலையை நெய்யில் வதக்கி வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர இரத்த சோகை குணமாகும்.

முருங்கை இலையை அடிக்கடி உணவில் சேர்த்து வர முடி கொட்டும் பிரச்சனை தீரும் மற்றும் இளநரை பிரச்சனை வராது.

வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் பிரச்சனை உள்ளவர்களுக்கு முருங்கை கீரை ஒரு அருமருந்தாகும்.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனை மற்றும் மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும்.

தாய்ப்பால் அதிகரிக்க  முருங்கை கீரையை பொரியலாகவே அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிடலாம்.

குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் முருங்கை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore