இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் விதை தான் ஓமம். இது ஒரு நறுமண மசாலா ஆகும், இது ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் பிரதானமாக உள்ளது. இது சீராக விதை போன்ற தோற்றம் கொண்டது. இந்த ஓமம் விதையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து , புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதில் சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
செரிமான பிரச்சனை
ஓமத்தின் மிக முக்கிய பண்பு செரிமான பிரச்சனையை தடுப்பது. இது குடலின் செரிமான செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பைத் தடுக்கிறது மற்றும் உங்கள் வயிற்றுப் புண் அபாயத்தைக் குறைக்கிறது. வாயு தொல்லையில் இருந்து விடுபட இது ஒரு நல்ல தீர்வாகும்.
முடி பராமரிப்பு
தலைமுடி சற்று ஆரம்பத்தில் நரைத்திருப்பதை உணரும் மக்களுக்கு, ஓமம் விதைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும். சிறிது ஓமம் விதைகளை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் போட்டு, அதிகாலையில் குடித்தால், அதன் அதிக ஆக்ஸிஜனேற்ற மற்றும் கனிம உள்ளடக்கம் முடியின் ஆரோக்கியத்தைத் தூண்ட உதவும்.
எடை இழப்பு
ஓமத்தில் பசியைத் தூண்டும் பண்பு இருந்தாலும், இது மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது மற்றும் செரிமான செயல்முறையை துரிதப்படுத்தும். இது உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வெளியேற்றவும் மற்றும் அதிகப்படியான கொழுப்பைத் தடுக்கவும் உதவும். ஓமம் விதைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் , இது எடை இழப்பு முயற்சிகளுக்கு உதவுகிறது. சிலர் எடை இழப்புக்கு உதவுவதற்காக, குறிப்பாக உணவுக்குப் பிறகு, ஓமம் விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கின்றனர்.
நோயெதிர்ப்பு சக்தி
ஓம விதைகளை பச்சையாகவோ, தண்ணீரில் கொதிக்க வைத்தோ அல்லது உணவுகளுடன் சேர்த்தோ சாப்பிடலாம். இந்த ஓமம் ஆபத்தான நோய்க்கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
கருஞ்சீரகத்தின் அற்புத குணங்கள்
தலைவலியை தடுக்கும்
ஓமத்தின் பொதுவான பயன்பாடுகளில் ஒன்று தலைவலியைத் தடுப்பது அல்லது குறைப்பது. சில சந்தர்ப்பங்களில், நீங்கள் இந்த விதைகளை உட்கொள்ளத் தேவையில்லை, ஆனால் அவற்றை ஒரு பொடியாக செய்து , வீக்கம் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிக்கு தடவினாலே போதுமானது. ஒற்றைத் தலைவலியைப் பொறுத்தவரை, ஓமத்தை பொடி செய்து உபயோகித்தால், அது வலியிலிருந்து விரைவாக நிவாரணம் அளிக்கும்.
பல்வலியைத் தடுக்கும்
ஈறு மற்றும் பல்வலியை குணமாக்க ஓமம் விதைகள் உதவுகிறது . இந்த விதைகளை தீயில் சுட்டு அந்த புகையை சுவாசிப்பதன் மூலம் பல் வலியிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
ஓமத்தில் உள்ள தைமால் உங்கள் இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களுக்குள் கால்சியம் நுழைவதைத் தடுக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இருமல் மற்றும் சளி நிவாரணி
ஓமம் விதைகளை உட்க்கொள்வதன் மூலம் இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். மூச்சுக்குழாய் குழாய்களை விரிவுபடுத்தவும் இது உதவுகிறது. இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
கொசு விரட்டி
கடுகு எண்ணெயை ஓமம் விதைகளுடன் கலந்து , அட்டையில் தடவி, பின்னர் அதை வீட்டின் மூலைகளில் வைத்தால் கொசு கடியில் இருந்து தப்பிக்கலாம்.
ஓமத்தை அளவாக பயன்படுத்துவது முக்கியம். இதை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தினால் அது அமிலத்தன்மை, அஜீரணம், இரத்தப்போக்கு பிரச்சினைகள் மற்றும் வாய் புண்கள் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.