Weight loss diet chart in tamil
நாம் அனைவருக்குமே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தோன்றும், ஆனால் சரியான உணவு அட்டவணையை எப்படி கண்டுபிடிப்பது என்பதில் சிரமமாக உள்ளது. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, நமக்கு பிடித்த உணவு வகைகளை தவிர்க்காமல், சுவையான, ஆரோக்கியமான மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவுத் திட்டத்தைக் கண்டறிவது சற்று கடினமானது. எனவே, நமது ஊட்டச்சத்தில் சமரசம் செய்யாமல், நமது உடலில் உள்ள கூடுதல் எடையை குறைக்க உதவும் உணவு அட்டவணையை இங்கே காண்போம்.
எடை இழப்புக்கான சிறந்த வாழ்க்கை முறை குறிப்புகள்
உடல் எடை குறைய டிப்ஸ்
- உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் விரைவில் கரையக்கூடிய நார்ச்சத்துகளைச் எடுத்துக்கொள்ளவும்.
- இனிப்புகள் மற்றும் சர்க்கரை பலகாரங்களை தவிர்க்கவும்.
- புதிய பழங்கள், சாலடுகள் மற்றும் உலர்ந்த பழங்கள் போன்றவற்றை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
- உடற்பயற்சி பின்பற்றுங்கள் அல்லது நடைபயிற்சி அல்லது ஓடுதல் போன்ற எளிய பயிற்சிகளைச் செய்யுங்கள்.
- உணவுக்கு முன் போதுமான தண்ணீர் குடிக்கவும், ஏனெனில் இது இயற்கையான பசியை அடக்கும்.
- அதிக புரதம் மற்றும் குறைந்த கார்போஹைட்ரெட் உணவைப் பின்பற்றுங்கள்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- உடல் எடையை குறைக்க உதவும் மற்றும் சுவையான உணவு அட்டவணையை இங்கே பார்ப்போம்.
மேலும் அறிய: உடல் எடையை குறைக்க உதவும் 12 குறிப்புகள்
எடை இழப்புக்கான உணவு அட்டவணை
இந்த டயட் பிளானை தொடங்கும் முன்பு உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்பு தொடங்குங்கள்.
திங்கட்கிழமை
காலை உணவு:கொத்தமல்லி அல்லது புதினா சட்னியுடன் 3 தினை இட்லி + 1 கப் பழங்கள் + 1 கப் கிரீன் டீ
மதிய உணவு: 1 கப் வேகவைத்த காய்கறி + 1 கப் ரசம் + 2 ராகி உருண்டை + 1 கப் காய்கறி சாலட் + 1 கப் மோர்
சிற்றுண்டி: 1 கப் ஸ்ப்ரூட் சாலட் + 1 கப் பிளாக் காபி
இரவு உணவு: 2 சப்பாத்தி + 1 கப் கீரை மசியல்
செவ்வாய்
காலை உணவு: 2 ரவா தோசை + தக்காளி மற்றும் புதினா சட்னி + 1 கப் சாம்பார் + 1 கப் பழங்கள்
மதிய உணவு: 1 கப் காய்கறி சாலட் + 1 கப் பழுப்பு அரிசி + 1 கப் மோர்
சிற்றுண்டி: 1 வேகவைத்த முட்டை + 1 கப் பிளாக் காபி
இரவு உணவு: 1 கிண்ணம் காய்கறி அல்லது சிக்கன் கறி + 1 கப் பச்சை சாலட் + 1 சிறிய கப் குறைந்த கொழுப்புள்ள தயிர் + 2 சப்பாத்தி அல்லது 1 கப் பழுப்பு அரிசி
மேலும் அறிய: நடைப்பயிற்சி செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?
புதன்
காலை உணவு: 4 பாதாம் + 1 கப் பழங்கள் + 1 கப் பொங்கல் மற்றும் வல்லாரை சட்னி
மதிய உணவு: 1 கப் நெல்லிக்காய் சாதம் மற்றும் பீன்ஸ் மற்றும் பீட்ரூட் பொரியல் + 1 கப் மோர் + 1 கப் துளிர் சாலட்
சிற்றுண்டி: 1 டம்ளர் தேங்காய் தண்ணீர் + 4-5 பாதாம்
இரவு உணவு: 2 தானிய ரொட்டி + 1 கப் கோவைக்காய் பொரியல் + 1 கப் காய்கறி சாலட்
வியாழன்
காலை உணவு: 1 கப் பழங்கள் + 3 தினை இட்லி + 1 கப் சாம்பார்
மதிய உணவு: 1 கப் பிரவுன் ரைஸ் அல்லது 2 தானிய ரொட்டி + 1 கப் பீர்க்கங்காய் பருப்பு + 1 கப் மோர் + 1 கப் பீட்ரூட் மற்றும் வெள்ளரி சாலட்
சிற்றுண்டி: 1 கப் கிரீன் டீ மற்றும் 2 தானிய பிஸ்கட்
இரவு உணவு: வறுக்கப்பட்ட மீன் 1 + 1 கப் கலந்த வெஜ் கறி + 1 கப் பழுப்பு அரிசி + 1 கப் சாலட்
வெள்ளி
காலை உணவு: 1 கப் சிறுதானிய உப்மா + 1 கப் தர்பூசணி சாறு
மதிய உணவு: 1 கிண்ணம் தேங்காய் சாதம் + 1 கிண்ண காலிஃபிளவர் கூட்டு + 1 கப் ரசம் + 1 கப் சாலட்
சிற்றுண்டி: 1 கப் வேகவைத்த கொண்டைக்கடலை + 1 கப் க்ரீன் டீ
இரவு உணவு : 2 ரவா தோசை 1 டீஸ்பூன் வேர்க்கடலை சட்னி + 1 கப் காய்கறி கறி + 1 கப் ப்ரோக்கோலி சாலட்
சனிக்கிழமை
காலை உணவு: புதினா சட்னியுடன் 2 பாசிப்பயிறு தோசை + 1 கப் மோர் + 1 நடுத்தர ஆப்பிள்
மதிய உணவு: 1 கப் கீரை பருப்பு + 1 கப் ப்ரவ்ன் அரிசி + 1 சிறிய கப் சேமியா பாயசம் (வெல்லத்துடன்) + 1 கப் பச்சை சாலட்
சிற்றுண்டி: 1 கப் சிவப்பு காராமணி + 1 கப் பிளாக் காபி
இரவு உணவு: 1 கப் காளான் மற்றும் பட்டாணி கறி + 1 கப் குறைந்த கொழுப்புள்ள தயிர் + 1 கப் பச்சை சாலட் + 2 சிறு தானிய சப்பாத்திகள்
ஞாயிற்றுக்கிழமை
காலை உணவு: 3 இடியப்பம் + 1 நடுத்தர கிண்ணம் வெஜ் குருமா அல்லது வேகவைத்த முட்டை + 1 கப் பில்டர் காபி
மதிய உணவு: 1 கப் கொத்தவரங்காய் புளி கூட்டு + 1 கப் பிரவுன் அரிசி + 1 கப் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சாலட் + 1 கப் குறைந்த கொழுப்புள்ள தயிர்
சிற்றுண்டி: 1 கப் ஸ்ப்ரூட் சாலட் + 1 கப் மூலிகை டீ
இரவு உணவு: 1 கிண்ணம் கேரள ஸ்டைல் மீன் கறி + 1 கப் அவியல் + 1 கப் பழுப்பு அரிசி + 1 கப் சாலட் + 2 தானிய சப்பாத்தி + 1 டார்க் சாக்லேட்
மேலும் அறிய: வயிறு தட்டையாய் மாற என்ன செய்ய வேண்டும்?