முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்? Hair Growth Foods in Tamil
பெண்கள் அனைவரும் தங்களது முகத்தை எந்த அளவிற்கு அழகுபடுத்துகின்றனரோ, அதே அளவிற்கு தங்களது கூந்தலை அழகுபடுத்துவதிலும் ஆர்வம் கொண்டுள்ளனர். தற்போது உள்ள நவீன வாழ்க்கை முறையில் கூந்தல் பராமரிப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று.
இந்த இளைய தலைமுறையினர் கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதையே மறந்துவிட்டனர். கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த எண்ணெய்களை உபயோகிக்கின்றனர் இதனால் முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
முடி உதிர்வை தடுக்க | Mudi uthirvai thadukka
கடைகளில் விற்கும் எண்ணெய்களை வாங்கி உபயோகிக்காமல். இயற்கையான தேங்காய் எண்ணெய் மற்றும் இயற்கையாக தயாரித்த சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வதை தடுத்து முடி நீளமாக வளர்வதை பார்க்கமுடியும்.
ஆனால் இது மட்டும் முடி வளர்வதற்கு போதுமானதாக இருக்காது. இதனுடன் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் தான் சிறந்த பலன்களை அனுபவிக்க முடியும்.
மேலும் அறிய: குழந்தைக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்
முடி உதிர்வதை தடுக்கும் உணவுகள் | Food for Hair Growth and Thickness in Tamil
முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகள்
கூந்தல் உறுதியாகவும் நீளமாகவும் இருப்பதற்கு வைட்டமின் சத்துகள் மிகவும் முக்கியமானது. அதுமட்டுமல்லாது இரும்புச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் முடி உதிர்வதை தடுத்து முடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாக வளரவும் வழி வகை செய்யும்.
முடி உதிர்வுக்கு பல வகை காரணங்கள் இருந்தாலும், இரும்பு சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும். முடி கருமையாகவும் மற்றும் நீளமாகவும் வளர இரும்புசத்து இன்றியமையாதது.
ஒரு மனிதருக்கு 90,000 முதல் 1,50,000 வரை தலைமுடிகள் இருக்குமாம்.
ஒவ்வொரு முடியும் சராசரியாக 1௦௦௦ நாட்கள் வரை மட்டும் வளரும் அதன் பின் உதிர்ந்து விடும்.
முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர கீழ்க்காணும் உணவு வகைகளை உங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முடி அடர்த்தியாக வளர உணவுகள் | Indian Food for Healthy Hair
முட்டை (Egg for Hair Growth in Tamil)
முட்டையில் புரதம் மற்றும் பயோட்டின் அதிகம் நிறைந்துள்ளது. கூந்தலுக்கு புரதச்சத்து மிகவும் அவசியமான ஒன்று. இது முடி ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியமானது. இந்த ஊட்டச்சத்துக்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
மேலும் அறிய: Top 50 பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்
விதைகள் (Seeds for Hair Growth)
ஆளி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகளில் இரும்பு, வைட்டமின் ஈ, பி, கால்சியம், துத்தநாகம், புரதம், செலினியம், பொட்டாசியம், பயோட்டின், தாமிரம், மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட முடி வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. தோல் மற்றும் முடிக்கு ஆளி விதை நன்மைகள் ஏராளம்.
ஆளிவிதை (Flaxseed for Hair Growth)
ஆளிவிதையில் முடி ஆரோக்கியமாகவும், உச்சந்தலையை நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆளிவிதையில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு (food for healthy hair and skin) சிறந்தது.
பாதாம் (Almond Benefits for Hair in Tamil)
பாதாமில் மக்னீசியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பொடுகு மற்றும் முடி சேதத்தைத் தடுப்பதன் மூலம், முடியின் வேர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குகிறது, இது முடி இழைகளை வலிமையாக்குகிறது, இதனால் முடி உதிர்வதை குறைக்கிறது. இது ஆரோக்கியமான மற்றும் தேவையான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, முடி நரைப்பதை குறைக்கிறது.
கீரை (Vegetarian Food for Hair Growth and Thickness)
முடி வளர்ச்சிக்கு இரும்பு சத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த இரும்பு சத்துக்கள் பச்சை காய்கறிகளில் நிறைந்துள்ளது. உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்போது, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர்கள் மற்றும் நுண்ணறைகளுக்கு போதுமான அளவு கொண்டு செல்லப்படுவதில்லை, இது முடி வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் முடியின் வேர்களை பலவீனப்படுத்தும்.
மேலும் அறிய: 7 நாளில் உடல் எடை குறைய உணவு அட்டவணை
மீன் (Fatty Fish for Hair Growth)
சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஆரோக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளன. உங்கள் உடலால் இந்த ஆரோக்கியமான கொழுப்புகளை உருவாக்க முடியாது, எனவே நீங்கள் அவற்றை உணவிலிருந்து பெற வேண்டும். அவை உங்களை நோயிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல் முடி வளரவும், பளபளப்பாகவும் இருக்க மீனை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sweet Potato Benefits for Skin and Hair)
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. நமது உடலின் ஒவ்வொரு உயிரணுவும் சரியாக செயல்பட வைட்டமின் ஏ மிகவும் முக்கியம். முடி வளர்ச்சிக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் சர்க்கரைவள்ளி கிழங்கு கண்டிப்பாக இருக்கு வேண்டும். வறண்டு போய் உடையும் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை இது கொடுக்கிறது. இதிலுள்ள விட்டமின் ஏ இயற்கையாகவே தலையில் சீபம் எண்ணெய்யை தூண்டி கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்கிறது. இது சருமம் மற்றும் முடியை மென்மையாக வைக்கும்.
கேரட் (Carrot for Hair Growth in Tamil)
உடல் பருமனை குறைக்க கேரட் எந்த அளவுக்கு உதவுகிறதோ, அதே அளவிற்கு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. கேரட் கூந்தலுக்கு அடர்த்தியைக் கூட்டி முடியை வேகமாக வளரச் செய்கிறது.
கேரட்டை தொடர்ந்து சாப்பிடுவது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது, முடியை பளபளப்பாக மாற்றுகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, முடியை வலுப்படுத்துகிறது, மாசு போன்ற வெளிப்புற சேதங்களிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது மற்றும் முடி உடைவது மற்றும் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.