பயனுள்ள சமையல் குறிப்புகள் | Useful Cooking Tips and Tricks
நம் சமையல் செய்யும் போது உபயோகப்படும் மிகவும் பயனுள்ள சில தந்திரங்களை இந்த பதிவில் பார்ப்போம். இதை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்கள் சமையல் மிகவும் எளிதாகும்.
சமையல் டிப்ஸ் 1
மீதமான பூரி அல்லது சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது மாவின் மேல் எண்ணெய் தடவி, காற்று புகாமல் மூடி வைத்தால் மாவு கலர் மாறாமல் அப்படியே இருக்கும்.
சமையல் டிப்ஸ் 2
பூரி செய்வதற்கு மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்தால், பூரி நீண்ட நேரம் அப்படியே உப்பலாக இருக்கும்.
சமையல் டிப்ஸ் 3
பால் பொங்கி கீழே வடியாமல் இருக்க, பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே வராது.
மேலும் அறிய: 20+ Basic மளிகை பொருட்கள் பட்டியல்
சமையல் ட்ரிக்ஸ் | Cooking and Kitchen Tips in Tamil
சமையல் டிப்ஸ் 4
தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.
சமையல் டிப்ஸ் 5
அரிசியில் பூச்சி வராமல் இருக்க, வர மிளகாய் அல்லது பிரியாணி இலை இதில் ஏதாவது ஒன்றை அரிசியில் போட்டு வைத்தால் பூச்சி வராது.
சமையல் டிப்ஸ் 6
பாதாமின் தோலை ஈசியாக உரிக்க, பாதாமில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி ஒரு நிமிடம் ஊற வைத்தால் பாதாமின் தோல் எளிதாக உறிந்து வரும்.
Tamil Cooking Tips
சமையல் டிப்ஸ் 7
வீட்டில் செய்யும் ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க ஊறுகாயில் சிறிதளவு குக்கிங் வினிகர் சேர்த்து கலந்து வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சமையல் டிப்ஸ் 8
தோசை பொன்னிறமாக வர, இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை உற்றினால் தோசை மொறு மொறுவகவும், பொன்னிறமாகவும் இருக்கும்.
சமையல் டிப்ஸ் 9
ஏலக்காயை பொடியாக அரைக்க ஏலக்காயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பொடி செய்தால் ஏலக்காய் பொடியாக அரைத்து விடும்.
மேலும் அறிய: எந்த காய்கறிகள் மற்றும் பழங்களை தோல் நீக்க கூடாது?
பொதுவான சமையல் டிப்ஸ்கள் | General Cooking Tips
சமையல் டிப்ஸ் 10
மெதுவடை மொறு மொறு என்று இருக்க, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.
சமையல் டிப்ஸ் 11
கீரை கடையல் செய்யும் போது கீரையின் கலர் மாறாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.
சமையல் டிப்ஸ் 12
பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.
வீட்டுக்குறிப்புக்கள் டிப்ஸ் | Samayal Tips and Tricks
சமையல் டிப்ஸ் 13
முட்டை தோல் எளிதாக உரிக்க வர முட்டை வேக வைக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
சமையல் டிப்ஸ் 14
மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் போட்டு அதன் மேல் உப்பை கொட்டி வைத்தால் உப்பில் நீர் சேராது.
சமையல் டிப்ஸ் 15
புளி குழம்பு செய்யும் பொழுது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
மேலும் அறிய: 100+ பழங்கள் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
சமையல் டிப்ஸ் 16
பால் பாயாசம் செய்யும் பொழுது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.
சமையல் டிப்ஸ் 17
முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சமையல் டிப்ஸ் 18
சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க 2 கிராம்பு அதில் போட்டு வைத்தால் எறும்பு வராது.
Samayal Tips in Tamil
சமையல் டிப்ஸ் 19
முருங்கைக்காய் நீண்ட நாள் வாடாமல் இருக்க, சாம்பாரில் சேர்க்கும் அளவு துண்டுகளாக நறுக்கி கற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.
சமையல் டிப்ஸ் 20
வாழைப்பூ சுத்தம் செய்யும் போது கையில் எண்ணெய் தடவி கொண்டால் கையில் காரை ஒட்டாது.
சமையல் டிப்ஸ் 21
குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.
சமையல் டிப்ஸ் 22
சப்பாத்தி சாஃப்ட் ஆகா வருவதற்கு மாவு பிசையும் போது சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
சமையல் டிப்ஸ் 23
சாதம் வெள்ளையாகவும், உதிரியாகவும் வர, அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.
சமையல் டிப்ஸ் 24
கருவேப்பிலை நீண்ட நாள் வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, கருவேப்பிலையை தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை கெட்டு போகாது.
சமையல் டிப்ஸ் 25
தேங்காய் எடுக்க சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை அடுப்பில் வைத்து லேசாக வாட்டி எடுத்தால், தேங்காய் எளிதாக எடுக்க வரும்.
மேலும் அறிய: சரவணபவன் ஹோட்டல் சாம்பார்